Published:Updated:

குடும்பத்தோடு வாருங்கள்!

குடும்பத்தோடு வாருங்கள்!

குடும்பத்தோடு வாருங்கள்!

குடும்பத்தோடு வாருங்கள்!

Published:Updated:

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘மண்ணின் வளமே மக்கள் வளம்’ என எழுதுவதோடு நின்றுவிடாமல், ஒவ்வொன்றையும் களத்திலும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிற ஆவலோடு, கடந்த எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து விவசாயப் பயிற்சிகளையும் பசுமை விகடன் அளித்து வருவது, நீங்கள் அனைவரும் அறிந்ததே!

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவின் பிற மாநிலங்கள்... ஏன், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களின் விவசாயத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது உங்கள் பசுமை விகடன். முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விளம்பரதாரர்கள் ஆகியோரின் தொடர் கோரிக்கைகளை அடுத்து, வேளாண் கண்காட்சியிலும் தற்போது கால்பதித்திருக்கிறது, பசுமை விகடன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மஞ்சள் நகரமான ஈரோடு, வ.உ.சி பூங்கா மைதானத்தில் செப்டம்பர் 25 தொடங்கி 28 வரை, ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2015’ என்ற பெயரில் மாபெரும் வேளாண் கண்காட்சி நடக்க இருக்கிறது. வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், விநியோகஸ்தர்கள், மாணவர்கள், விஞ்ஞானிகள், அரசுப் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்க இருக்கிறார்கள். பல மாதங்கள், பல மைல்கள் தூரம் பயணம் செய்து பெறவேண்டிய தகவல்கள், இந்தக் கண்காட்சி மூலம் ஓரே குடையின்கீழ் உங்களுக்குக் கிடைக்க உள்ளன.

இதுவரை இல்லாத வகையில், தினந்தோறும் பல்வேறு தலைப்புகளில் நடக்கவிருக்கும், விவசாயத்துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் அனுபவ விவசாயிகள் பங்குபெறும் பயனுள்ள கருத்தரங்கு உள்ளிட்ட நிகழ்வுகள், அளப்பரிய பயன்களை அள்ளித்தரும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதுநாள் வரை பசுமை விகடனின் முயற்சிகள் ஒவ்வொன்றுக்கும் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்திருக்கும் நீங்கள், தங்களின் குடும்ப நிகழ்ச்சி போல இந்தக் கண்காட்சியிலும் குடும்பத்தோடும், நட்புகளோடும் பங்கேற்க வேண்டிக் கொள்கிறோம். உங்களை கண்காட்சியில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

-ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism