Published:Updated:

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பசுந்தீவன உற்பத்தி!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில், அக்டோபர் 13-ம் தேதி ‘மண் இல்லாமல் நீர் மூலம் பசுந்தீவன உற்பத்தி’ 14-ம் தேதி ‘ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்’ 26 மற்றும் 27-ம் தேதி ‘ஊறுகாய் தயாரிப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044-27452371

சிறுதானிய சமையல்!

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை ‘பெல்’(BHEL) மனமகிழ் மன்றத்தில், அக்டோபர் 18-ம் தேதி,  ‘இல்லத்தரசிகளே முதல் மருத்துவர்கள்’ என்ற கருத்தரங்கு நடைபெற உள்ளது. முன்னோடி இயற்கை விவசாயி கோ.சித்தர் உரையாற்ற உள்ளார். பெண்களுக்கு சிறுதானிய சமையல் போட்டியும் நடைபெறும். அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.

ஏற்பாடு: மனமகிழ் மன்றம் மற்றும் இயற்கையின் நண்பர்கள் அமைப்பு.

தொடர்புக்கு, செல்போன்: 94869-26307, 94428-07472.

தண்டோரா

வெள்ளாடு வளர்ப்பு!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், அக்டோபர் 17-ம் தேதி, ‘வன மரங்கள் சாகுபடி’ 20-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சி இலவசம்.

தொடர்புக்கு, செல்போன்: 77088-20505, 94885-75716.

ஊக்கத்தொகையுடன் வண்ண மீன் வளர்ப்பு!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், ‘வண்ண மீன் வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கத் தொழில்நுட்பங்கள்’ பயிற்சி நடைபெற உள்ளது. வகுப்பறைப் பயிற்சி 7 நாட்களும், செய்முறை வகுப்புகள் 18 நாட்களும் நடைபெறும். வகுப்பறைப் பயிற்சிக்கு தினமும் ரூ 100-ம், செய்முறை விளக்க வகுப்புக்கு தினமும் ரூ 200-ம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பயிற்சியின் முடிவில் பயிற்சிக் கையேடு, சான்றிதழ் மற்றும் பயிற்சிப் பொருட்கள் வழங்கப்படும். முன்பதிவு அவசியம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பத்தை கடிதம் மூலமாகவும் அனுப்பலாம்.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், மீன் வள விரிவாக்கத் துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி-601204.

தொலைபேசி, 044-27971557 செல்போன்: 90037-82832

கட்டணப் பயிற்சி

உயிராற்றல் வேளாண்மை!

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் கே.பி.ஆர் இயற்கைப் பண்ணையில் அக்டோபர் 17-ம் தேதி, ‘உயர் விளைச்சல் தரும் உயிராற்றல் வேளாண்மை’ பயிற்சி நடைபெற உள்ளது. ‘ஊட்டி’ மகேஷ் பயிற்சி அளிக்க உள்ளார். கட்டணம் `150 மட்டும். மதிய உணவு, காலை, மாலை தேநீர் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்.

ஏற்பாடு: திருநெல் வாழ்வியல் மையம் மற்றும் கே.பி.ஆர் இயற்கைப் பண்ணை

தொடர்புக்கு, செல்போன்: 81229-99735, 98658-75896.

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism