Published:Updated:

தண்டோரா

பசுமைக் குழு

தண்டோரா

பசுமைக் குழு

Published:Updated:

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கறவை மாடு வளர்ப்பு!

சேலம் மாவட்டம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், டிசம்பர் 3-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408.

மாடித்தோட்டம்!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், நவம்பர் 30-ம் தேதி, ‘மாடித்தோட்ட பயிற்சி’ நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626.

தண்டோரா

கொடிவகை காய்கறிகள் சாகுபடி!

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் டிசம்பர் 7-ம் தேதி ‘நிலக்கடலை, எள் சாகுபடி’ மற்றும் விதை உற்பத்தித் தொழில்நுட்பங்கள், 8-ம் தேதி ‘கறவைமாடு வளர்ப்பில் லாபம் பெற வருடத்துக்கொரு கன்று உற்பத்தி’, 14-ம் தேதி கொடிவகை காய்கறிகள் (பாகல், பீர்க்கன், புடல், சுரை, வெள்ளரி, தர்பூசணி, பூசணி) சாகுபடித் தொழில்நுட்பங்கள், 15-ம் தேதி ‘முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்காக ஜப்பானியக் காடை வளர்ப்பு’, 28-ம் தேதி ‘மண்வளமே பயிர்களின் உயிர் நாடி’, 29-ம் தேதி ‘நன்னீரில் பசிபிக் வெள்ளை இறால் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் நிலையம், நாமக்கல்-637002.

தொலைபேசி: 04286-266345

ஒருங்கிணைந்த பண்ணையம்!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் டிசம்பர் 3-4 தேதிகளில், ‘பழத்தோட்ட பராமரிப்பு மற்றும் மதிப்பூட்டப்பட்ட பழப்பொருட்கள் தயாரித்தல்’, 9-10 தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’, 14-15 தேதிகளில் ‘மண்வள மேம்பாடு மற்றும் களர், உவர் நில மேலாண்மை முறைகள்’, ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.

தொலைபேசி: 044-27452371

கட்டணப் பயிற்சிகள்

காய்கறி சாகுபடி!

சேலம் மாவட்டம், தலைவாசல், மும்முடி அரிமா மணி மண்டபத்தில், டிசம்பர் 19-ம் தேதி, ‘கீரை-காய்கறிகள் சாகுபடி’ குறித்த கருத்தரங்கு நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும். நுழைவுக்கட்டணம் `50.

தொடர்புக்கு, செல்போன்: 78118-97510, 97903-27890.

இயற்கை உரம் தயாரிப்பு!

தண்டோரா

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தா கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், டிசம்பர் 12-ம் தேதி, ‘வியாபார நோக்கில் இயற்கை உரம் தயாரித்தல்’ 19-ம் தேதி, ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு பயிற்சிக்கும் கட்டணம் `100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652-246296.