கடந்த இரண்டு ஆண்டுகளில் அரவை செய்த கரும்புக்கு, தனியார் சர்க்கரை ஆலைகள் பல நூறு கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பாக்கி வைத்திருக்கும் நிலையில்... 2015-2016-ம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்துக்கு ஒரு டன் கரும்புக்கு 2 ஆயிரத்து 850 ரூபாய் (வாகன வாடகை உட்பட) என மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருப்பதில், விவசாயிகள் கொந்தளித்துக் கிடக்கிறார்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ரவீந்திரன், “நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள கரும்பு விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் கரும்பு விலை மூலமாகப் பரிகாரம் செய்யும் என எதிர்பார்த்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும், ‘விவசாயச் செலவினங்கள் மற்றும் விலை நிர்ணய ஆணையம்’, கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் கரும்பு உற்பத்தி செய்வதற்கு சராசரியாக 224 ரூபாய் செலவு எனக் கணக்கிட்டுள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால் ஒரு டன் கரும்பு உற்பத்திக்கான செலவு, 2 ஆயிரத்து 240 ரூபாய். ஆனால், உற்பத்திக்கான செலவைவிட குறைவான தொகையை... அதாவது ஒரு டன் கரும்புக்கு 2 ஆயிரத்து 200 ரூபாய் மற்றும் வாகன வாடகையாக 100 ரூபாய் என அறிவித்தது, மத்திய அரசு.

மத்திய அரசு, அறிவித்து பல மாதங்கள் கடந்த பிறகும், மாநில அரசு விலை அறிவிக்கவில்லை. இதற்குள், ஆகஸ்ட் மாதம் அரவைப் பருவமே துவங்கி விட்டது. இந்த நிலையில், ஜனவரி முதல் வாரத்தில்தான் முதல்வர் ஜெயலலிதா, ‘மத்திய அரசு அறிவித்துள்ள 2 ஆயிரத்து 300 ரூபாயுடன், 550 ரூபாய் சேர்த்து ஒரு டன் கரும்புக்கு 2 ஆயிரத்து 850 ரூபாய்’ என அறிவித்தார். 2011-2012 அரவைப் பருவத்துக்கு மாநில அரசு 650 ரூபாய் என அறிவித்திருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆண்டுக்கு 100 ரூபாய் வீதம் குறைத்து விட்டு... இப்போது 550 ரூபாய் என அறிவித்திருப்பது, கபட நாடகம்” என்று ஆவேசப்பட்டவர், தொடர்ந்தார்.

‘’தமிழ்நாட்டில் இருக்கும் 24 தனியார் சர்க்கரை ஆலைகள், 2013-2014 ஆண்டுக்கான அரவைப் பருவத்தில் 308 கோடி ரூபாய்; 2014-2015 ஆண்டுக்கான அரவைப் பருவத்தில் 312 கோடி ரூபாய் என மொத்தம் 620 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கின்றனர். தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், ‘2015-2016-ம் ஆண்டுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள 2 ஆயிரத்து 300 ரூபாய் மட்டும்தான் கொடுப்போம்’ என அறிவித்துள்ளது. இந்தியாவில் இருக்கும் பல மாநிலங்களில் கரும்பு விவசாயிகள் விலைக்காக போராட்டம் நடத்தினால்... உடனே பேச்சுவார்த்தை நடத்தி தொகையைப் பெற்றுக்கொடுக்கின்றன, மாநில அரசுகள். ஆனால், தமிழக அரசு அது போன்ற எந்த விதமான நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை. தனியார் சர்க்கரை ஆலைகளுக்குச் சாதகமாகவே நடந்து கொள்கிறது” என்றார், காட்டமாக!

தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கங்களின் மாநிலத்தலைவர் கே.வி.ராஜ்குமார், “கரும்புக்கான விலை அறிவிப்பு என்பது பழைய மொந்தையில் ஊற்றிய புதிய கள்ளாகவே இருக்கிறது. வெயில், மழை என இயற்கையோடு போராட்டம் நடத்தி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விலை அறிவிப்பில் கிள்ளித்தான் கொடுக்கின்றன நம் அரசுகள் .

மொத்தத்தில் 200 ரூபாய் மட்டும்தான் உயர்த்தப்பட்டுள்ளது. இதை, விலைவாசி உயர்வுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கண்துடைப்பு என்பது தெளிவாகத் தெரியும். நியாயமாகப் பார்த்தால் ஒரு டன்னுக்கு `4 ஆயிரம் கொடுக்க வேண்டும்.

சட்டசபையில் அறிவித்தால், அது, உடனே நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், தொழில்துறை அமைச்சர் தங்கமணி சட்டசபையில், ‘15 நாட்களில் பாக்கிப் பணம் வழங்கப்படும்’ என இரண்டு முறை அறிவித்தும், இன்றைய தேதி வரை கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி இருக்கிறது. மத்திய அரசு, தான் அறிவித்த விலையை ஆலைகள் கொடுக்கிறார்களா? எனக் கண்காணிக்கிறது. அவர்களால் கொடுக்க முடியாத சூழ்நிலை இருந்தால், வட்டியில்லா கடன் கொடுத்து நிலைமையைச் சரி செய்கிறது. ஆனால், மாநில அரசு இதுபோல எதையும் செய்வதில்லை.

இதேபோன்ற நிலை தொடர்ந்து நீடித்தால் கரும்பு விவசாயத்தை ஒழித்துக்கட்ட வேண்டிய நிலை வரும் அல்லது வாங்கிய கடனுக்காக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை வரும். இதுவரை பல வழிகளில் போராட்டங்கள் நடத்திப் பார்த்து விட்டோம். ஒன்றும் நடக்கவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழகத்தில் இருக்கும் 52 கரும்பு விவசாய சங்கங்களும் ஒன்றாகக்கூடி ஆலோசனை செய்ய இருக்கிறோம்” என்றார்.

இப்பிரச்னை சம்பந்தமாக தமிழக சர்க்கரைத்துறை இயக்குநர் மகேசன் காசிராஜனிடம் பேசினோம். “தனியார் சர்க்கரை ஆலைகள் வைத்திருக்கும் பாக்கியில் ஒரு பகுதியை வாங்கிக் கொடுத்து விட்டோம். மீதித் தொகையை வாங்கிக் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். படிப்படியாக பாக்கித்தொகை விவசாயிகளுக்குக் கிடைத்து விடும்” என்றார்.

உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால், கரும்பு விவசாயிகளுக்குத் திரும்பிய பக்கமெல்லாம் அடியாகவே இருக்கிறது. என்றைக்குத்தான் விடிவு காலம் வருமோ..?