Published:Updated:

கறுப்பு நிற ‘காலா நமக்’ அரிசி...

கறுப்பு நிற ‘காலா நமக்’ அரிசி...
பிரீமியம் ஸ்டோரி
கறுப்பு நிற ‘காலா நமக்’ அரிசி...

பாரம்பர்ய ரகங்களில் கலக்கும் விவசாயி!கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்

கறுப்பு நிற ‘காலா நமக்’ அரிசி...

பாரம்பர்ய ரகங்களில் கலக்கும் விவசாயி!கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்

Published:Updated:
கறுப்பு நிற ‘காலா நமக்’ அரிசி...
பிரீமியம் ஸ்டோரி
கறுப்பு நிற ‘காலா நமக்’ அரிசி...

வீரிய ரக பயிர்களை இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்தாலும், மகசூலுக்குக் குறைவிருக்காது என்றாலும்... பல இயற்கை விவசாயிகள் பாரம்பர்ய, நாட்டு ரக பயிர்களைத்தான் தேடிப்பிடித்து சாகுபடி செய்து வருகிறார்கள். குறிப்பாக பல நெல் விவசாயிகள், பாரம்பர்ய ரகங்களுக்கு மாறியிருக்கிறார்கள். அவர்களுக்காகவே பாரம்பர்ய ரகங்கள் குறித்தும் அவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகள் குறித்தும் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது, ‘பசுமை விகடன்’. இதன் மூலமாக பாரம்பர்ய ரகங்களைத் தேடி வாங்கி சாகுபடி செய்யும் பலர் உண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், தஞ்சாவூர் மாவட்டம் ,குருவாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி.

கறுப்பு நிற ‘காலா நமக்’ அரிசி...

மூணே கால் ஏக்கர்... 5 ரக நெல்!

நெல் வயலில் ஆசைத்தம்பியைச் சந்தித்தோம். “நான் மூணு வருஷமா இயற்கை விவசாயம் செய்துக்கிட்டு இருக்கேன். போன வருஷம்  சோதனைமுயற்சியா அரை ஏக்கர் நிலத்துல மட்டும் மாப்பிள்ளை சம்பா ரக நெல்லை சாகுபடி செய்து பார்த்தேன். அதுல நல்ல மகசூல் கிடைத்தது. உடனே, எனக்கு ஆர்வமும் நம்பிக்கையும் வந்ததால, விதவிதமான பாரம்பர்ய நெல் ரகங்களை சாகுபடி மொத்தமுள்ள செய்யணும்னு முடிவெடுத்தேன். 30 சென்ட் நிலத்துல காலா நமக், 35 சென்ட் நிலத்துல சீரக சம்பா, 50 சென்ட் நிலத்துல மாப்பிள்ளை சம்பா, 60 சென்ட் நிலத்துல தங்க சம்பா, ஒன்றரை ஏக்கர் நிலத்துல வெள்ளைப் பொன்னினு மூணேகால் ஏக்கர் நிலத்துல... 5 பாரம்பர்ய நெல் வகைகளை இப்போ சாகுபடி செய்திருக்கேன். இதனால, எங்க பகுதி விவசாயிகள்கிட்ட எனக்கு தனி மவுசு கிடைச்சிருக்கு.

பாரம்பர்ய நெல் ரகங்கள் குறித்து, ‘பசுமை விகடன்’ மூலமாதான் தெரிஞ்சிக்கிட்டேன். குறிப்பா, காலா நமக் விதைநெல் பசுமை விகடன் மூலமாதான் கிடைச்சது.  ‘நீங்கள் கேட்டவை’ பகுதியை விரும்பிப் படிப்பேன். அதுலதான், ‘காலா நமக் அரிசி...  புற்றுநோய், மூளை நரம்பு, ரத்தம், சிறுநீரகம், தோல் தொடர்பான நோய்களைக் குணமாக்கும். அது ‘கவுதம புத்தர்’ காலத்து நெல். கறுப்பு நிறத்துல இருக்கும். மனித உடலுக்குத் தேவையான பல வகையான சத்துக்களும், தாது உப்புக்களும் காலா நமக்ல நிறைஞ்சிருக்கும்’ங்கிற தகவலை மருத்துவர் மணி பதில் சொல்லியிருந்தார். அதைப்படிச்சதும், இத்தனை சிறப்பு மிக்க நெல்லை நானும் சாகுபடி செய்யணும்னு ஆசைப்பட்டேன். அந்த சமயத் துலத்தான்  ‘பசுமை சந்தை’ பகுதியில திருவண்ணாமலையை சேர்ந்த கிருஷ்ணன்ங்கிற விவசாயி தன்னிடம் காலா நமக் விதைநெல் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அவர் கிட்ட ரெண்டு கிலோ மட்டும் விதைநெல் கிடைச்சுது. அதைத்தான் சாகுபடி செய்திருக்கேன்.

இதோட மருத்துவ குணங்கள் குறித்து தெரிஞ்சுக்கிட்ட பக்கத்துத் தோட்ட விவசாயிகள், ஆச்சர்யமா பாக்கிறாங்க. அவங்களும் என் கிட்ட விதைநெல் கேட்டுக் காத்திருக்காங்க” என்று பெருமை யோடு சொன்ன ஆசைத் தம்பி வயலைச் சுற்றிக் காட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கறுப்பு நிற ‘காலா நமக்’ அரிசி...

“இது களியும் மணலும் கலந்த பூமி. அதனால நெல் சாகுபடிதான் சரிப்பட்டு வரும். காலா நமக் விதைநெல் குறைவாக கிடைச்சதால, 30 சென்ட்ல மட்டும்தான் நடவு போட முடிஞ்சுது. கடுமையான மழையிலும், எந்த பாதிப்பும் இல்லாம வாளிப்பா வளர்ந்து வந்தது. நோய்த்தாக்குதலும் இல்லை. நெல்மணிகள் நல்லா திரட்சியா, அதிக எண்ணிக்கையில இருந்தது. பயிர் நாலடி உயரத்துக்கு மேல இருந்துச்சு. அதனால வழக்கத்தை விட அதிக வைக்கோல் கிடைச்சது.

30 சென்ட்ல ஆறு மூட்டை (60 கிலோ) அளவு மகசூல் கிடைச்சது. அப்படியே விதைநெல்லாவே ஒரு கிலோ 50 ரூபாய்னு விற்பனை செய்துடலாம்னு இருக்கேன். என் எதிர்பார்ப்புபடி விற்பனை ஆச்சுனா... 18 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்கும். இதுவரை 4 ஆயிரத்து 500 ருபாய் செலவாகியுள்ளது. அது போக, 13 ஆயிரத்து 500 ரூபாய் லாபமா நிக்கும்னு எதிர்பார்க்கிறேன்” என்ற ஆசைத்தம்பி நிறைவாக,

கறுப்பு நிற ‘காலா நமக்’ அரிசி...

“பசுமை விகடனாலதான் பாரம்பர்ய நெல் சாகுபடியும், இயற்கை விவசாயமும் எனக்கு சாத்தியமாச்சு. அதுல வர்ற ஒவ்வொரு பகுதியுமே உபயோகமான பகுதிகள்தான். என்னை மாதிரி பல விவசாயிகளுக்கும் இது உறுதுணையா இருக்கு” என்று நெகிழ்ந்து போனவராகச் சொன்னார்.

தொடர்புக்கு,
ஆசைத்தம்பி,
செல்போன்: 96983-69927.

• 30 சென்ட் நிலத்தில் 360 கிலோ நெல் மகசூல்.

• ஒரு கிலோ விதைநெல் `50 ரூபாய்.

• பூச்சி, நோய் தாக்காது.

• புத்தர் காலத்து நெல் ரகம்

• தகவல் சொன்ன ‘புறா பாண்டி’!

ஒரு செடியில் 40 தூர்கள்!

காலா நமக் ரகத்தை சாகுபடி செய்த விதம் குறித்து ஆசைத்தம்பியின் அனுபவ பரிந்துரை..., 15 அடி நீளம், 5 அடி அகலம், அரையடி உயரத்துக்கு மேட்டுப்பாத்தி அமைத்து... அதில் 10 கிலோ மண்புழு உரத்தை, 20 கிலோ மணலில் கலந்து தூவ வேண்டும். பிறகு, முளை விட்ட காலா நமக் விதைநெல்லைத் தூவி, 15 கிலோ மண்புழு உரத்தை, தூவ வேண்டும். பாத்தியைச் சுற்றி ஒர் அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி, மறுநாள் காலையில் வடிய விட வேண்டும். இது போல மூன்று நாட்கள் செய்ய வேண்டும். பிறகு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, காய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 15-ம் நாள் நாற்றுகள் நடவுக்குத் தயாராகி விட்டன.

நாற்று தயாராவதற்கு முன்பிருந்தே நடவு வயலையும் தயார் செய்யலாம். 30 சென்ட் நிலத்தை உழுது அதில் 3 கிலோ தக்கைப்பூண்டு விதைத்து 40 நாட்கள் வளர்ந்தவுடன்... தண்ணீர் கட்டி, மடக்கி உழ வேண்டும். பிறகு, வரிசைக்கு வரிசை ஒரு அடி, செடிக்குச் செடி முக்கால் அடி இடைவெளியில் ஒரு குத்துக்கு 2 நாற்றுகள் என நடவு செய்து காய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர் கொடுத்து வர வேண்டும். நாற்று நடவு செய்த 5-ம் நாள், ஒரு கிலோ பாஸ்போ-பாக்டீரியா, ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ சூடோமோனஸ் ஆகியவற்றை 20 கிலோ மணலில் கலந்து வயலில் பரவலாகத் தூவ வேண்டும். 15-ம் நாள் பவர் வீடர் மூலம் களைகளை மண்ணுக்குள் அழுத்தி விட வேண்டும். 25-ம் நாள் 20 கிலோ மண்புழு உரத்தைத் தூவ வேண்டும். அதற்குப் பிறகு எந்த இடுபொருளும் கொடுக்கத் தேவையில்லை. பூச்சி மற்றும் நோய்களும் தாக்காது. ஒவ்வொரு நாற்றிலும் 40 தூர்கள் வரை கிளைத்துவரும். 130 நாளில் அறுவடை செய்யலாம்” என்றார்.

பாதியளவு அரிசியே போதும்!

காலா நமக் ரகத்தின் சிறப்பு குறித்துப் பேசிய முன்னோடி நெல் விவசாயி, ‘கட்டிமேடு’ ஜெயராமன், “மற்ற பாரம்பர்ய ரக அரிசிகளை விட, இதில் அதிக மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இது, சன்ன ரகமாக இருந்தாலும், சாதம் வேக தாமதமாகும். அதனால், வேக வைக்கும் போது தண்ணீர் அதிகமாக வைத்து வேக வைக்க வேண்டும். இதை பச்சரியாகப் பயன்படுத்துவது நல்லது. கஞ்சியாக வைத்துக் குடிக்க ஏற்றது. குறிப்பாக இன்சுலின் சுரப்புக் குறைபாடு உள்ளவர்களுக்கு இதன் கஞ்சி நல்ல உணவு. பொதுவாக, மற்ற ரக அரிசி ஒரு கிலோ பயன்படுத்தும் இடத்தில் இதை அரை கிலோ அளவு பயன்படுத்தினாலே போதும். சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும். இதை உண்பதால், உடலுக்குத் தேவையான ஊட்டங்கள் கிடைப்பதோடு, சில நோய்களும் தீரும்” என்றார்.

முன்னோர்களின் முத்தான யோசனை!

“மாப்பிளை சம்பா ரகம், நடவு செய்த 60-ம் நாள்ல 4 அடி உயரத்துக்கு வளர்ந்து இருந்துச்சு. அதுல தோகை ஒன்றரையடி உயரத்துக்கு இருந்துச்சு. தோகையை மட்டும் வெட்டி மாட்டுக்குப் போட்டேன். அடுத்த 10, 15 நாள்லயே திரும்பவும் 2 அடி உயரத்துக்கு தோகை வளர்ந்துடுச்சு. ஒரு முறை தோகையை வெட்டினா பயிர் கீழே சாயாது. பூச்சிகளும் வராது. நல்லாவும் மகசூல் கிடைக்கும். இது, நம்ம முன்னோர்கள் கடைபிடிச்ச முறைதான். அதைத்தான் நானும் செய்தேன்” என்கிறார், ஆசைத்தம்பி.

பட்டம்... வயது... மண்!

காலாநமக் ரகம் சம்பா பட்டத்துக்கு ஏற்ற ரகம். இது பாரம்பர்ய ரகம் என்பதால், வடிகால் வசதி உள்ள அனைத்து வகையான மண்ணிலும் நன்கு வளரும். குறிப்பாக, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளரக்கூடியது. இது, 120 நாட்களில் இருந்து 135 நாட்களுக்குள் அறுவடைக்கு வரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism