Published:Updated:

பயறு சாகுபடியும்... பணப் பயிர்தான்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பயறு சாகுபடியும்... பணப் பயிர்தான்..!
பயறு சாகுபடியும்... பணப் பயிர்தான்..!

ஆலோசனை சொல்லும் நிதித் துறைச் செயலர்பசுமைக் குழு

பிரீமியம் ஸ்டோரி

பார்டு வங்கியின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘மாநில கடன் திட்டக் கருத்தரங்கு’, சென்னையில் ஜனவரி 27-ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல முதன்மைப் பொதுமேலாளர் கே.வெங்கடேஷ்வர ராவ்,

‘‘தமிழகத்துக்கு விவசாயத்துக்காக அடுத்த நிதியாண்டில் ரூ 1 லட்சத்து 9,385 கோடி, சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு 31,598 கோடி ரூபாய், பிற முக்கியத் துறைகளுக்கு 30,176 கோடி ரூபாய் என மொத்தம் 1.71 லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்குவதற்கான வளம் உள்ளது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 18 சதவிகிதம் அதிகம்’’ என்றார்.

பயறு சாகுபடியும்... பணப் பயிர்தான்..!

2016-17ம் ஆண்டுக்கான ‘மாநிலக் கடன் மதிப்பீட்டு அறிக்கை’ (State focus paper) யை வெளியிட்டு பேசிய தமிழக அரசின் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.சண்முகம், ‘‘நபார்டு வங்கி வெளியிடும் மாநிலக் கடன் மதிப்பீட்டு அறிக்கையில் உள்ள தகவல்கள் மிகவும் சரியானவையாக உள்ளன. சில சமயங்களில் அரசு நலத்திட்டங்களுக்கு, இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள புள்ளி விவரங்களைப் பயன்படுத்தியுள்ளோம். விவசாய வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதற்கு வங்கிகளும் முக்கிய காரணமாக உள்ளன. அந்த வகையில் வங்கி அலுவலர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

எனது சொந்த மாவட்டமான சேலம் பகுதியில், ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் வைத்துள்ள விவசாயிகள்தான் அதிகம். விவசாயத்துக்கான நிலப்பரப்பு குறைவாக இருந்தாலும், வீட்டுக்கு, வீடு இரண்டு, மூன்று கறவை மாடுகள் வளர்ப்பார்கள். அந்த மாடுகளின் வருமானம் மூலம் மகிழ்ச்சியுடன் வாழ்வதைப் பார்த்துள்ளேன். விவசாயம் மட்டும் செய்யாமல், கால்நடைகளையும் வளர்க்கும் போது கூடுதல் வருமானம் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் பயறு வகைப் பயிர்களும், எண்ணெய்வித்துப் பயிர்களும் அதிகளவு சாகுபடி செய்ய வேண்டும். அதிகபட்சம் 70 நாட்கள் வயதுகொண்ட உளுந்து இன்று பணப்பயிராக மாறியுள்ளது. துவரையையும் கூடவே ஊடுபயிராக சாகுபடி செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். பயறு வகைப்பயிர்கள் சாகுபடி செய்யும் போது, மண் வளமும் கூடும். இந்த தகவல்களை வங்கிக்கு வரும் விவசாயிகளிடம் பகிர்ந்து கொள்ளவும்’’ என அக்கறையாக ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு சிறந்த முறையில் கடன் வழங்கிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் நிர்வாகிகளுக்கு விருதுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு