Published:Updated:

மழைக் காலம்...மண் அரிப்பு கவனம்..!

ஜி.பழனிச்சாமி

மழைக் காலம்...மண் அரிப்பு கவனம்..!

ஜி.பழனிச்சாமி

Published:Updated:

ப்போது பெய்வது வடகிழக்குப் பருவமழையா, காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் பெய்யும் மழையா... என பலரும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது ஒருபுறமிருக்க,  விடாது பெய்த மழை, தமிழகத்தின் பல பகுதிகளில் ஏரி, குளங்களை நிரப்பி அனைவரையும் குதூகலப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, தென்னை மற்றும் மரப்பயிர்கள் போன்ற நீண்ட கால பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பருவமழை காலத்தில்தான் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணிகளையும் துவக்குவார்கள். இந்நிலையில், மழைக்கால மரங்கள் பராமரிப்பு மற்றும் மண்ணுக்கேற்ற மரத்தேர்வு போன்றவற்றில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கே விளக்குகிறார்கள், துறை சார்ந்த வல்லுநர்கள்.

மழைக் காலம்...மண் அரிப்பு கவனம்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் கொண்டேகவுண்டன்பாளையம் கிராமத்தில், 10 ஏக்கர் நிலத்தில் பல வகை மரங்களை வளர்த்து வேளாண் காடுகளை உருவாக்கி வருகிறார், எஸ்.நந்தக்குமார். அவரிடம் பேசியபோது,  “ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நன்றாக பெய்யக்கூடிய காலம். மரப்பயிர்கள், ‘தளதள’ என்று வளர தோதான சூழலும் இதுதான். மழைக்காலங்களில் முக்கியமாக நிலத்தைப் பாதிக்கும் விஷயம் மண் அரிப்பு. பெய்யும் மழை நீர் வெள்ளமாய் ஓடி நிலத்தில் உள்ள மேல் மண்ணை அடித்துச் சென்று விடும். இதைத் தடுக்க வேண்டியது மிக அவசியம். இல்லையெனில், நிலத்தின் மண் தொடர்ந்து அடித்துச் செல்லப்பட்டு ஒரு கட்டத்தில் நிலம் பள்ளமாகி விடும். மரங்களின் வேர்கள் அரிக்கப்பட்டு அவை அடியோடு வீழ்ந்து விடும் அபாயமும் உண்டு. நிலங்களின் குறுக்கே சிறு சிறு தடுப்பு வரப்புக்கள் அமைத்து அதில் வெட்டி வேரை நடவு செய்தால், மண் அரிப்பு தடுக்கப்படும். வரப்புகள் அமைப்பதால், மழைநீர் வெளியேறாமல் நிலத்திலேயே தேங்கி விடுவதால் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். மழைநீர் தேங்கும்போது... குறிப்பாக தேக்கு மரங்கள் உள்ள நிலத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மழைக் காலம்...மண் அரிப்பு கவனம்..!

மழைக்கு முன்னால் கவாத்து, உரம்!

மழை பெய்யும் சமயத்தில் உரம் இடக்கூடாது. பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக அதாவது புரட்டாசி மாதமே உரமிட்டு விடுவது நல்லது. உயிருரங்களை மட்டுமே கொடுத்தால் போதும்.

100 கிராம் ரைசோபியம் மற்றும் 100 கிராம் சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு மரத்துக்கும் கொடுக்க வேண்டும். வாய்ப்பிருந்தால், மரங்கள் உள்ள நிலத்தில் அடிக்கடி செம்மறி ஆடுகளையும், மாடுகளையும் மேய விடலாம். இதனால், அவற்றின் கழிவுகள் மட்கி மண்ணை வளமாக்கும். அதேபோல, மழை தொடங்குவதற்கு முன்னதாகவே மரங்களுக்கு கவாத்து செய்வதும்

மழைக் காலம்...மண் அரிப்பு கவனம்..!

அவசியம். கவாத்து செய்த இலை, தழைகளை மரங்களைச் சுற்றிலும் மூடாக்காகப் போட்டு விட்டால், மழைக்காலத்தில் அவை மட்கி மண்ணுக்கு உரமாகி விடும்” என்றார்.  

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு வனம் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வனவியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் பார்த்திபன், மண்ணுக்கேற்ற மரங்களைப் பற்றி சில விஷயங்களைச் சொன்னார். “புதிய மரக்கன்றுகளை நடவு செய்ய மழைக்காலம் ஏற்றது என்றாலும், மண்ணுக்கு ஏற்ற மரங்களைத்தான் நடவு செய்ய வேண்டும். கரிசல் மண்ணில் நெல்லி, புளி, புங்கன், நாவல், சவுக்கு, வேம்பு, வாகை உள்ளிட்ட மரங்கள் சிறப்பாக வளரும். வண்டல் மண்ணில் தேக்கு, மூங்கில், கருவேல், சவண்டல், புளி உள்ளிட்ட மரங்கள் மிகச்சிறப்பாக வளரும். களர் மண்ணில் குடை வேல், வேம்பு, புளி, பூவரசன், வாகை போன்ற மரங்கள் நன்றாக வளரும். உவர் மண்ணில் சவுக்கு, இலவு, புளி, வேம்பு ஆகிய மரங்கள் செழிப்பாக வளரும். அமில நிலத்தில் குமிழ், சில்வர் ஓக் வகை மரங்களை வளர்க்கலாம். சதுப்பு நிலத்தில் பெரு மருது, நீர் மருது, நாவல், இலுப்பை, புங்கன் ஆகியவை சிறப்பாக வளரும். சுண்ணாம்புப் படிவ மண்ணில் வேம்பு, புளி, புங்கன், வெள்வேல் ஆகியவை நன்றாக வளரும். களிமண்ணில் வாகை, புளி, புங்கன், சவண்டல்,நெல்லி, கருவேல், மருது ஆகிய மரங்கள் நன்றாக வளரும்” என்றார்.

தொடர்புக்கு,
முனைவர் கே.டி.பார்த்திபன்,
தொலைபேசி: 04254-222010.
எஸ்.நந்தக்குமார்,
செல்போன்: 83443-30420.