பிரீமியம் ஸ்டோரி

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

மண்புழு உரம்!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், பிப்ரவரி 23-ம் தேதி, ‘வெண்பன்றி வளர்ப்பு’, 24-ம் தேதி ‘வான்கோழி வளர்ப்பு’ 26-ம் தேதி ‘மண்புழு உரம் தயாரித்தல்’ போன்ற பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452-2483903

தண்டோரா

அலங்கார மீன்!

நாமக்கல் மாவட்டம், வேளாண் அறிவியல் மையத்தில், பிப்ரவரி 15-ம் தேதி, ‘அலங்கார மீன் வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286-266345

தண்டோரா

நாட்டுக் கோழி!

சேலம் கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், பிப்ரவரி 16-ம் தேதி, ‘நாட்டுக் கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408

காளான் உற்பத்தி!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், பிப்ரவரி  18-ம் தேதி, ‘தேனீ வளர்ப்பு பயிற்சி’, 24-ம் தேதி, ‘காளான் உற்பத்தித் தொழில்நுட்பம்’, 25-ம் தேதி’, ‘இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, முகவரி: திட்ட ஒருங்கிணைப்பாளர், மைராடா வேளாண் அறிவியல் நிலையம், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு.

தொலைபேசி: 04285-241626.

தண்டோரா

இயற்கைக் கலந்துரையாடல்!

காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம், ‘வையகம் இயற்கை வேளாண் பண்ணை’யில்,  பிப்ரவரி 27-ம் தேதி இயற்கை வேளாண் பயிற்சி மற்றும் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. முன்னோடி இயற்கை விவசாயிகள் பயிற்சி அளிக்க உள்ளனர். மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 99946-91021, 97100-72276.

கட்டணப் பயிற்சிகள்

நாட்டுக் கோழி!

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் பிப்ரவரி 24-ம் தேதி, ‘நாட்டுக் கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சிக் கட்டணம் ரூ 100.

தொடர்புக்கு, தொலைபேசி: 04331-290335.

வாழை சாகுபடி!

தண்டோரா

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம், ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில், பிப்ரவரி 19-ம் தேதி ‘வாழை சாகுபடித் தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்புக் கூட்டல்’, 24-ம் தேதி ‘சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டு மற்றும் தொழில் வாய்ப்பு பயிற்சி’, 26-ம் தேதி ‘ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பப் பயிற்சி’, ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ 100.

தொடர்புக்கு, செல்போன்: 99429-78688, 99429-78497.

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு