நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

திருச்சிக்கு வாங்க!

திருச்சிக்கு வாங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
திருச்சிக்கு வாங்க!

திருச்சிக்கு வாங்க!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘மண்ணின் வளமே மக்கள் வளம்’ என்ற தாரக மந்திரத்தை எழுத்தில் மட்டுமல்ல, களத்திலும் செயல்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு, மஞ்சள் மாநகரான ஈரோட்டில், ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2015’, என்ற கண்காட்சியை சிறப்பாக நடத்தினோம். தமிழகம் மட்டுமில்லாமல், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்த வெற்றி நிகழ்வினைத் தொடர்ந்து மலைக்கோட்டை நகரமான திருச்சியில் பிப்ரவரி 12 தொடங்கி 15 வரை, ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2016’ என்ற பெயரில் மாபெரும் வேளாண் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இடுபொருட்கள் தயாரிப்போர், முன்னோடி விவசாயிகள், விஞ்ஞானிகள், அரசுப் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்கிறார்கள். தேடி அலைந்து தெரிந்துகொள்ளவேண்டிய விவசாயம் சம்பந்தமான தகவல்கள், இக் கண்காட்சியின் மூலம் ஓரே குடையின்கீழ் கிடைக்க உள்ளன.

ஜீரோ பட்ஜெட் விவசாயம் மேற்கொண்டு வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், சிறப்புரையாற்றுகிறார். மேலும் தைவான் நாட்டிலுள்ள உலக காய்கறி மையத்தின் பூச்சியியல் ஆராய்ச்சிக்குழுவின் தலைவரான முனைவர். ஆர்.சீனிவாசன், மலேசியா பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விவசாயக் கல்வி அதிகாரியான என்.சுப்பாராவ், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஜீரோ பட்ஜெட் விவசாயி ‘பன்னூர்’ கிருஷ்ணப்பா, தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி நாகரத்தின நாயுடு ஆகியோரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள். இவர்களுடன் தமிழகத்தின் முன்னோடி விவசாயிகள், வேளாண் அறிஞர்கள், விஞ்ஞானிகளும் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.

பசுமை விகடன் கையில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியின் வெற்றிக்கும் பக்கபலமாக இருக்கும், நீங்கள் அத்தனைப்பேரும் திருச்சி வேளாண் கண்காட்சியினையும் மாபெரும் வெற்றி வாகை சூட வைக்க வேண்டும். உங்கள் அனைவரையும் கண்காட்சியில் சந்திக்கக் காத்திருக்கிறோம்.

-ஆசிரியர்