கர்நாடக மாநிலம், ராய்ச்சூரு (ரெய்ச்சூர்) மாவட்டம், கடகம்தொட்டி கிராமத்தில் பி.டி பருத்தியை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு காய்ப்புழுவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்து கடந்த இதழில் பார்த்தோம். அப்பகுதியில் ஏராளமான பருத்தி விவசாயிகளின் வாழ்வைச் சூனியமாக்கியுள்ளது, காய்ப்புழு.

கடகம்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் கவுடாவின் வயலில் ‘பச்சைப் பசேல்’ என்று ஆள் உயரத்துக்கு வளர்ந்து நிற்கிறது, பி.டி பருத்தி. பூ, காய்களுக்குக் குறைவே இல்லை. பூத்துக் காய்த்து குலுங்குகின்றன. ஆனால், பருத்தி வெடிக்கவே இல்லை.

“பொதுவாக பருத்தி, 60 முதல் 70 நாட்களில் பூ எடுக்கும். 80 நாட்களிலிருந்து வெடிக்கும். நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது 150 நாட்கள் வயதுள்ள செடிகள். இன்னும் ஒரு கிலோ பருத்தி கூட அறுவடையாகவில்லை. ஒன்றரை ஏக்கர் பருத்திக்கு இதுவரை ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து விட்டோம். பருத்தி வெடிக்குமா இல்லை வாழ்வைப் பறிக்குமா? எனத் தெரியவில்லை” கண்களில் நீர்வழிய தன் சோகங்களைக் கொட்டினார், ஸ்ரீகாந்த் கவுடா.

மோசம் செய்த அதிகாரிகள்!

‘‘வழக்கமாக வாங்கும் கடையிலிருந்துதான் பி.டி பருத்தி விதைகளை வாங்கி விதைத்தேன். விதை முளைத்து செடிகள் நன்றாகத்தான் வளர்ந்தன. 90, 100, 120 நாட்கள் எனக் காலம் கடந்தது. ஆனால், ஒரு காய் கூட வெடிக்கவில்லை. ஒரு செடியைப் பிடுங்கி எடுத்துக்கொண்டுபோய், விவசாயத்துறை அதிகாரிகள், பல்கலைக்கழக வல்லுநர்களிடம் காட்டினேன். அவர்கள் பங்குக்கு என்னைத் திட்டித் தீர்த்து விட்டு, ‘நீ முறைப்படி பி.டி பருத்தியை பயிர் செய்யவில்லை... எதற்கும் இதைத் தெளித்துப்பார்’ என்று விலை கூடுதலான பூச்சிக்கொல்லிகளை சிபாரிசு செய்தனர். ‘அப்படியாவது பருத்தியைக் காப்பாற்ற முடியாதா?’ என்ற பேராசையில்... மிளகாய் மற்றும் தக்காளியிலிருந்து கிடைத்த வருமானத்தையும் பருத்திக்கே செலவு செய்தேன். மேலும் மேலும் கொடிய பூச்சிக்கொல்லிகள், உரங்கள் என அதிகாரிகள் சொல்வதை எல்லாம் வயலில் கொட்டினேன். ஆனால், இதுவரை ஒரு காய் கூட வெடிக்கவில்லை. வெடிக்காத காய்களை உடைத்துப் பார்த்தால்... இளஞ்சிவப்பு நிறத்தில் புழுக்கள் நெளிகின்றன. அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு, மேலும் ஒரு லட்சம் செலவு செய்துவிட்டு இன்று நிர்க்கதியாக நிற்கிறேன். எனது நெஞ்சே வெடித்து விடும்போல் இருக்கிறது.

தக்காளியையும் விட்டுவைக்கவில்லை!

ஏதோ தெய்வாதீனமாக இந்தாண்டு பச்சை மிளகாய், தக்காளிக்கு நல்ல விலை கிடைத்தது. பருத்தியைக் காலி செய்த காய்ப்புழு, தக்காளியையும் விட்டு வைக்கவில்லை. அறுவடை செய்து சொத்தைப் பழங்களைப் பிரிக்க கூடுதலாக இரண்டு ஆட்கள் வைக்க வேண்டியிருக்கிறது. தக்காளியும், மிளகாயும் முடியும் தருவாயில் உள்ளன. அந்த வயலில் வேறு விவசாயம் செய்ய முடியுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது” என்று கண்களைக் கசக்கினார், ஸ்ரீகாந்த் கவுடா.

