Published:Updated:

சரிவை நோக்கி இந்திய விவசாயம்...!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சரிவை நோக்கி இந்திய விவசாயம்...!
சரிவை நோக்கி இந்திய விவசாயம்...!

ஜெ.சரவணன், படம்: கே.கார்த்திகேயன்

பிரீமியம் ஸ்டோரி

2016-ம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் நிதி சார் வளர்ச்சி ஆகியவை குறித்து... பிப்ரவரி 1 மற்றும் 2- தேதிகளில் நிதி மற்றும் தொழில் கருத்தரங்கை சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது, ‘நாணயம் விகடன்’. பொருளாதார அறிஞர்கள், தொழிலதிபர்கள், நிதியியல் நிபுணர்கள் எனப்பலரும் பங்குபெற்று உரையாற்றிய இக்கருத்தரங்கு, மிகவும் சிறப்பாக நடந்தேறியது!

இக்கருத்தரங்கில் ‘நடப்பு ஆண்டில் இந்தியா எப்படி இருக்கும்?’ என்ற தலைப்பில் பேசிய சிங்கப்பூரைச் சேர்ந்த பொருளாதார மற்றும் நிதியியல் நிபுணர் டாக்டர்.அனந்த நாகேஸ்வரன், விவசாயத்தைப் பற்றியும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் சொன்ன விஷயங்கள், அதிர்ச்சியைக் கிளப்பின.

சரிவை நோக்கி இந்திய விவசாயம்...!

“உலகிலுள்ள நாடுகளிலேயே, மொத்த உற்பத்தியில் விவசாயம் அதிகப்பங்கு வகிக்கும் நாடு, இந்தியா. இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தித் துறையாகவும், வேலைவாய்ப்புத் துறையாகவும் இன்று வரை விவசாயம் இருக்கிறது. ஆனால், இன்று நம்நாட்டில் விவசாயம் செய்து நிலையான வருவாய் ஈட்ட இடமில்லை என்பதுதான் உண்மை. இங்கு ஒரு விவசாயியின் சராசரி நிலம் கையிருப்பு... 1970 களில் 2.82 ஏக்கர் என்ற அளவில் இருந்தது. இப்போது 1.16 ஏக்கர் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. அதேநேரம், இந்தியாவின் மிகச்சிறந்த எந்த விளைபொருளும்... உலக அளவில், 50 சதவிகித அளவுக்குத்தான் மதிப்பு பெறுகிறது.

130 கோடி மக்கள் உள்ள இந்தியாவில் அனைவருக்கும் மிகப்பெரிய வாழ்வாதாரமாக விளங்கிய விவசாயம் இன்று பாதிக்குப் பாதியாக குறைந்து விட்டது. விவசாயத்திலிருந்து வெளியேறியவர்களுக்கு எந்தவொரு மாற்றுத் துறையிலும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும், இன்றுவரை இவ்வளவு பெரிய நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற தகுதியான ஒரு துறையாக விவசாயம் மட்டுமே விளங்கி வருகிறது. ஆனால், அது கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து, சரிவை நோக்கிச் செல்கிறது என்பதுதான் உண்மை” என்று வருத்தம் பொங்கச் சொன்னார் அனந்த நாகேஸ்வரன்!

சரிவை நோக்கி இந்திய விவசாயம்...!

மத்திய மற்றும் மாநில அரசுகளால், மாற்றாந்தாய் மனோபாவத்துடனேயே விவசாயிகள் அணுகப்படுவதன் எதிர்விளைவுதான் இத்தகைய சரிவுக்குக் காரணம்! இந்தக் கொடுமைக்கு இனியாவது முற்றுப்புள்ளி வருமா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு