Published:Updated:

சந்தைக்கேற்ற சாகுபடி!

சந்தைக்கேற்ற சாகுபடி!
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்கேற்ற சாகுபடி!

லாப ஊருக்கு ஒரு வழிகாட்டி!புதிய பகுதிகாசி.வேம்பையன்

சந்தைக்கேற்ற சாகுபடி!

லாப ஊருக்கு ஒரு வழிகாட்டி!புதிய பகுதிகாசி.வேம்பையன்

Published:Updated:
சந்தைக்கேற்ற சாகுபடி!
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்கேற்ற சாகுபடி!

பருவமும்... பயிரும்!

“விதைக்கும் முன்பு விலையை கணிக்க வேண்டும்!”

நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல... உற்பத்தியும், விற்பனையும் விவசாயத்துக்கு இரண்டு பக்கங்கள். இதில், விளைபொருட்களின் உற்பத்தியைக் பெருக்குவதில், நாம் செலுத்தும் கவனத்தை விற்பனையில் காட்டாததன் விளைவுதான்... விலையின்மை, கடன், நஷ்டம் போன்ற இன்னல்கள். ‘ஒரு பயிருக்கு தற்போது கிடைத்த விலை, அடுத்த பருவத்துக்கும் கிடைக்குமா?’ என்று யோசிக்காமல் அதே பயிரை விளைவிக்கும்போது... விலை வீழ்ச்சியடைந்து, நஷ்டம் ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது.

சந்தைக்கேற்ற சாகுபடி!

நஷ்டப்பட வைத்த கோலியாஸ்!

2012-ம் ஆண்டு விழுப்புரம், தர்மபுரி, சேலம், திருவண்ணா மலை ஆகிய மாவட்டங்களில், ‘நல்ல விலை கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில், கோலியாஸ் கிழங்கை சாகுபடி செய்தனர், விவசாயிகள். அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப ஒரு கிலோவுக்கு 12 ரூபாய் விலை கிடைத்தது. இதில் சாகுபடி செலவு குறைவு என்பதால், கோலியாஸ் சாகுபடி செய்திருந்த எல்லோருக்கும் நல்ல லாபம் கிடைத்தது. அந்த குஷியில் அடுத்த ஆண்டு அதிக பரப்பில், கோலியாஸ் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், கிழங்கை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரவில்லை. நேரடியாகக் கொள்முதல் செய்த நிறுவனங்களும், 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரையே விலை கொடுத்தன. இதனால், விவசாயிகளுக்குப் பெருத்த நஷ்டம். இது, முன்கணிப்புச் செய்யாமல் சாகுபடி செய்து நஷ்டப்பட்டதற்கான  ஓர் உதாரணம்.

சந்தைக்கேற்ற சாகுபடி!
சந்தைக்கேற்ற சாகுபடி!

வருமானத்தை இழக்க வைத்த பச்சை முலாம் பழம்!

திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையில் இருக்கும் பகுதி தானிப்பாடி. இந்தப் பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் நல்ல உழைப்பாளிகள். ஒவ்வொரு ஆண்டும், கோடைக் காலங்களில் தர்பூசணி, முலாம்பழம் ஆகியவற்றை சாகுபடி செய்வார்கள். கடன் வாங்கி இரண்டு ஏக்கர் நிலத்தில் முலாம் பழம் சாகுபடி செய்தார், பழனி என்கிற விவசாயி. செம்மண் பூமியில், போதுமான அளவுக்கு எருவிட்டு, உரம் போட்டு, இரவு பகல் பார்க்காமல் தண்ணீர் பாய்ச்சி முழுமூச்சோடு செய்த விவசாயம் என்பதால், ஒவ்வொரு பழமும் அரை கிலோவில் இருந்து ஒரு கிலோ எடை இருந்தது. கடனை அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடிருந்தவருக்கு, சந்தையில் சொல்லப்பட்ட விஷயம் தலையில் இடியை இறக்கியது.

முலாம் பழத்தில் ஆரஞ்ச், பச்சை என இரண்டு வண்ணங்கள் உள்ளன. அதில், ஆரஞ்சு வண்ண சதைப்பகுதியைக் கொண்ட முலாம் பழத்துக்குத்தான் சந்தையில் நல்ல விலை கிடைத்தது. ஒரு கிலோ 12 ரூபாய் முதல் 15 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், பழனி சாகுபடி செய்திருந்தது பச்சை நிற பழம். அது, ஒரு கிலோ 4 ரூபாய் அளவில்தான் விற்பனையானது. முலாம் பழத்துக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருந்தும், சரியான ரகத்தைத் தேர்வு செய்யாததால்தான் பழனிக்கு நஷ்டம். இதுபோல பல உதாரணங்களைச் சொல்லலாம்.

சந்தைக்கேற்ற சாகுபடி!

சந்தைக்கு ஏற்ற பயிர் செய்தால், சந்தோஷமான விலை!

விளைபொருட்களில் இருந்து லாபம் பார்க்க வேண்டும் என்றால், அறுவடை சமயத்தில் விற்பனைக்குச் சந்தையைத் தேடாமல்... ‘சந்தையில் எந்தப் பயிருக்கு நல்ல விலை கிடைக்கும்?; எப்போது நல்ல விலை கிடைக்கும்?’ என்பதை விதைக்கும்முன்பே தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப சாகுபடி செய்தால், நிச்சயமாக வருமானத்தில் குறைவிருக்காது.

பட்டத்துக்கேற்ற லாபகரமான பயிர், விற்பனை செய்ய ஏற்ற சந்தை போன்ற தகவல்களை இதழ்தோறும் இந்தத் தொடர் மூலம் வல்லுநர்கள் வழிகாட்டுவார்கள்.

சந்தைக்கேற்ற சாகுபடி!

திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் பாப்கார்ன், கோழிப் பண்ணைகளுக்குத் தேவையான தீவனம்... என சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கும் பயிரான மக்காச்சோளத்துக்கான சந்தை நிலவரங்கள், சாகுபடி பருவங்கள் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

-லாபம் பெருகும்

விளைபொருட்களை விற்பனை செய்வதற்கும், தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும் ஒவ்வொரு பகுதிகளிலும் `சந்தை’ என்ற ஒன்றை ஆரம்பித்தார்கள் முன்னோர்கள். சங்க காலம் முதல் சந்தைகள் செயல்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்கள் ‘சிலப்பதிகாரம்’, ‘பட்டினப் பாலை’யில் உள்ளன என்கிறார்கள் அறிஞர்கள்.

மிழ்நாட்டில், ஒட்டன்சத்திரம், கோயம்பேடு, தலைவாசல் காய்கறி சந்தை, தோவாளை, கொடைரோடு,நிலக்கோட்டை, திண்டிவனம், சத்தியமங்கலம் மலர் சந்தை, விருதுநகர் பருப்பு மாக்கெட், மணப்பாறை,பொள்ளாச்சி மாட்டுச் சந்தை, உளுந்தூர்ப்பேட்டை ஆட்டுச் சந்தை எனத் தமிழகம் முழுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்தைகள் உள்ளன.