Published:Updated:

நீங்கள் கேட்டவை: நல்ல மகசூல் தரும் சோளம்?

நீங்கள் கேட்டவை: நல்ல மகசூல் தரும் சோளம்?

நீங்கள் கேட்டவை: நல்ல மகசூல் தரும் சோளம்?

நீங்கள் கேட்டவை: நல்ல மகசூல் தரும் சோளம்?

Published:Updated:

‘‘கீழக்கரிசல் செம்மறியாடுகளின் சிறப்புத் தன்மை என்ன? எந்தப் பகுதியில் வளர்க்கலாம்?’’

நீங்கள் கேட்டவை: நல்ல மகசூல் தரும் சோளம்?

வி.சிவராமன், டி.கல்லுப்பட்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியரும், கீழக்கரிசல் ஆடுகள் பற்றி ஆராய்ச்சி செய்தவருமான டாக்டர். ரவிமுருகன் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை: நல்ல மகசூல் தரும் சோளம்?

‘‘கீழக்கரிசல் என்ற இந்த செம்மறியாடு ரகமானது மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்... ஆகிய தென்மாவட்டங்களைப் பூர்விகமாகக் கொண்டவை. தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் பகுதியில் இவை பரவலாக வளர்க்கப்படுகின்றன. உடல் முழுவதும் பழுப்பு நிறமாக இருந்தாலும், அடிவயிற்றுப் பகுதியில் கறுப்பு நிறம் காணப்படும். அதனால்தான் இதைக் கீழக்கரிசல் என்று அழைக்கிறார்கள். ஆடுகளைப் பொறுத்தவரை அதன் நிறமும் முக்கியமானது. இந்த ரக ஆடுகள் கடுமையான வெயில் அடித்தால்கூட, அசராமல் இருக்கும். வறண்ட சூழ்நிலையிலும் தாக்குப் பிடித்து வாழும். புல், பூண்டுகளை உண்டேகூட பல நாட்கள் தாக்குப் பிடிக்கும். மற்ற இன ஆடுகளை நீல நாக்கு நோய் தாக்கினாலும், கீழக்கரிசல் ரக ஆடுகள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் இருக்கும்.

பார்ப்பதற்கு மான் போல தோற்றம் கொண்ட இவை, சுமார் ஆறு அடி உயரத்தைக் கூட சுலபமாகத் தாண்டும். கீழக்கரிசல் ஆடுகள் தன் குட்டிகளுக்கு மட்டுமல்ல, பிற ஆட்டுக் குட்டிகளுக்கும் பால் கொடுக்கும் குணம் உள்ளவை.  எங்கள் ஆராய்ச்சியில் கரிசல் மண் தன்மை கொண்ட இடங்களில், இந்த இன ஆடுகள் நன்றாக  வளர்கின்றன. இதற்கு மூலக்காரணம், இந்த மண்ணில் விளையும் புற்களை, இந்த ரக ஆடுகள் எளிதாக செரிமானம் செய்துவிடுகின்றன. இதனால், ஆடுகளின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டங்களில் உள்ள செம்மறியாட்டு இனங்களைக் கணக்கு எடுத்தோம். அப்போது கீழக்கரிசல் ரகத்தில் நானூறு எண்ணிக்கை கூட இல்லை. இதையடுத்து, எங்கள் பல்கலைக்கழகமும் தேசியக் கால்நடை மரபு வள அமைப்பும் இணைந்து நிதிப் பங்களிப்பு செய்ததுடன், இந்த இனத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. கீழக்கரிசல் கிடாவை இன விருத்திக்காக மந்தையாளர்களுக்கு இலவசமாகவும் வழங்கி வந்தோம். தற்போது 20 கிலோ எடை கொண்ட பெட்டை ஆடு ஒன்று 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.’’

நீங்கள் கேட்டவை: நல்ல மகசூல் தரும் சோளம்?

‘‘நாட்டுக்கோழிகள் வளர்த்து வருகிறோம். கோழிகளுக்குக் கரையானைக் கொடுக்கலாம் என்கிறார்கள். கரையான் வளர்ப்பு பற்றி சொல்லுங்கள்?’’

எம்.சுதாகரி, மரக்காணம்.

காஞ்சிபுரம் மாவட்ட முன்னோடி இயற்கை விவசாயி சுப்பு பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை: நல்ல மகசூல் தரும் சோளம்?

“நாட்டுக் கோழிகள் வளர்ப்பவர்களின் தீவனச் செலவைக் குறைக்கக் கூடியது கரையான் வளர்ப்பு. இயற்கையாக உள்ள கரையான் புற்றுக்கள் நாட்டுக் கோழிகளின் கண்களுக்குத் தென்பட்டுவிட்டால், கொண்டாட்டமாகிவிடும். கோழிகளுக்கு அற்புதமான புரதச் சத்துக்களைக் கொடுக்கக்கூடியது கரையான். கரையானைத் தின்னும் கோழிகள் குண்டு, குண்டாக வளரும். காய்ந்த, மட்கிய பொருட்களில்தான் கரையான் வாழும். சில தாய்க்கோழிகள் குஞ்சு பொரித்தவுடன் தனது பரிவாரங்களுடன் மட்கியப் பொருட்களைத் தேடி ஓடுவதைக் காணலாம். இளங்குஞ்சுகளுக்கு கரையான் சுவையான உணவு. செற்கைத் தீவனங்களால் கொடுக்க முடியாத முக்கிய சத்துக்களை இந்தக் கரையான்கள் கொடுக்கின்றன என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

கரையானில் இவ்வளவு நன்மை இருப்பதால், அதை முறையாக வளர்க்கும் நுட்பமும் விவசாயிகளால் பின்பற்றப்படுகிறது. கரையான் வளர்க்க உயரமான இடம் ஏற்றது. உதாரணமாக, வயலில் உயரமாக உள்ள களத்துமேடு, வைக்கோல் போர் போன்ற இடங்கள் கரையான் வளர்க்க ஏற்றவை. கரையான் வளர்ப்புப் பணிகளைத் தொடங்க மாலைநேரம் ஏற்றது. இரண்டு அடி இடத்தைத் தேர்வு செய்துகொள்ளவும். இங்கு புல், பூண்டுகள் இருந்தால், மண்வெட்டியால் சுத்தம் செய்யவும். பின்பு, அந்த இடத்தில் மண் குளிரும்படி நீர் தெளிக்கவும். கரையான்களைக் கவர்ந்திழுக்க காய்ந்த மரம், மட்டைகள், கிழிந்துபோன துணி, மட்கிப்போன வைக்கோல் போன்றவற்றை கொஞ்சம், கொஞ்சம் எடுத்து அந்த நிலத்தின் மீது போடவும். பின்பு அவற்றின் மீதும் நீர் தெளிக்கவும். இந்தப் பொருட்கள் மீது வெளிச்சம் படாதபடி பழைய மண்பானைகளைக் கவிழ்த்து வைக்கவும். கொஞ்சம் உடைந்த பானைகள் என்றாலும் கூட, அவற்றைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் கேட்டவை: நல்ல மகசூல் தரும் சோளம்?

அடுத்த நாள் மாலையில், அதாவது 24 மணி நேரத்தில் அங்கு கரையான்கள் குடியேறி இருக்கும். பானைகளை எடுத்து விட்டால் போதும்,  கரையான்களைத் தின்ன கோழிகள் அங்கு ஓடும். தொடர்ந்து கரையான் வேண்டும் என்றால், கோழிகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி இந்த முறையை விரிவுபடுத்திக் கொள்ளலாம். கரையான்களைத் தின்று வளரும், கோழிகளின் இறைச்சியானது தனித்துவச் சுவையுடன் இருக்கும்.”

தொடர்புக்கு, செல்போன்: 96006-12649.

‘‘சோளம் சாகுபடி செய்ய விரும்புகிறோம். எந்த ரகம் நல்ல மகசூல் கொடுக்கும்?’

ஆர்.எம்.நடராஜன், திண்டல்.

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும், சிறுதானியங்கள் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஆர்.ரவிகேசவன் பதில் சொல்கிறார்.

‘’இந்தியாவின் சோள உற்பத்தியில், தமிழ்நாடு ஆறாமிடம் வகிக்கிறது. சோளம், தீவனம், தீவனப்பயிர் (தட்டை) மற்றும் தானியமாகப் பயன்படுத்தப்படுகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகியவை சோளம் பயிரிடும் முக்கிய மாநிலங்களாகும். தமிழகத்தில் நாமக்கல், திண்டுக்கல், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், விருதுநகர் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் மொத்த சோள சாகுபடிப் பரப்பில் 76 சதவிகிதம் பங்களிக்கின்றன. தமிழ்நாட்டில் சோளம், ஆடிப் பட்டம் (ஜூலை - செப்டம்பர்), புரட்டாசிப் பட்டம் (அக்டோபர் - டிசம்பர்) மற்றும் கோடை காலங்களில் பயிரிடப்படுகிறது. கோ- 30 என்ற ரகம் தீவனத்துக்கும், உணவுக்கும் ஏற்றது. கோ-30, பிற ரக சோளங்களைக் காட்டிலும் 5 முதல் 10 சதவிகிதம் வரை மகசூல் அதிகரிப்பதால், விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

நீங்கள் கேட்டவை: நல்ல மகசூல் தரும் சோளம்?

சோள சாகுபடியில் முக்கியமான இரண்டு கட்டங்கள் உள்ளன. அதாவது, பூ வைக்கும் போதும், கதிரில் பால் பிடிக்கும் போதும் மழை வந்துவிடக்கூடாது. இதைக் கணித்துச் சாகுபடி செய்வது நல்லது. உதாரணத்துக்கு விதைப்பு செய்த 50-ம் நாள் பூ வைக்கும். 90-ம் நாள் கதிர்களில் பால் பிடிக்கும். இந்த நாட்களில் மழை பெய்துவிட்டால், கதிரில் பூஞ்சணம் பிடித்துவிடும். விளைச்சலும் நன்றாக இருக்காது. கோவில்பட்டியில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் கே-12 என்ற ரகத்தை  உருவாக்கியுள்ளார்கள். இந்த ரகம் மானாவாரி சாகுபடிக்கும், கரிசல் மண் வகைக்கும் ஏற்றது. விரைவில் விவசாயிகளுக்கு, இந்த ரக விதைகள் விற்பனைக்குக் கிடைக்கும். தானியசோள ரகத்தின் தற்போதைய பண்ணை விலை `21 முதல் `23 வரை திருப்பூர் சந்தையில் விற்கப்படுகிறது.’’

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், சிறுதானியங்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003.

தொலைபேசி: 0422-2450507.

புறா பாண்டி

படங்கள்: தி.விஜய், கே.குணசீலன், சொ.பாலசுப்பிரமணியன்

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism