Published:Updated:

‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!

‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!
பிரீமியம் ஸ்டோரி
‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!

‘பசுமைப் புரட்சி’ பூமியில் ஒரு பரிதாபப் பயணம்த.ஜெயகுமார்

‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!

‘பசுமைப் புரட்சி’ பூமியில் ஒரு பரிதாபப் பயணம்த.ஜெயகுமார்

Published:Updated:
‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!
பிரீமியம் ஸ்டோரி
‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!

ந்தியாவின் வடமேற்குப் பகுதியில், பாகிஸ்தான் நாட்டு எல்லையில் உள்ள மாநிலம், பஞ்சாப். இது 50 ஆயிரத்து 362 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த மாநிலத்தில், மால்வா மண்டலத்தில் உள்ள பத்திண்டா, மான்சா, பரித்கோட், பெரோஸ்பூர், முக்த்சார், மோகா, பர்னாலா மற்றும் சங்ரூர் ஆகிய 8

‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!

மாவட்டங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிகை அதிகம். இப்பகுதிகளில் பி.டி பருத்தி அதிகம் பயிரிடப்படுகிறது. இதைத்தவிர நெல், கோதுமை மற்றும் காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன.

மால்வா மண்டலத்தில் அமைந்துள்ள மிகப் பெரிய ரயில் நிலையம் பத்திண்டா. பஞ்சாப் மாநிலத்தின் புற்றுநோயாளிகளை அழைத்துச் செல்லும், ‘அபோகர் ஜோத்பூர் பயணிகள் ரயில்’  இந்த வழியாகத்தான் செல்கிறது. இதைத்தான் கேன்சர் ரயில்’ (மரிசோன் கி ட்ரைன்) என்று அழைக்கிறார்கள். இங்கே ரயில் ஏறி, ராஜஸ்தான் மாநிலம் பிக்கானேர் நகருக்குச் சென்று... அங்கு மாநில அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரியோடு அடங்கிய புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பத்திண்டாவிலிருந்து தினமும் 8 ரயில்கள் பிக்கானேர் வழியாகச் செல்கின்றன. இதில் இரவு 9.30 மணிக்குப் புறப்படும் ரயிலில் புற்றுநோய் நோயாளிகள் அதிகம் செல்கிறார்கள். இந்த ரயில் பத்திண்டாவுக்கு அருகில் உள்ள அபோகரிலிருந்து ஜோத்பூர் செல்லும் பயணிகள் ரயில். இந்த ரயிலில் டிக்கெட் விலை குறைவு என்பதால், அதிகம் பேர் பயணிக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!

பஞ்சாப் மாநில துயரத்தின் சின்னமாக வர்ணிக்கப்படும் கேன்சர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் காண நடைமேடையில் காத்திருந்தோம். முழுக்க துயரம் தோய்ந்த முகங்களோடு பலர் அமர்ந்திருந்தனர். சோகத்துடன் அமர்ந்திருந்த முக்த்சார் மாவட்டம், மாலவுட் பகுதியைச் சேர்ந்த ரூப் சிங்கிடம் பேசினோம்.

“கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கும் என் சகோதரியைப் பார்ப்பதற்காக பிக்கானேருக்குச் செல்கிறேன். என்னுடைய சகோதரி குடும்பம் விவசாயத் தொழிலைச் செய்கிறது. 2014-ம் ஆண்டில்தான் அவருக்கு இந்நோய் இருப்பதை அறிந்தோம். அவருக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும். இதுவரை 6 முறை ‘கீமோதெரபி’ மருத்துவ சிகிச்சை அளித்திருக்கிறார்கள். இருந்தும் நோய் குணமாகவில்லை. மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாய் அலைந்து கொண்டிருக்கிறோம். ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சோகத்தைக் கசிய விட்டவர்,

‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!

“முக்த்சார் பகுதியில் யுரேனிய மூலக்கூறுகள் நிலத்தடி நீரில் கலந்திருப்பதாக மருத்துவ ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்துள்ளனர். குடிநீர், உணவு, சுவாசிக்கும் காற்றின் மூலமாக நோய்கள் பரவி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து அரசுக்கும் தெரியும். ஆனால், உருப்படியாக ஒரு புற்றுநோய் மருத்துவமனைகூட பஞ்சாபில் இல்லை. அதனால்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் பிக்கானேருக்கு செல்கிறோம். அங்கு குறைந்த செலவில் மருத்துவம் கிடைக்கிறது. கேன்சர் விஷயத்தில் அடித்தட்டு மக்கள் அதிகம் பாதித்திருக்கிறார்கள்.

மருத்துவர்கள், ‘உணவுப் பழக்கத்தை மாற்றுங்கள்... பூச்சிக்கொல்லி தெளிப்பதைக் குறையுங்கள்’ எனச் சொல்கிறார்கள். பசிக்காக சாப்பிடுபவர்களையும், வருமானத்துக்காக விவசாயம் செய்பவர்களையும், தடுத்து நிறுத்துவது எந்த விதத்தில் சாத்தியம் என்றும் தெரியவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறோம். இதுவரை அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!

சற்றுநேரத்தில் ரயில், நடைமேடையை வந்தடைந்தது. பயணிகளும் நோயாளிகளும் அவசர அவசரமாக ஏறினர். அவர்களோடு நாமும் ஒரு பெட்டியில் ஏறினோம். ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த பெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் கவுரிடம் பேசினோம். “நாங்கள் நெல், கோதுமை விவசாயம் செய்து வருகிறோம். எனக்கு 60 வயதாகிறது. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். பஞ்சாப் மாநிலத்தை ஒப்பிடும்போது, கட்டணம் குறைவான சிறப்பு மருத்துவமனைகள் ராஜஸ்தானில் இருப்பதால் சிகிச்சைக்காக அங்கு செல்கிறேன்” என்றவர் தொடர்ந்து பேச முடியாததால், படுத்துக் கொண்டார். இப்படி அந்த ரயில் முழுக்க நம்மிடம் பேசிய பலரும் வேதனையை வெளிப்படுத்தினர். அத்தனை புற்றுநோயாளிகளைப் பார்க்க பார்க்க, பசுமை புரட்சியின் மீது, அளவுகடந்த ஆத்திரம் பீறிட்டது.   

-பயணம் தொடரும்

லட்சத்தில் 90 பேருக்கு புற்றுநோய்!

உலக சுகாதார நிறுவனம் 2013-ம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பஞ்சாப் மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு சராசரியாக 90 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, தேசிய சராசரி விகிதத்தை விட அதிகம்’ எனவும் தெரிவித்துள்ளது. புற்றுநோய் விழிப்பு உணர்வு மற்றும் நோய்க்கான அறிகுறிகள் குறித்து பஞ்சாபில் நடத்தப்பட்ட முகாமின்போது வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கடந்த 5 ஆண்டுகளில் (2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை) 33 ஆயிரத்து 318 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர்’ என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதில் பருத்தி, கோதுமை அதிகம் பயிர் செய்யப்படும் லூதியானா, பத்திண்டா, சங்ரூர், மான்சா, முக்த்சார் மற்றும் பாட்டியாலா ஆகிய மாவட்டங்களில் மட்டுமே 14 ஆயிரத்து 682 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

ரத்தத்தில் பூச்சிக்கொல்லி மாதிரிகள்!

பத்திண்டா மாவட்டம், தல்வண்டி சபோ மண்டலத்தில் மாநில அரசால் அமைக்கப்பட்ட மருத்துவக்குழு புற்றுநோய் குறித்து 107 பேரிடம் ஆய்வு செய்தது. அப்போது அவர்களுடைய ரத்த மூலக்கூறுகளை ஆய்வு செய்ததில், பூச்சிக்கொல்லிகளில் பயன்படுத்தப்படும் அல்ட்ரின், ஹெப்டோகுளார், எண்டோசல்பான் போன்ற ரசாயனங்களின் மாதிரிகள் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. தல்வண்டி சபோ மண்டலம் காய்கறிகள் அதிகம் பயிர் செய்யப்படும் பகுதியாகும்.

புற்றுநோயாளிகள் எண்ணிக்கை உயரும்!

2012, 2013 ஆகிய இரண்டு ஆண்டுகளில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், பஞ்சாபில் புற்றுநோய் குறித்தான ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின்போது பஞ்சாப் மாநிலத்தில் 33 ஆயிரத்து 940 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்த எண்ணிக்கை விரைவில் 45 ஆயிரத்து 716 ஆக உயரும் என்றும் பதிவு செய்துள்ளது. 

சிகிச்சை எடுக்கக்கூட தெரியாது!

‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!புற்றுநோய் குறித்து கேத்தி விர்ஷாத் மிஷன் அமைப்பின் செயல் இயக்குநர் உமேந்திரா தத் பேசும்போது, “புற்றுநோய் தாக்கியுள்ளவர்கள், பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஏழை, நடுத்தர மக்கள். இவர்களுக்கு எப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுகூட தெரியாது. அதனால்தான் பெரும்பான்மையான உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க பஞ்சாப் அரசு தவறி விட்டது. இதனால், ஆண்டுக்கு ஆண்டு புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநில அரசு தலையிட்டு உண்மையான ஆய்வறிக்கை செய்தால்தான், புற்றுநோய் குறித்தான உண்மையான கணக்கீடு கிடைக்கும்” என்றார்.

நீரில் கனமான ரசாயனங்கள்!

‘கேன்சர்’ எக்ஸ்பிரஸ்!“பஞ்சாப் மாநிலத்தில் ஓடும் ஆற்றுத் தண்ணீரிலும், நிலத்தடி நீரிலும் அதிகபட்ச கனமான ரசாயனங்கள் இருக்கின்றன. இதுதான்  புற்றுநோய்க்குப் பின்னணியாக இருக்கிறது. இதை, முழுமையாக ஆய்வு செய்து உண்மையை வெளிக்கொணர வேண்டும். ஏனென்றால், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வந்துவிட்டால், அது மரபியல் ரீதியில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் பரவக்கூடிய ஆபத்து உண்டு. அதனால்தான் குழந்தைகள், சிறுவர்கள் என்று புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்” என்று அதிர்ச்சி கலந்த எச்சரிக்கைத் தகவலை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார், உலகப் புகழ்பெற்ற செல்லியல் மருத்துவரான டாக்டர் ரத்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism