Published:Updated:

‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!

‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!
பிரீமியம் ஸ்டோரி
‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!

‘பசுமைப் புரட்சி’ பூமியில் ஒரு பரிதாபப் பயணம்குறுந்தொடர்த.ஜெயகுமார்

‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!

‘பசுமைப் புரட்சி’ பூமியில் ஒரு பரிதாபப் பயணம்குறுந்தொடர்த.ஜெயகுமார்

Published:Updated:
‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!
பிரீமியம் ஸ்டோரி
‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!

ன் உழைப்பால் விளைவிக்கப்பட்டதில் பிறருக்கு தானமளித்தது போக, மீதியைச் சாப்பிடு’ என்று

‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!

உபதேசித்த சீக்கிய மதகுருவான குருநானக் தேவின் உபதேசத்தைப் பின்பற்றி வாழ்பவர்கள், ‘பசுமைப் புரட்சி’யை உயர்த்திப் பிடித்த பஞ்சாபியர்கள். தங்கள் தேவையைக் கடந்து, இந்தியாவுக்கே கோதுமை, நெல் என உற்பத்தி செய்து பல ஆண்டுகளாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பசுமைப் புரட்சியின் எதிர்விளைவாக, மாநிலம் முழுக்கவே பரவலாக புற்றுநோயாளிகளைச் சுமந்து கொண்டிருப்பதும்... அந்த பூமியே ரசாயனங்களின் தாக்குதலால் நஞ்சாகிக் கிடப்பதும்... கொடுமை!

‘ஒவ்வொரு மனிதனின் தேவைக்கானதை இந்த பூமி வழங்குகிறது. ஆனால், அவன் பேராசைக்கு எதையும் வழங்குவதில்லை’- என்பது, மகாத்மா காந்தியின் வரிகள். ஆம், இந்திய மக்களின் உணவுத் தேவைக்கு ஏற்ப, இந்திய நிலங்கள் உணவை அளித்துத்தான் வந்தன. முழுக்க முழுக்க பாரம்பர்யமான இயற்கை முறை விவசாயத்தின் மூலமே இதை சாதித்து வந்தனர் இந்தியர்கள். ஆனால், ஆங்கிலேயர்களின் ஆட்சி மற்றும் அதைத் தொடர்ந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலங்களில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார சூறையாடல்களால் விளைந்த பஞ்சங்களைக் காரணம் காட்டித்தான், 1960 களில் இந்தியாவில் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உயர்விளைச்சல் கொடுக்கக்கூடிய ரகங்கள் விவசாயத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. ‘அதிக விளைச்சல், அதிக வருமானம்’ என்ற ஆசை விவசாயிகளிடையே தூண்டப்பட்டது. அதனால், பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்த இந்திய பாரம்பர்ய விவசாய முறையைக் கைவிட்டு, புதிய விவசாய முறைக்கு விவசாயிகள் மாறினார்கள். இந்த புதிய விவசாய முறையை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு வேளாண் பல்கலைக்கழகங்களும், விஞ்ஞானிகளும், வேளாண் துறையும் கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கின.

‘உணவு உற்பத்தி’ என்ற ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டு, அறிமுகப்படுத்தப்பட்ட ‘பசுமைப் புரட்சி’ என்னும் ரசாயன வேளாண் முறைக்கு முதலில் இலக்கான மாநிலம்... பஞ்சாப். இங்கேதான் பசுமைப் புரட்சியானது முதலில் பரிசோதனை செய்யப்பட்டது. உற்பத்தியும் பெருக்கப்பட்டது. ஆனால், அதன்  எதிர்விளைவாக... மண்ணின் வளம், நீர்நிலைகள் கெட்டு, நோய்கள் பெருகியுள்ளன. போதுமான வருமானம் இன்றி விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ‘இந்தியாவின் உணவுக் கிண்ணம்’ என்று வர்ணிக்கப்படும் பஞ்சாப் மாநிலம், இன்று புற்றுநோயின் புகலிடமாக மாறிக்கிடக்கிறது. பஞ்சாபின் சில மாவட்டங்களில் மனிதர்களின் ரத்தத்தைப் பரிசோதித்தபோது, அதில் பூச்சிக்கொல்லிகளின் மூலக்கூறுகள் கலந்திருப்பதாக டெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.

‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!

பத்திண்டா மாவட்டத்தில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம், பிக்கானேருக்கு தினந்தோறும் புற்றுநோயாளிகள் ரயிலில் செல்கிறார்கள். இந்த ரயிலுக்கு ‘கேன்சர் எக்ஸ்பிரஸ்’ என்று மக்களே பெயர் வைத்துள்ளனர். புற்றுநோய் மட்டுமல்லாமல், தோல் வியாதிகள், நீரிழிவு நோய், இதய நோய், கரு தங்காமை எனப் பல வியாதிகள் மக்களை வாட்டி வதைக்கின்றன.

உண்மை இவ்வாறு இருக்க, ‘பஞ்சாப் மாநில விவசாயிகளின் தனி நபர் வருமானம் பெருகியிருக்கிறது. முழுக்க முழுக்க இயந்திரமயமாக்கப்பட்ட விவசாயம். புதிய தொழில்நுட்ப முறைகளை உடனடியாக ஏற்றுக் கொள்கிறார்கள். பல மாநிலங்கள் வறண்டு கிடக்கும் நிலையில் ஆண்டு முழுவதும் விவசாயம் நடந்து வருகிறது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து விட்டது. ஆண்டுக்கு 265 மில்லியன் டன் உணவு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பஞ்சம் என்பது இல்லை’ என்று நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு முறையும் அறிக்கை வாசித்து வருகிறார்கள், ஆட்சியாளர்கள் . 

‘எவ்வளவு ரசாயன உரங்களையும் கொட்டிக் கொள்ளலாம். அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லிகளையும் தெளித்துக் கொள்ளலாம். அதனால் மண், நீர், விளைபொருட்கள் எவ்வளவு நஞ்சானாலும் சரி. விவசாயிகளுக்கும், மக்களுக்கும் எவ்வளவு நோய்கள் வந்தாலும் சரி. உணவு உற்பத்தி மட்டும் குறைவில்லாமல் நடந்துகொண்டே இருக்க வேண்டும்’ என்பதில் மட்டும்தான் ஆட்சியாளர்கள் குறியாக இருக்கிறார்கள்!

உலகமெங்கும் இயற்கை வேளாண்மை, பாதுகாப்பான உணவு என்று விழிப்பு உணர்வு வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், பலவற்றிலும் உலக நாடுகளை பார்த்து வேஷம் கட்டும் மத்திய, மாநில அரசுகளோ... ‘இரண்டாம் பசுமைப் புரட்சி’ என்று இப்போதும் அதே ரசாயன வாடையில் மயங்கிக் கிடக்கின்றன.

இத்தகையச் சூழலில்தான், பஞ்சாப் மாநிலத்தில் வலம் வந்து விவசாயிகள், வேளாண் வல்லுநர்கள், மருத்துவர்கள், இயற்கை ஆர்வலர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் சந்தித்தோம். இந்த மாநிலம் உணவு உற்பத்திக்காக எப்படியெல்லாம் சுரண்டப்பட்டது என்பதையும், இதனால் விவசாயிகள் அடைந்து வரும் துன்பங்களையும் அவர்கள் ஒவ்வொருவரும் அடுக்கியபோது நாம் அதிர்ந்துதான் போனோம்.

-பயணம் தொடரும்

50% உணவைத் தரும் பஞ்சாப்!

பஞ்சாபில் 87 சதவிகித நிலங்களில் இறவைப் பாசனம்தான். இந்த நிலங்களில் ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் கொட்டி நெல், கோதுமையை சாகுபடி செய்கிறார்கள். இந்திய பரப்பளவில் 1.54 சதவிகிதம்தான் பஞ்சாப். ஆனால், இந்தியா முழுக்க இருந்து மத்திய உணவுக் கழகத்துக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களில் 50 சதவிகித அளவு பஞ்சாபிலிருந்துதான் வழங்கப்படுகிறது.