Published:Updated:

பொறுப்புடன் நடைபோடுவோம்!

பொறுப்புடன் நடைபோடுவோம்!

பொறுப்புடன் நடைபோடுவோம்!

பொறுப்புடன் நடைபோடுவோம்!

Published:Updated:

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

ஞ்சள் மாநகர் ஈரோட்டில், கடந்த செப்டம்பர் 25 முதல் 28 வரை நடைபெற்ற, ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2015 வேளாண் கண்காட்சி’யை வெற்றிபெற வைத்த விவசாயிகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள், இருபதுக்கும் மேற்பட்ட பேச்சாளர்கள், தினமும் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்த விவசாயிகள், படைபடையாகத் திரண்டு வந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மூலம், வ.உ.சி மைதானமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது என்றே சொல்ல வேண்டும்! தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா விவசாயிகளும்கூட வந்திருந்தது தனிச்சிறப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுபவ அறிவும், அறிவியல் அறிவும் கைகோக்கும் விதமாக நான்கு நாட்களும், நடைபெற்ற கருத்தரங்குகளில் விவசாயிகளும், விஞ்ஞானிகளும் ஒருமித்தக் குரலில் விஷயங்களை எடுத்து வைத்தது... நாள் முழுக்க குழுமியிருந்த விவசாயிகளுக்கு, தாங்கள் செய்து வரும் பணிகளில் மேலும் பற்றினைப் பெருக வைத்தது என்றே சொல்ல வேண்டும்.

‘பசுமை விகடன், நடத்தும் நிகழ்ச்சி என்றால், நிச்சயம் விவசாயிகளுக்குப் பயனுள்ள விஷயங்கள் இருக்கும். அந்த நம்பிக்கையில்தான் வந்தோம். எதிர்பார்த்ததைவிட, பயனுள்ள பல தகவல்கள் கிடைத்தன. இன்னும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை நிறைய நடத்துங்கள்.’’

‘‘அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை ‘பசுமை விகடன்’ சிறப்பாக செய்துவருகிறது.’’

விவசாயிகள் பலரும் இதுபோன்ற கருத்துக்களை எங்கள் குழுவினரிடம் பதிந்து சென்றது, எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது. அதேநேரம், ‘பசுமை விகடன்’ மீது விவசாயிகள் வைத்திருக்கும் இந்த நம்பிக்கை... நாம் இன்னும் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும்’ என்பதையும் எங்களுக்கு அழுத்தமாக உணர்த்தத் தவறவில்லை.

பொறுப்புகளைச் சுமந்தபடி தொடர்ந்து நடைபோடுவோம்!

-ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism