Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

கட்டணப் பயிற்சிகள்

இயற்கை உரம்!

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தா கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், மார்ச் 5-ம் தேதி, ‘மீன் அமிலம் தயாரித்தல்’ 26-ம் தேதி, ‘இயற்கை உரம் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் `100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652-246296

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தண்டோரா

 காளான் வளர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில், மார்ச் 7, 8-ம் தேதிகளில் ‘காளான் வளர்ப்பு மற்றும் மதிப்புக் கூட்டுதல் தொழில்நுட்பங்கள்’ 9, 10-ம் தேதிகளில் ‘வெள்ளாடு வளர்ப்பு’ 11-ம் தேதி, தென்னையில் ஊடுபயிர் தொழில்நுட்பங்கள் மற்றும் காய்கறி சாகுபடித் தொழில்நுட்பங்கள்’ 16,17-ம் தேதிகளில் ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ 22,23-ம் தேதிகளில் ‘பழங்களில் மதிப்புக் கூட்டுதல்’ 29-ம் தேதி ‘தோட்டக்கலை சாகுபடி முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு பயிற்சிக்கும் `100 கட்டணம். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 99429-78688, தொலைபேசி: 0461-2269306

இலவசப் பயிற்சிகள்


கோட்டை கட்டும் பயிற்சி!

திருவாரூர் மாவட்டம், ஆதிரெங்கம் இயற்கை விவசாயப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மார்ச் 7-ம் தேதி ‘பாரம்பர்ய முறையில் நெல் கோட்டை கட்டும் செய்முறைப் பயிற்சி’ நடைபெற உள்ளது. முன்னோடி இயற்கை விவசாயிகள் பயிற்சி மற்றும் கருத்துரை வழங்க இருக்கிறார்கள். மதிய உணவு வழங்கப்படும். அனுமதி இலவசம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04369-220954 செல்போன்: 94433-20954

தண்டோரா

பசுந்தீவன உற்பத்தி!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில், மார்ச் 3-ம் தேதி ‘மாடியில் காய்கறித்தோட்டம்’ மற்றும் ‘விரால் மீன் வளர்ப்பு’ 8-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’ 15-ம் தேதி, ‘இயற்கை உரங்கள் உற்பத்தி’ 28-ம் தேதி, ‘பசுந்தீவன உற்பத்தி’ மற்றும் விதை உற்பத்தி’ 29-ம் தேதி, ‘மசாலாப்பொடி தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044-27452371

நிலக்கடலை

நாமக்கல் மாவட்டம், வேளாண் அறிவியல் மையத்தில், மார்ச் 28-ம் தேதி, ‘மண்புழு உரம் தயாரித்தல்’ 29-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ 30-ம் தேதி, ‘மாடியில் காய்கறித்தோட்டம் அமைத்தல்’ 31-ம் தேதி, ‘நிலக்கடலையில் பூச்சி, நோய் மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 04286-266345.

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

பசுமைக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism