Published:Updated:

பத்மஸ்ரீ விருது... ஜீரோ பட்ஜெட்டுக்கு மரியாதை..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பத்மஸ்ரீ விருது... ஜீரோ பட்ஜெட்டுக்கு மரியாதை..!
பத்மஸ்ரீ விருது... ஜீரோ பட்ஜெட்டுக்கு மரியாதை..!

பசுமைக் குழு

பிரீமியம் ஸ்டோரி

சுமைப் புரட்சிக்கு பிறகு மண்வளம் கெட்டு, உணவுப் பொருள்கள் நஞ்சாகிக் கிடக்கும் சமயத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஜீரோ பட்ஜெட் என்னும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஜீரோ பட்ஜெட் பிதாமகர், சுபாஷ் பாலேக்கர். இவருக்கு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், விதர்பா பகுதியைச் சேர்ந்த பெலோரா என்ற கிராமத்தில் 1949-ம் ஆண்டில் பிறந்தவர் சுபாஷ் பாலேக்கர். அடிப்படையில் இவர் ஒரு வேளாண் பட்டதாரி. ரசாயன விவசாயத்தில் நடந்துவரும் கெடுதல்கள், இவர் மனதை உறுத்தியது. அதன் காரணமாக ஏற்பட்ட தேடுதல்தான் விவசாயிகளிடம் பிரபலமாக இருந்து வரும் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்ப முறை. பல்கலைக்கழகத்தில் படித்ததை விட, காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்களிடமிருந்து தான் இயற்கையைக் குறித்து கற்றுக் கொண்டதாக சுபாஷ் பாலேக்கர் அடிக்கடி சொல்வதுண்டு.

பத்மஸ்ரீ விருது... ஜீரோ பட்ஜெட்டுக்கு மரியாதை..!

வட மாநிலங்கள், கர்நாடகா என்று பிரபலமாக இருந்த சுபாஷ் பாலேக்கரை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்திய பெருமை பசுமை விகடனையே சேரும். 2007-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற ‘பசுமை விகடன்’ வெளியீட்டு விழா தொடங்கி ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வழிகாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2007-ம் ஆண்டு செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சுபாஷ் பாலேக்கரை வைத்து திண்டுக்கல் மாநகரில், சுமார் 800 விவசாயிகளுக்குப் பயிற்சியளித்தது, பசுமை விகடன். தமிழகத்தில் பாலேக்கர் அளித்த முதல் பயிற்சி இதுதான். அதைத் தொடர்ந்து, 2007-ம் ஆண்டின் இறுதியில் நான்கு நாட்களுக்கு விரிவான பயிற்சி ஈரோடு மாநகரில் நடத்தப்பட்டது. சுமார் 2 ஆயிரம் விவசாயிகள் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டனர். தற்போது இந்தியா முழுவதும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

விருது பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, சுபாஷ் பாலேக்கரிடம் பேசினோம். “இந்த விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் எப்போதும் விருதுக்காகப் பணியாற்றுவதில்லை. இது ஜீரோ பட்ஜெட் இயக்கத்துக்குக் கிடைத்த வெற்றி. இயற்கை விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி. இந்த ஜீரோ பட்ஜெட் முறை நாடு முழுவதும் இன்னும் பல விவசாயிகளுக்குப் போய் சேர வேண்டும் என்பதே என் நோக்கம்” என்றார், உறுதியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு