Published:Updated:

மீண்டும் கெயில்... ‘தெறி’க்கும் விவசாயிகள்!

மீண்டும் கெயில்...  ‘தெறி’க்கும் விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் கெயில்... ‘தெறி’க்கும் விவசாயிகள்!

ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்

மீண்டும் கெயில்... ‘தெறி’க்கும் விவசாயிகள்!

ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்

Published:Updated:
மீண்டும் கெயில்...  ‘தெறி’க்கும் விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் கெயில்... ‘தெறி’க்கும் விவசாயிகள்!

மிழக அரசின் நடவடிக்கையால், அடங்கிக் கிடந்த ‘கெயில்’ பூதம், மீண்டும் தலையெடுக்கும் அபாயத்தால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள், தமிழக விவசாயிகள். ஏழு மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்கள் பதிக்க, ‘கெயில் இந்தியா’ நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி, விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இங்கே..

மீண்டும் கெயில்...  ‘தெறி’க்கும் விவசாயிகள்!

கணேசமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்புக் குழு: “பாதிப்புக்குள்ளாகும் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் விவசாயிகளை சென்னைக்கு வரவழைத்து, அன்றைய தலைமைச் செயலாளர் முன்னிலையில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தியது, தமிழக அரசு. அக்கூட்டத்தின் முடிவில் விவசாயிகள் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்த தமிழக அரசு, ‘கெயில் நிறுவனம் கையப்படுத்திய விவசாய நிலங்களை மீண்டும் விவசாயிகள் வசமே ஒப்படைக்க வேண்டும். விவசாய நிலங்களுக்குள் எரிவாயுக் குழாய்கள் பதிக்க அனுமதி கிடையாது. தேவைப்பட்டால், நெடுஞ்சாலை ஓரங்களில் கொண்டு செல்லலாம்’ என்று சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் இயற்றி தமது எதிர்ப்பைக் காட்டியது. ஆனால், கெயில் நிறுவனம் உச்ச நீதிமன்றம் வரை சென்று, அனுமதி பெற்றுவிட்டது. இனி, தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதைப் பார்த்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடர முடிவு செய்துள்ளோம். எப்பாடுபட்டாவது மக்கள் எழுச்சியுடன் சட்டரீதியான செயல்பாடுகள் மூலமாக திட்டத்தைத் தடுத்து நிறுத்துவோம்.”

மீண்டும் கெயில்...  ‘தெறி’க்கும் விவசாயிகள்!

கு.செல்லமுத்து, தலைவர், உழவர் உழைப்பாளர் கட்சி: கெயில் நிறுவனம் விவசாய நிலங்களைத் தவிர்த்து யாருக்கும் பாதிப்பு இல்லாமல் நெடுஞ்சாலை ஓரங்களில் கொண்டு செல்லமுடியும். இதற்கு தமிழக அரசு மறுப்பு சொல்லவில்லை. அதை விட்டுவிட்டு, விவசாய நிலங்களுக்கு மத்தியில்தான் கொண்டு செல்வோம் என்று அத்துமீறி வந்தால், இந்த ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் குடும்பத்துடன் எதிர்த்து நிற்பார்கள். உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.”

மீண்டும் கெயில்...  ‘தெறி’க்கும் விவசாயிகள்!

பி.கந்தசாமி, கோயம்புத்தூர் விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர்: “இதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தி வருகிறேன். பெட்ரோலியம் கனிமப்பொருட்கள் மற்றும் குழாய் பதிப்புச் சட்டம் (1962) கம்பெனிகளுக்குச் சாதகமானது. இந்தச் சட்ட விதியின்படிதான் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தின் இன்னொருப் பிரிவான ‘ரைட்ஸ் ஆப் யூஸர் ஆப் லேண்ட்’ சட்டம் என்ன சொல்கிறது என்றால்... நிலத்தின் உரிமை விவசாயிகளுக்கு. ஆனால், அனுபவ உரிமை கையகப்படுத்தும் கம்பெனிகளுக்குத்தான் என்கிறது. இந்தச் சட்டங்களை வைத்துத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் விவசாய நிலங்களில் விளையாட்டு காட்டி வருகின்றன. விவசாய நிலங்களைக் காப்பாற்ற, இந்தச் சட்டத்தை முதலில் ரத்து செய்யவேண்டும்”

தற்போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, கடந்த 5-ம் தேதி தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதான் கெயில் திட்டம்!

கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து மங்களூரு வழியாக பெங்களூருவுக்கு குழாய்கள் அமைத்து எரிவாயு கொண்டுசெல்லும் திட்டத்தை மத்திய அரசின் ‘கெயில் இந்தியா’ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்துக்காக, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய 7 மாவட்டங்களின் வழியே 504 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய்கள் பதிக்கும் வேலையும் தொடங்கப்பட்டது.

மீண்டும் கெயில்...  ‘தெறி’க்கும் விவசாயிகள்!

இதில் குழாய்கள் பொருத்தப்படும் பெரும்பாலான இடங்கள், விவசாய நிலங்களாகும். இந்நிலையில், விவசாயிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் பணியைத் தொடர்ந்தது. இது கண்டு வெகுண்டு எழுந்த விவசாயிகள் ஒன்று கூடி பணியைத் தடுத்து நிறுத்தினார்கள். தொடர்ந்து, காவல்துறையின் பாதுகாப்புடன் இயந்திரங்களை வைத்து தென்னை மரங்கள் உள்ளிட்ட விவசாயப் பயிர்களை அழித்து குழாய் பதிக்கும் பணியினைத் தொடர்ந்தது கெயில். விவசாயிகளின் போராட்டம் மற்றும் தமிழக அரசின் தடை காரணமாக பணியை நிறுத்தி இருந்தது, கெயில். உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மீண்டும் பணியைத் தொடரும் அபாயம் எழுந்துள்ளது.