Published:Updated:

இன்னும் எத்தனை காலத்துக்கு?!

இன்னும் எத்தனை காலத்துக்கு?!

இன்னும் எத்தனை காலத்துக்கு?!

இன்னும் எத்தனை காலத்துக்கு?!

Published:Updated:

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘தண்ணி ஓடவேண்டிய ஆத்துல நீங்க மணல் லாரிய ஓட்டுனா... லாரி ஓடவேண்டிய ரோட்டுல தண்ணி ஓடும்!’

‘நாங்க ஆட்சிக்கு வந்தால், வீடு தேடி தண்ணீர் வரும்னு சொன்னீங்களே... அது, இதுதானா?’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘எனக்கு எதிராகச் செய்யும் ஒவ்வொரு செயலும், பேரழிவையே உண்டாக்கும்’ இப்படிக்கு இயற்கை.

கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை போன்ற மாவட்டங்கள் சமீபத்திய மழையில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, சமூக ஊடகங்களிலும், வாட்ஸ்அப்பிலும் இதுபோல கிண்டல், கேலியுடன் நூற்றுக்கணக்கான வாசகங்கள் பகிரப்பட்டன. இவை ஒவ்வொன்றுமே வேதனையின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தவர்களிடம் இருந்து, வெடித்து வெளிவந்த திருவாசகங்களே!

கடந்த சில ஆண்டுகளாக வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த, தமிழகத்தில் மழைக் கொட்டித் தீர்த்துவிட்டது. ஆனால், இயற்கை வழங்கிய அரிய கொடையைச் சேமித்து வைக்காமல் கைகள் பிசைந்து நிற்கிறோம்.

குடிப்பதற்கு ஓர் ஊரணி, குளிப்பதற்கு ஒரு குளம், பயிர் பாசனத்துக்கு ஓர் ஏரி, துணி துவைப்பதற்கு குட்டை, கசிவுநீர் செல்ல கால்வாய், வயல்களுக்கு வாய்க்கால்... என பல்வேறு நீரியல் அமைப்புகள் ஒவ்வோர் ஊருக்கும் இருந்தன. இவற்றையெல்லாம் அழித்தொழித்துவிட்டு, ‘மழை வெள்ளம் ஊருக்குள், வீட்டுக்குள் வந்துவிட்டது’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம்.

‘இனியாவது போர்க்கால அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இயற்கையைக் காக்க வேண்டும்; நீர் நிலைகளை மீட்க வேண்டும்’ என்று, இத்தகைய கொடுமைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் அதே அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கங்களிடம் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் சம்பிரதாயமாகச் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோமோ?!

-ஆசிரியர்