நாட்டு நடப்பு
Published:Updated:

பருப்பு விலையேற்றம்... காரணம் என்ன ?

காசி.வேம்பையன்

கோவணாண்டி முதல் கோடீஸ்வரன் வரை ருசித்து சாப்பிடும் சாம்பாரில் முக்கியமாக இடம் பிடிப்பது, துவரம் பருப்பு. சமீப நாட்களாக வரலாறு காணாத விலையில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது, இந்தப் பருப்பு. ஒரு கிலோ துவரம்பருப்பின் விலை 250 ரூபாயைத் தொட்டு விட்டாலும், வழக்கம் போல இந்த விலையேற்றத்தால் விவசாயிகளுக்கு எந்த லாபமும் இல்லை. 

ஆன்லைன் வர்த்தகம், வியாபாரிகளின் பதுக்கல் காரணமாக விலையேற்றம் நிகழ்ந்துள்ளது என பல்வேறு விவாதங்கள் நாடெங்கும் நடந்து வரும் நிலையில்... பருப்பு விலை உயர்வுக்கான காரணங்கள் குறித்து நம்மிடம் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையத்தின் முன்னாள் பேராசிரியரும், சந்தை தொழில்நுட்ப வல்லுநருமான முனைவர். ரவீந்திரன்.

பருப்பு விலையேற்றம்... காரணம் என்ன ?

'இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பருப்பு வகைகள் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. ஆகையால், பருப்புக்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது. இந்திய மக்களின் பயன்பாட்டுக்கு ஓர் ஆண்டுக்கு 220 லட்சம் டன் பருப்பு வகைகள் தேவை. ஆனால், நம் நாட்டில் 180 லட்சம் டன் அளவுக்கு மட்டும்தான்  உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால், தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

பருப்பு விலையேற்றம்... காரணம் என்ன ?

இந்தியாவைப் பொறுத்தவரை பருப்பு உற்பத்தியில்,  மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரேதேசம், ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்கள்தான் முக்கியத்துவம் வகிக்கின்றன. 99 சதவிகிதம் பருப்பு வகைகளின்

பருப்பு விலையேற்றம்... காரணம் என்ன ?

உற்பத்தி, மானாவாரி நிலங்களில்தான் நடக்கிறது. இந்நிலையில், பருவம் தவறிப் பெய்த தென்மேற்குப் பருவமழை, புயல் காரணமாக வட மாநிலங்களில் இந்த ஆண்டு பருப்பு உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்களின் கூற்றுப்படி இந்த ஆண்டு 20 சதவிகிதம் அளவுக்குப் பருப்பு உற்பத்தி குறைந்துள்ளது' என்ற ரவீந்திரன் நிறைவாக,

'தற்சமயம் நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் பருப்புக்கான தேவை அதிகமாக உள்ளது. மத்திய அரசு துரிதமாகச் செயல்பட்டு தேவையான அளவுக்குப் பருப்பை இறக்குமதி செய்தால், விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்'' என்றார்.