Published:Updated:

கெட்டுப்போன குளத்தை மீட்டெடுத்த இ.எம்

கெட்டுப்போன குளத்தை மீட்டெடுத்த இ.எம்
பிரீமியம் ஸ்டோரி
கெட்டுப்போன குளத்தை மீட்டெடுத்த இ.எம்

கொசுத்தொல்லை இனி இல்லை...ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

கெட்டுப்போன குளத்தை மீட்டெடுத்த இ.எம்

கொசுத்தொல்லை இனி இல்லை...ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

Published:Updated:
கெட்டுப்போன குளத்தை மீட்டெடுத்த இ.எம்
பிரீமியம் ஸ்டோரி
கெட்டுப்போன குளத்தை மீட்டெடுத்த இ.எம்

*மோசமான நீர்நிலையை மீட்டெடுக்கலாம்.

*சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி.

*சொட்டு நீர்க் குழாய்களில் உள்ள உப்பைக் கரைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

*ஒரு லிட்டர் தயாரிக்க, 25 ரூபாய்தான் செலவு.

யற்கை வேளாண்மையில் பெரும்பங்கு வகிக்கும் திறன்மிகு நுண்ணுயிரிப் Effective micro organism - EM (இ.எம் கரைசல்) பயிர்களின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், மோசமான நீர்நிலைகளை மீட்டெடுக்கவும், பயன்படும் என்பதை சோதனை மூலம் நிருபித்திருக்கிறார், திண்டுக்கல் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை விரிவாக்க அலுவலரும், நீர் மேலாண்மை ஆலோசகருமான பிரிட்டோ ராஜ்.

கெட்டுப்போன குளத்தை மீட்டெடுத்த இ.எம்

திண்டுக்கல் மாநகரிலிருக்கும் மலைக்கோட்டைக்குப் பின்புறம் உள்ளது, முத்தழகுப்பட்டி கிராமம். ஒரு காலத்தில் மூன்று போகம் விளைந்த செழிப்பான பகுதி. அதற்குக் காரணம் இந்தப் பகுதியில் உள்ள நாகசமுத்திரம் கண்மாய். ஆனால், கால ஓட்டத்தில் கண்மாய்க்குரிய நீர்வழித்தடங்கள் மறைந்து... நகரின் சாக்கடைத் தண்ணீர் கண்மாயில் கலந்ததன் விளைவாக, நீர் நிறம் மாறி விவசாயத்துக்குப் பயனில்லாமல் போய் விட்டது.

இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பாக இந்தப் பகுதியில் அதிகளவு நத்தைகள் உருவாயின. அவை, பயிர்களை முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டதால், பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட பிரிட்டோ ராஜ், அந்தப் பகுதிக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்து, பிரச்னைகளை ஆராய்ந்து, இறுதியாக ஒரு தீர்வை முன்வைத்துள்ளார். அந்த தீர்வுதான் இ.எம்.

கெட்டுப்போன குளத்தை மீட்டெடுத்த இ.எம்

இது தொடர்பாக, பிரிட்டோ ராஜிடம் பேசினோம். “இப்பவும், நகரத்துக்குத் தேவையான கீரைகளில் கணிசமான அளவு முத்தழகுப்பட்டியில் இருந்துதான் வருது. இந்நிலையில, நத்தைத் தொல்லை அதிகமா இருக்குதுனு சொன்னதும், நான் அங்க போய் பார்த்தேன். அங்க இருந்த நத்தைகள் உருவத்துல ரொம்ப பெருசா, வழக்கத்துக்கு மாறான அளவுல இருந்ததால, அதுல சிலதை தூத்துக்குடி கடல்சார் ஆராய்ச்சி நிலையத்துக்கும், பெங்களூரு பூச்சிகள் ஆராய்ச்சி மையத்துக்கும் பரிசோதனைக்காக அனுப்பினோம். பரிசோதனை முடிவுல, குளத்துல தேங்கி நிற்கிற தண்ணியில வேதிப்பொருட்கள் கலந்திருக்கு. அதனாலதான் நத்தையோட உருவம் பெருசாகியிருக்கு’னு சொன்னாங்க. அந்தக் குளத்தை நம்பி, கிட்டத்தட்ட 125 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. குளத்தை சரிசெய்தால்தான் நத்தைப் பிரச்னையைத் தீர்க்க முடியும்ங்கிற நிலையில், இயற்கை முறையில் குளத்தை சுத்திகரிப்பதற்கான முயற்சியில் இறங்கினோம்.