‘‘காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் என்றுதானே, பி.டி பருத்தி இந்தியாவில் இடம் பிடித்தது. இப்போது இந்திய விவசாயத்துக்கே சவால் விடுகிறது. ஏன் இந்த நிலை?’ என்று ‘பூச்சியியல் வல்லுநர்’ நீ.செல்வத்திடம் கேட்டேன். “பருத்தியைத் தாக்கும் காய்ப்புழுக்களில் அமெரிக்கன் காய்ப்புழு, புகையிலை வெட்டுப்புழு, புள்ளிக் காய்ப்புழு, இளஞ்சிவப்புப் புழு என நான்கு வகைகள் இருக்கின்றன. அமெரிக்கன் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்துடன்தான், முதன்முதலில் பி.டி பருத்தி இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது. அமெரிக்கன் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்துடன் பி.டி 1 ரக பருத்தியைத்தான் முதலில் அறிமுகம் செய்தார்கள். அந்தப் பருத்தியில், கிரை-1 ஏ.சி (Cry-1 Ac) என்ற மரபணு விஷத்தை விதையிலேயே புகுத்தினார்கள். அந்த விஷம் 90 நாட்களுக்கு மட்டுமே வீரியத்துடன் செயல்படும் ஆற்றல்கொண்டது. கொஞ்ச காலத்திலேயே இளஞ்சிவப்பு காய்ப்புழுக்கள், பி.டி 1 ரகத்தை முறியடித்து, எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக்கொண்டு... குஜராத்தில் பி.டி பருத்தி வயல்களில் விளையாட்டு காட்டிவிட்டது.

அதிர்ந்து போன பி.டி பிரமாக்கள், உடனே பி.டி 2 ரகத்தை வெளியிட்டார்கள். இதில், கிரை-1 ஏசி (Cry-1 Ac) மற்றும் கிரை 1 ஏபி (Cry-1 Ab) ஆகிய இரண்டு விஷங்கள் புகுத்தப்பட்டன. இந்த ரகத்துக்கு ‘120 நாட்களுக்கு காய்ப்புழுக்களை அழிக்கும் ஆற்றல் உண்டு’ என்றனர். அதற்கும் எதிரான சக்தியை புழுக்கள் வளர்த்துக் கொண்டன. அதனால் பி.டி தொழில்நுட்பத்தால் சாறு உறிஞ்சும் பூச்சிகளை எதுவும் செய்ய முடியவில்லை. பி.டி பருத்தி வயல்களைச் சுற்றி இரண்டு மூன்று வரிசைகளில், மரபணு மாற்றம் செய்யப்படாத பருத்தி ரகங்களை பயிர் செய்திருந்தால், பி.டி.க்கு எதிராக எதிர்ப்புச் சக்தியை புழுக்கள் உருவாக்கிக் கொள்வதை, குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்குத் தள்ளிப் போட்டிருக்கலாம். ஆனால், முற்றிலும் ஒழிப்பது சாத்தியமே இல்லை. முறைப்படுத்தி கட்டுப்படுத்தி நிர்வாகம்தான் செய்ய முடியும்.

இளஞ்சிவப்பு காய்ப்புழுக்கள் மிகவும் ஆபத்தானவை. விதைகளின் விளிம்பு, மண், காய்ந்து போன பருத்திமிளார்கள், கொட்டுப்பருத்திச் செடிகளில் கூட்டுப்புழுக்களாக வாழ்ந்து அடுத்த பருவத்துக்கும் கடந்து செல்லக்கூடிய ஆற்றல் கொண்டவை. இளஞ்சிவப்பு காய்ப்புழுக்களை முற்றிலுமாக ஒழிக்க, பருத்திமிளார்களை வயலில் அப்படியே விட்டு விடாமல், வயலில் புதைத்து விட வேண்டும் அல்லது நெருப்பு வைத்து அழித்துத்தான் ஆக வேண்டும். அந்த நிலத்தைக் கோடையில் நன்கு உழவு செய்து, மண்ணில் மறைந்துள்ள கூட்டுப்புழுக்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும். பிறகுதான் அடுத்த ஆண்டு விவசாயம் குறித்து சிந்திக்க முடியும்” என்று அதிர்ச்சியூட்டினார், செல்வம்.

ராய்ச்சூரு பருத்தி விவசாயம் பாழானதற்குக் காரணம் அப்போதுதான் எனக்கு விளங்கியது. கடந்த ஆண்டு விவசாயிகள் தற்கொலையில் (284 பேர்) கர்நாடகா மாநிலம்தான் முதலிடத்தில் உள்ளது. இந்தாண்டு அரசு உதவிக்கு வரவில்லை என்றால், ராய்ச்சூரு மாவட்டத்தில் மட்டுமே ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டாலும் ஆச்சர்யமில்லை. அந்த அளவுக்கு மன உளைச்சலில் இருக்கிறார்கள், விவசாயிகள்.

கர்நாடக அரசு விவசாயத்துறை, விவசாயப் பல்கலைக்கழகங்கள் இதற்கு என்ன பதில் சொல்கின்றன?

-அடுத்த இதழில் பார்ப்போம்.