உணவு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் பெருகி வரும் வேளையில், அதை ஈர்க்கும் வகையில் உணவுத் துறையில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதற்காகவே, சென்னை, நெசப்பாக்கம், வணிக வர்த்தக மையத்தில் ‘ஃபுட் ப்ரோ’ எனப்படும் உணவுத் தொழில்நுட்பம் குறித்த பன்னாட்டுக் கண்காட்சி, கடந்த ஆகஸ்ட் 28,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை ஏற்றுமதித் தரத்தில் பதப்படுத்துதல், ஐஸ்கிரீம் தயாரித்தல், முறுக்குப் பிழிதல், முட்டை மற்றும் பால் பதப்படுத்துதல், மண்ணில்லா விவசாயம் போன்ற தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றுக்கான கருவிகள், போன்றவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. அவற்றோடு, காபி மெஷின், குளிர் சாதன கருவிகள், நவீன பேக்கிங் மெஷின்கள் போன்றவையும் இடம்பெற்றிருந்தன. மொத்தத்தில் உணவு, சமையல் தொடர்பாக தொழில்முனைவோருக்கு நல்ல வழிகாட்டியாக அமைந்திருந்தது, இந்தக்கண்காட்சி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தா.நந்திதா
படங்கள்: ச.பிரஷாந்த்