கெட்டுப்போன குளத்தை மீட்டெடுத்த இ.எம்

மாற்றம் ஏற்படுத்திய நம்பிக்கை!

இ.எம் திறமியை வீட்டுலயே தயாரிச்சு எடுத்துக்கிட்டு, அந்தப் பகுதி விவசாயிகளோட சேர்ந்து, குளம், சாக்கடை கலக்கும் இடங்கள், அதிகமா கொசு இருக்கும் இடங்கள்னு பதினோரு இடங்கள்ல...

20 லிட்டர் தண்ணியில 100 மில்லி வீதம் கலந்து தெளிச்சோம். 10 நாள்ல சாக்கடை கலக்கும் இடங்கள்ல வீசுன துர்நாற்றம் குறைஞ்சிடுச்சு. ஆகாயத்தாமரை பட்டுப் போயிருந்தது. நத்தைகளோட எண்ணிக்கையும் குறைய ஆரம்பிச்சது. குளத்தில் இருந்த வேதிப்பொருட்களின் தன்மை மாறி, தலைப் பிரட்டை மாதிரியான உயிரினங்கள் உருவாக ஆரம்பிச்சுது. கொசுக்களோட எண்ணிக்கையும் குறைஞ்சிடுச்சு. இந்த மாற்றங்களைப் பார்த்த விவசாயிகள், இ.எம். திறமியைப் பத்தி விரிவா தெரிஞ்சுக்க விரும்பினாங்க.
அவங்களுக்காக, ஜனவரி 26-ம் தேதி, அந்த ஊர்ல பொது இடத்துல கூடி பள்ளி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் அனைவருக்கும் இ.எம் தயாரிக்கிற விதத்தை செய்து காட்டினேன். இப்ப, விவசாயிகளே தயாரிச்சு, பயிர்களுக்குப் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. நத்தை பிரச்னை இப்ப இல்லவே இல்லை” என்றார்.

கெட்டுப்போன குளத்தை மீட்டெடுத்த இ.எம்

கொஞ்சம் கரைசல்... நிறைய மாற்றம்!

இ.எம். ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்துப் பேசிய நாகசமுத்திரம் கண்மாய் பாசன விவசாய சங்கத் தலைவர் நிக்கோலஸ், “ஆரம்பத்துல நான் இதை நம்பலை. இவ்ளோ பெரிய குளத்துல அங்கங்க, கொஞ்சம் போல மருந்து (இ.எம்) விட்டா, எப்படி சரியாகும்னு நினைச்சேன். ஆனா, பத்து நாள்லயே மாற்றம் தெரிய ஆரம்பிச்சதும்தான் நம்பிக்கை வந்துச்சு. குளத்துல இருந்து எப்பவும் வீசுற சாக்கடை நாத்தம் முதல்ல காணாமப் போச்சு. அப்புறம் கொசு குறைஞ்சது. இப்ப, ஊருக்குள்ள இந்த திரவத்தை அடிக்கடி தெளிக்கிறதால, ஊருக்குள்ளயும் கொசுத் தொல்லை குறைஞ்சிருக்குனு மக்கள் சந்தோஷப்படுறாங்க. அப்பறம் குளத்துல இருந்த ஆகாயத்தாமரை பட்டுப்போக ஆரம்பிச்சுது.

கெட்டுப்போன குளத்தை மீட்டெடுத்த இ.எம்

மீன்கொத்தியும் ஆயிரக்கணக்கான வெள்ளை நிற கொக்குகளும் குளத்துக்கு வர ஆரம்பிச்சதும், எல்லாரும் குளத்தை ஆச்சர்யமா பாக்குறாங்க. கொஞ்சூண்டு தண்ணிக்கு இப்படி சக்தியானு ஆச்சர்யமா இருக்கு. இப்ப, எங்க பகுதி விவசாயிங்க, கீரைக்கு இதைத் தெளிக்க ஆரம்பிச்சிருக்காங்க. இதை ‘சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி’னு சொல்லலாம். அதிசயம் மாதிரி நடந்திருக்கு. கீரைகள் இப்ப ‘தளதள’னு வளருது. எங்க பகுதியில பெரும்பாலான நிலங்கள்ல சாக்கடை தண்ணி தேங்கி நிக்குது. அந்த நிலங்கள்லயும் இ.எம். பயன்படுத்தி சீர்படுத்துற முயற்சியில அடுத்து ஈடுபட போறோம்” என்றார், மகிழ்ச்சியாக.

இ.எம் தயாரிக்கும் முறை!

20 லிட்டர் கொள்ளளவுள்ள மூடியுள்ள டிரம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், 17 லிட்டர் குளோரின் கலக்காத தண்ணீர் (போர்வெல் தண்ணீர்) ஊற்றிக்கொள்ள வேண்டும். 2 கிலோ கருப்பட்டியைக் காய்ச்சி பாகு பதத்துக்கு மாற்றி, தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். அத்துடன் ஒரு லிட்டர் இ.எம்.கரைசலை (முதல்முறை தயாரிக்கும் போது, வெளியில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். அடுத்த முறை நாம் தயாரிக்கும், இ.எம் கரைசலையே பயன்படுத்திக் கொள்ளலாம்) கலந்து... மூடியால் மூடி, வெயில் படாத இடத்தில் டிரம்மை வைத்து விட வேண்டும். தினமும் ஒருமுறை, மூடியை லேசாகத் திறந்து உடனே மூடி விட வேண்டும். இதனால், நொதிக்கும் திறன் அதிகரிக்கும். 10 நாள் கழித்து மூடியைத் திறந்து பார்த்தால், மேல் பகுதியில், வெள்ளை நிற ஏடு போன்று படிந்திருக்கும். இனிப்பு கலந்த ஒரு வாடை வரும். இந்தக் கலவைதான் செறிவூட்டப்பட்ட திறன்மிகு நுண்ணுயிரி (இ.எம்) என அழைக்கப்படுகிறது. இதை பாட்டில்களில் அடைத்து வைத்துக் கொள்ளலாம். தேவைக்கேற்ப தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். 

இ.எம் பயன்பாடு!

இ.எம்... நீரின் கடினத்தன்மை, அமிலத்தன்மையை நீக்கும். கொசுக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும். சொட்டுநீர்க் குழாய் வழியாக இதைச் செலுத்தும் போது, குழாய்களில் படிந்துள்ள உப்பு நீக்கப்படும். குப்பை, கூளம் நிறைந்த இடங்கள், மாட்டுக்கொட்டகை, சாணக்குவியல் உள்ள இடங்களில் தெளித்தால், குப்பைகள், சாணம் போன்றவை சீக்கிரம் மட்கும். நீர்நிலைகளைச் சுத்திகரிப்பதற்கு, 200 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் இ.எம் கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி கலந்தால் போதும்.

20 லிட்டர் இ.எம் தயாரிக்க, 500 ரூபாய்தான் செலவாகும். வெளிச்சந்தையில் ஒரு லிட்டர் இ.எம் 260 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதை விவசாயிகளே தயாரித்துப் பயன்படுத்தும்போது, செலவு குறைவதோடு, விளைச்சலும் நன்றாக இருக்கும். இதைச் செடிகளில் தெளிக்கும் போது, வளர்ச்சி நன்றாக இருக்கிறது. பூச்சி, நோய்த்தாக்குதல் குறைகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism