Published:Updated:

தண்டோரா

பசுமைக் குழு

தண்டோரா

பசுமைக் குழு

Published:Updated:

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காளான் வளர்ப்பு!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், மைராடா வேளாண் அறிவியல் மையத்தில் டிசம்பர் 22-ம் தேதி ‘காளான்  வளர்ப்பு’, 23-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’, 29-ம் தேதி ‘இயற்கைப் பண்ணையம்’, 30-ம் தேதி ‘மாடித்தோட்ட பயிற்சி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, 272, பெருமாள் நகர்,புதுவல்லியம்பாளையம் சாலை, கலிங்கியம் அஞ்சல், கோபிச்செட்டிபாளையம்,ஈரோடு மாவட்டம்-638453, தொலைபேசி: 04285-241626

தண்டோரா

பஞ்சகவ்யா தயாரித்தல்!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் டிசம்பர் 18-ம் தேதி, ‘தேனீ வளர்ப்பு’, 21-ம் தேதி மண்புழு உரம், அசோலா மற்றும் பஞ்சகவ்யா தயாரித்தல், 29-ம் தேதி ‘பரண் மேல் ஆடு வளர்ப்பு’, 30-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, உழவர் பயிற்சி நிலையம்,பிள்ளையார்ப்பட்டி, சிவகங்கை மாவட்டம்.செல்போன்: 77088-20505, 94885-75716

இறால் வளர்ப்பு!

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் டிசம்பர் 15-ம் தேதி ‘முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்காக ஜப்பானியக் காடை வளர்ப்பு’, 28-ம் தேதி ‘மண்வளமே பயிர்களின் உயிர்நாடி’, 29-ம் தேதி ‘நன்னீரில், பசிபிக் வெள்ளை இறால் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர்வேளாண் அறிவியல் நிலையம், நாமக்கல்-637002,தொலைபேசி: 04286-266345

தண்டோரா

நாட்டுக்கோழி!

மதுரை, திருப்பரங்குன்றம், கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிசம்பர் 22-ம் தேதி ‘கறவைமாடு வளர்ப்பு’; 24-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தியாகராஜர் பொறியியல் கல்லூரிச் சாலை,திருப்பரங்குன்றம், மதுரை-625005, தொலைபேசி: 0452-2483903.

தண்டோரா

கட்டணப் பயிற்சி

தேனீ வளர்ப்பு!

அரியலூர், கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் டிசம்பர் 15-ம் தேதி, ‘காளான் வளர்ப்பு’, 23-ம் தேதி, ‘தேனீ வளர்ப்பு பயிற்சி’யும் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர்
கிரீடு வேளாண் அறிவியல் நிலையம், சோழன்மாதேவி அஞ்சல்,
உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம்.
தொலைபேசி: 04331-290335, செல்போன்: 97512-80089

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism