Published:Updated:

‘‘என் நிலத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை..!’’

‘‘என் நிலத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை..!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘என் நிலத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை..!’’

‘ஜீரோ பட்ஜெட் விவசாயி’ நடிகர் பிரகாஷ்ராஜ் பெருமிதம்பசுமைக் குழு, படங்கள்: என்.ஜி.மணிகண்டன், வீ.சிவக்குமார், தே.தீட்ஷித்

‘‘என் நிலத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை..!’’

‘ஜீரோ பட்ஜெட் விவசாயி’ நடிகர் பிரகாஷ்ராஜ் பெருமிதம்பசுமைக் குழு, படங்கள்: என்.ஜி.மணிகண்டன், வீ.சிவக்குமார், தே.தீட்ஷித்

Published:Updated:
‘‘என் நிலத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை..!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘என் நிலத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை..!’’
‘‘என் நிலத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை..!’’

டந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மஞ்சள் மாநகரான ஈரோட்டில் முதல்முறையாக ‘பசுமை விகடன்’ அக்ரி எக்ஸ்போ-2015 மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. அதன் அமோக வெற்றியைத் தொடர்ந்து, மலைக்கோட்டை மாநகரான திருச்சியில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நான்கு நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெற்றது, ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2016’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு. தினமும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது. நாள்தோறும் திருவிழா போல கூட்டம் கூட்டமாக விவசாயிகளும், பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கானோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

‘‘என் நிலத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை..!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திரைப்பட நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளரும் ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாயியுமான பிரகாஷ்ராஜ், கண்காட்சி மற்றும் கருத்தரங்கைத் துவக்கி வைத்தார். தைவான் நாட்டில் உள்ள உலக காய்கறி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் பூச்சியியல் ஆராய்ச்சிக் குழுத் தலைவர் முனைவர் சீனிவாசன், மலேசிய நாட்டில் செயல்பட்டு வரும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விவசாயக் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ், கர்நாடகாவைச் சேர்ந்த ஜீரோ பட்ஜெட் விவசாயி ‘பன்னூர்’ கிருஷ்ணப்பா, தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி நாகரத்தின நாயுடு உள்பட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். கண்காட்சியில் மாடித்தோட்டக் கருவிகள், சிறுதானிய உணவு அரங்குகள், நவீன உழவுக் கருவிகள், சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள், நர்சரிகள், பல்கலைக்கழக அரங்குகள், கால்நடைப் பண்ணைக் கருவிகள், சோலார் பம்ப்செட்கள்... என விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளுக்கான அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

‘‘என் நிலத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை..!’’

நான் நடிகன் இல்ல... விவசாயி!

விழாவில் சிறப்புரையாற்றிய பிரகாஷ்ராஜ், “விவசாயம், பேசுகிற விஷயமல்ல. ஆனாலும், நான் பேச வேண்டும். நான், விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன் அல்ல. நடிகரானேன், இயக்குநரானேன், தயாரிப்பாளரானேன். சென்னை, ஹைதராபாத் என்றில்லாமல், பல நாடுகளுக்கும் விமானத்திலேறி, வானத்திலேயே பறந்துகொண்டிருந்தேன். ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில், மண்ணுடன் எனக்கு சம்பந்தமில்லாமல் இருப்பதை உணர்ந்தேன். அதன் பிறகு, ஒரு நீண்ட தேடலின் முடிவில் இன்று ஒரு விவசாயியாக மாறி நிற்கிறேன். இன்று நாம் மோசமான சூழ்நிலையில் இருக்கிறோம். ஒரு தவறான விவசாயத்தைச் செய்து கொண்டு இருக்கிறோம்.

இந்த நேரத்தில் எனக்கு மகாபாரதக் கதை ஞாபகத்துக்கு வருகிறது. தர்மராஜன், தர்மராஜன்தான். ஆனால், அவனுக்கென ஒரே ஒரு சகுனி இருப்பான். அந்த சகுனி, தர்மராஜனையே சூதாட வைப்பான். நமது நாட்டில் விவசாயம் செய்கிற எல்லோருமே தர்மராஜன்கள்தான். ஆனால், அவர்களுக்கு சகுனிகள் அதிகமாக இருக்கிறார்கள். ரசாயன உரங்களை விற்பவர்கள், அதைத் தொடங்க அனுமதியளிக்கும் அரசாங்கங்கள், தவறான முறையைக் கற்றுக்கொடுக்கும் விஞ்ஞானிகள், எல்லோருமே சகுனிகள்தான். இவர்கள்தான் விவசாயிகளைச் சூதாட வைக்கிறார்கள்.

‘‘என் நிலத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை..!’’

இதனால், இன்று தாய்ப்பாலில் விஷம் கலந்த நிலையில் இருக்கிறோம். உண்ணும் உணவு, தண்ணீர் என எல்லாமே விஷமான நிலையில் இருக்கிறது. ஊருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை மாறி, தெருவுக்கு ஐந்து மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

ஒருசமயம் சாலைப்பயணம் மேற்கொண்டிருந்தேன். என் ஊரின் அருகில் சாலை ஓரங்களில் வேலையாட்கள் அதிகமாக நின்றார்கள். விசாரித்ததில், அவர்கள் அனைவருமே விவசாயிகள் எனத் தெரிந்தது. அவர்கள் கூலியானது எப்படி என எனக்குள் சந்தேகம் தோன்றியது. எல்லோருக்கும் நிலமிருக்கிறது, ஆனால், ரசாயன உரத்தால் அவர்கள் நிலத்தில் எதுவுமே வளரவில்லை. ஒரு விவசாயி, ரசாயன உரம் கொட்டி விவசாயம் செய்து நஷ்டமடைந்து தற்கொலை செய்துகொள்வதற்கு யார் காரணம், சகுனிகள்தானே?

‘‘என் நிலத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை..!’’

ஒரு நாள் படப்பிடிப்புக்காக மைசூரில் தங்கியிருந்தேன். அப்போது, சுபாஷ் பாலேக்கர் மைசூரில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, நேரில் சந்தித்தேன். ‘எனக்கும் விவசாயத்தைப் பத்தி சொல்லிக்கொடுங்க’ எனக் கேட்டேன். ‘அது சொன்னா புரியாது, வா போகலாம்’ என்று சொல்லி கர்நாடக எழுத்தாளர் ஒருவரின் பண்ணைக்கு அழைத்துச் சென்றார். அந்தப் பண்ணையில் அவர் சொல்லிக் கொடுத்த விஷயங்களைக் கேட்டு, என்னோட பண்ணைகளில் பரீட்சை செய்து பார்த்து, இன்னைக்கு ஜீரோ பட்ஜெட் விவசாயியாக உங்கள் முன்னால் நிற்கிறேன். அவர், ‘உங்க பூமியில ஒரு பைசா கூட போடக்கூடாது’ என்றார். அவரைப் பார்த்து வந்த பிறகு, இதுவரை என் நிலத்தில் இடுபொருட்களுக்காக ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை. போடவில்லை. என் நிலத்தில் விளைந்த காய்கறிகளை, நேரடியாக விற்பனை செய்யப் போகிறேன். நான், நடிகன் என்பதை விட ‘விவசாயி’ என்று சொல்லிக் கொள்வதைத்தான் பெருமையாக நினைக்கிறேன்.

இறுதியாக ஒன்றைச் சொல்கிறேன், இயற்கையைக் காப்பாற்ற போறோம் என்கிற ஆணவம் நமக்கு வேண்டாம். இயற்கை நம்மை விட மிகப்பெரியது. இயற்கை இல்லாமல் மனிதன் இருக்க முடியாது. ஆனால், மனிதன் இல்லாமல் இயற்கையால் வாழ முடியும். பொழுதுபோக்குக்காக இல்லாமல் விவசாயிகளுக்காக முழுமூச்சாக செயல்பட்டு வரும் ‘பசுமை விகட’னுக்கு என்னுடைய பாராட்டுக்கள்” என்று சொன்னார். 

‘‘என் நிலத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை..!’’

கண்காட்சியை பார்வையிட வந்திருந்தார் மாநிலங்களவை உறுப்பினர், ‘திருச்சி’ சிவா. அவரை மேடையேற்றி அவருடைய கருத்துக்களைப் பகிரச் சொன்னோம். “பொதுவாகவே எனக்கு இயற்கையின் மேல் ஆர்வம் உண்டு. நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகளில் ‘அடிப்படையில் யார்’ என்பதில், ‘வழக்கறிஞர்’ என்று குறிப்பிடாமல் ‘விவசாயி’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். என் தந்தை விட்டுச் சென்றிருந்த நிலங்களை விற்றுவிடலாம் என்றிருந்தேன். ஆனால், என் அம்மா, என் கணவர் விட்டுச் சென்ற நிலத்தை, நான் இருக்கும் வரை விற்கக் கூடாது என்றார். என் தாயார் மறைவுக்குப் பிறகு, என் மனைவி, ‘நான் இவற்றை கவனித்துக் கொள்கிறேன்’ என்று சொன்னார். என் தாயார் விட்டுவிட்டுப் போன நிலம் ஐந்து ஏக்கர்.

அதை 15 ஏக்கர் அளவில் மாற்றிக் காட்டினார் என் மனைவி. அவருக்குப் பிறகு இன்று வரை விவசாய நிலத்தை நான் விற்காமல் கவனித்து வருகிறேன். இன்றைக்கும் என்னை விவசாயியாக வைத்திருப்பது அந்த 15 ஏக்கர் நிலம்தான். அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை அனைத்து நாடுகளும் பொருளாதாரச் சரிவை சந்தித்தது. ஆனால், இந்தியா அந்த சரிவில் சிக்கவில்லை. காரணம், இந்தியா பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியிலும், உணவு உற்பத்தியிலும் தன்னிறைவு பெற்றதனால்தான். விளைநிலங்களின் அளவு குறையும்போது, உற்பத்தியைப் பெருக்க வீரியமுள்ள விதைகள் தேவைப்படும். விவசாயத்தில் இந்தியா இன்னமும் கூடுதலாகத் தன்னிறைவு பெறும் நிலைக்கு வளர வேண்டும். நாம் எதற்காகவும் வெளிநாட்டுக்காரனிடம் கை குலுக்கலாம், ஆனால், ஒரு காலத்திலும் அவனிடம் கையேந்தும் நிலை வரக்கூடாது. அதற்கு நம்மை தயார் செய்துகொள்வதற்காகத்தான் இந்தக் கருத்தரங்கும் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

‘‘என் நிலத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை..!’’

விழாவில், சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற உலக காய்கறி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் பூச்சியியல் ஆராய்ச்சிக் குழுத் தலைவர் முனைவர் சீனிவாசன், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விவசாயக் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ், ‘பன்னூர்’ கிருஷ்ணப்பா, நாகரத்தின நாயுடு மற்றும் பல்வேறு கருத்துரையாளர்களின் கருத்துக்கள் அடுத்த இதழில்...

பூரித்துப்போன பள்ளி மாணவ மாணவிகள்!

‘‘என் நிலத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை..!’’

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலப்பட்டி கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள், தலைமையாசிரியை சாலைவேலம்மா மற்றும் இரண்டு ஆசிரியைகளுடன் கண்காட்சி அரங்கைச் சுற்றி வந்தனர். “எங்க பாடப்புத்தகத்துல இயற்கை விவசாயம் குறித்த பாடங்கள் இருக்கு. 50 மாணவர்களும் மூணு ஆசிரியைகளும் ரெண்டு வேன்ல வந்திருக்கோம். கண்காட்சியில ஒவ்வொரு அரங்கையும் பார்த்து, கேள்வி கேட்டு பாடம் சம்பந்தமா என்னென்ன இருக்கோ எல்லாத்தையுமே குறிப்பெடுத்து வச்சிருக்கோம். காய்கறிகளோட விதைகள், நெல் வகைகள், சோலார் பவர் மூலம் இயங்குற பம்புசெட், நர்சரி செடிகள்னு எல்லாத்தையுமே பார்த்தோம். கண்காட்சி ரொம்ப பயனுள்ளதா இருந்துச்சு.

‘‘என் நிலத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை..!’’

இந்த மாதிரி விவசாயம் சம்பந்தப்பட்ட கண்காட்சிக்கு பள்ளியில இருந்து வர்றது இதுதான் முதல் தடவை. பாடப் புத்தகத்துல பார்த்த அத்தனையுமே நிஜத்துல பார்த்தோம். ரசாயன உரம் போட்டா மண்ணோட சத்துக்கள் காணாம போய் மண் மலடாயிடும். ஆனா, சாணம் போட்டு இயற்கை முறையில விவசாயம் செஞ்சா மண்ணுக்கு வளம் கூடுறதோட மகசூலும் அதிகரிக்கும்னு விளக்கமா தெரிஞ்சுக்கிட்டோம். இயற்கை விவசாயத்துல என்னென்ன வகையான இடுபொருட்கள் தெளிக்கணும்னு இடுபொருட்கள் சம்பந்தமான வீடியோவைப் பாத்தோம். ரொம்ப ரொம்ப பயனுள்ளதா இருந்துச்சு” என்றார், ஆறாம் வகுப்பு மாணவர் மணிகண்டன்.

‘பசுமை’ ஒப்பந்தம்!

‘‘என் நிலத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை..!’’

‘திருச்சி’ சிவா பேசும்போது, ‘எனது 15 ஏக்கர் நிலத்தில் இருந்து வருமானமே வருவதில்லை’ என கவலையோடு குறிப்பிட்டார். அதைச் சுட்டிக்காட்டி பேசிய பிரகாஷ்ராஜ், ‘உங்கள் 15 ஏக்கர் நிலத்திலிருந்து வருமானம் ஏதும் வருதில்லை என்று கவலையுடன் மேடையில் சொன்னீர்கள். உங்கள் நிலத்தை என்னிடம் ஒப்படையுங்கள். ஒரே ஆண்டில் இயற்கை விவசாயம் செய்து மாதிரிப் பண்ணையாக மாற்றிக் காட்டுகிறேன்’ என்றார். உடனே, மேடைக்கு வந்த சிவா, ‘இந்தக் கருத்தரங்கு மேடையிலேயே என்னுடைய 15 ஏக்கர் நிலத்தை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன். என் நிலத்தை இயற்கை பூமியாக, பசுமையாக மாதிரிப் பண்ணையாக மாற்றுவது உங்கள் பொறுப்பு. நான் நிலத்தை உங்களிடம் ஒப்படைத்ததற்கு கருத்தரங்குக்கு வந்திருக்கும் அனைவருமே சாட்சி’ என்று சந்தோஷம் பொங்க பிரகாஷ்ராஜுடன் ‘பசுமை’ ஒப்பந்தம் செய்துகொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism