Published:Updated:

அடி மேல் அடி... விவசாயிகளுக்குக் கை கொடுக்குமா அரசு?!

காசி வேம்பையன், படங்கள்: எஸ்.தேவராஜன்

அடி மேல் அடி... விவசாயிகளுக்குக் கை கொடுக்குமா அரசு?!

காசி வேம்பையன், படங்கள்: எஸ்.தேவராஜன்

Published:Updated:

ரு மாத காலமாகக் கொட்டித் தீர்க்கும் மழையில்... கடலூர் மாவட்டம், வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமாகி, விவசாயிகள் கண்ணீரில் தத்தளிக்கின்றனர்.

இதைப்பற்றி நம்மிடம் பேசிய வீராணம் ஏரிப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன், “கடலூர் மாவட்டத்துல காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி தாலூகாவுல மட்டும் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல பாதிச்சிருக்கு. நெல் பயிர்களில் பெரும் பகுதி கதிர் பூ விடுற சமயம். இப்ப தண்ணீர்ல மூழ்கி நிற்கிறதால உரம் போட்ட செலவை ஈடுகட்டுற அளவுக்கு நெல் கிடைச்சாலே பெரிய விஷயம்.

அடி மேல் அடி... விவசாயிகளுக்குக் கை கொடுக்குமா அரசு?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழக அரசு சார்புல ஒரு ஏக்கருக்கு நெல் பயிர் பாதிச்சா 5 ஆயிரத்து 400 ரூபாய் (ஹெக்டேருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய்) நிவாரணம்னு நிர்ணயம் செய்திருக்கிறாங்க. எதன் அடிப்படையில நிர்ணயம் செய்திருக்கிறாங்கனு தெரியல.

ஒரு ஏக்கர் நிலத்துல நடவுல இருந்து அறுவடை வரைக்கும் 25 ஆயிரத்துல இருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகுது. இந்த நிலையில இவங்க கொடுக்கிற நிவாரணத் தொகையை வெச்சு உரம் வாங்கின கடனைக்கூட அடைக்க முடியாது.

அரசாங்கம், ‘கடலூர் மாவட்டத்துல விவசாயம் நடக்கணும், விவசாயிங்க உயிரோட இருக்கணும்’னு நினைச்சா... வங்கிகள்ல வாங்கி இருக்கிற கடனை முழுமையா தள்ளுபடி செய்யணும். அடுத்த போகம் சாகுபடி செய்யத் தேவையான அளவுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கொடுக்கணும்” என்றார்.

அடி மேல் அடி... விவசாயிகளுக்குக் கை கொடுக்குமா அரசு?!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான (சி.பி.எம்) கே.பாலகிருஷ்ணன், “அதிகமான தொழிலாளிகள், தற்போது வேலை இல்லாமல் இருக்கின்றனர்.

100 நாள் வேலையை உடனடியாகக் கொடுத்தால், அவர்களுக்குச் செலவுக்கான பணம் கிடைப்பதுடன், 50 சதவிகித வேலையாவது நடக்கும்.

அடி மேல் அடி... விவசாயிகளுக்குக் கை கொடுக்குமா அரசு?!

மேலும், பயிர்க்காப்பீடு செலுத்துவதற்கு டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால், அரசாங்கம் உடனடியாக விவசாயிகளின் பங்களிப்பான 2 சதவிகித தொகையைப் பிரீமியமாகச் செலுத்தினால், மீதம் 98 சதவிகிதத் தொகையுடன் இழப்பீடு கிடைக்க வாய்ப்புண்டு” என்றார்.

என்ன செய்யப்போகிறது அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism