Published:Updated:

‘‘குவாரி அனுமதியை ரத்து செய்யாவிட்டால், தேர்தலைப் புறக்கணிப்போம்’’

‘‘குவாரி அனுமதியை ரத்து செய்யாவிட்டால், தேர்தலைப் புறக்கணிப்போம்’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘குவாரி அனுமதியை ரத்து செய்யாவிட்டால், தேர்தலைப் புறக்கணிப்போம்’’

கொந்தளிக்கும் விவசாயிகள்...சூழல்இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

‘‘குவாரி அனுமதியை ரத்து செய்யாவிட்டால், தேர்தலைப் புறக்கணிப்போம்’’

கொந்தளிக்கும் விவசாயிகள்...சூழல்இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
‘‘குவாரி அனுமதியை ரத்து செய்யாவிட்டால், தேர்தலைப் புறக்கணிப்போம்’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘குவாரி அனுமதியை ரத்து செய்யாவிட்டால், தேர்தலைப் புறக்கணிப்போம்’’

விவசாயத்துக்கும், குடிநீருக்கும் வாழ்வாதாரமாக விளங்கும் ஆறுகள், குளங்களை தொழிற் சாலைகளுக்கு அரசு  தாரை வார்ப்பதும்... அதற்கெதிராக விவசாயிகள், கிராம மக்கள் போராடுவதும் இந்தியாவில் தொடர்கதை.

‘‘குவாரி அனுமதியை ரத்து செய்யாவிட்டால், தேர்தலைப் புறக்கணிப்போம்’’

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைய இருக்கும் பெப்சி ஆலைக்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க அரசு அனுமதி அளித்ததும், விவசாயிகளுடன் அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகள் பெப்சி ஆலை அனுமதியை ரத்து செய்யக்கோரி போராடின. அந்தப் பிரச்னையே இன்னும் முடிவடையாத நிலையில்... நாங்குனேரி தாலூகாவில் உள்ள கடம்போடுவாழ்வு கிராமத்தில், விவசாய நிலங்களுக்கு நடுவில் கிரானைட் குவாரி செயல்படத் தொடங்கியதில், கொதித்துப் போயுள்ளனர், பொதுமக்கள்.

கடந்த 4-ம் தேதி, குவாரி வேலைகளை நிறுத்தக் கோரியும், அனுமதியை ரத்துசெய்யக் கோரியும் நாங்குனேரி தாலூகா அலுவலகம் எதிரில் விவசாயிகள், கிராம மக்கள், அனைக்கட்சியினர் என அனைவரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 18 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பெண்கள் என சுமார் முன்னூறு பேர், ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘குவாரி அனுமதியை ரத்து செய்யாவிட்டால், தேர்தலைப் புறக்கணிப்போம்’’

ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாங்குனேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவருமான கிருஷ்ணன், “கடம்போடுவாழ்வு கிராமத்துல வாழை, நெல் சாகுபடி செய்ற நிலத்துக்கு நடுவுல குவாரி தோண்டி, கிரானைட் எடுக்க அரசு அனுமதி கொடுத்திருக்கு. மதுரை, மேலூரைச் சேர்ந்த ‘பி.எஸ் கிரானைட்ஸ்’ கிருஷ்ணமூர்த்தி என்பவர்தான் இந்த 20 ஏக்கர் இடத்தை வாங்கியிருக்கார். இதுல 7 ஏக்கர் பரப்புக்கு கிரானைட் தோண்டி எடுக்க அனுமதி வாங்கியிருக்காங்க, இதுல முதல்கட்டமா 1.465 ஹெக்டேர் நிலத்துல இப்போ வேலை நடந்துக்கிட்டு இருக்கு. விவசாய நிலத்துக்கும் குவாரிக்கும் 20 அடி தூரம் கூட இல்லை. குவாரி தோண்டுற இடத்துல இருந்து 200 மீட்டர் தூரத்துலயே 192 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய குளமும், 15 மீட்டர் தூரத்துல புளியங்குளம் பாசன ஓடையும் இருக்கு. இப்படி குவாரிக்குப் பக்கத்துலயும், குவாரியைச் சுத்தியும் விவசாய நிலங்கள் இருக்கிறப்போ அதிகாரிகள் முறையா ஆய்வு செய்யாமலே அனுமதி கொடுத்துட்டாங்க. விவசாயத்துக்கு உலை வைக்கும் இந்த குவாரியில் வேலைகளை நிறுத்தி, அனுமதியை ரத்து செய்யணும். இல்லேன்னா, இங்க விவசாயமே அழிஞ்சு போயிடும்” என்றார்.

தொடர்ந்துப் பேசிய போராட்டக் குழுத்தலைவர் செல்வ கருணாநிதி, “நாங்குனேரி தாலூகாவில் கடம்போடுவாழ்வு, சூரங்குடி, வடுகச்சிமதில், புலியூர்குறிச்சினு நாலு பஞ்சாயத்துக்குட்பட்ட 18 கிராமங்கள்ல நாப்பதாயிரம் மக்கள் வசிக்கிறாங்க. சுமார் ஆறாயிரம் ஏக்கர் அளவுல... நெல், வாழைதான் சாகுபடி செய்றோம். குடிநீருக்கும், விவசாயத்துக்கும் கடம்போடுவாழ்வு கஸ்பா குளம் தண்ணீர்தான். குவாரியில ஆழமாக குழி தோண்டினா...  குளத்துல தண்ணீர் நிற்காது, நில அதிர்வுல குளம் உடையுற அபாயமும் இருக்கு.

‘‘குவாரி அனுமதியை ரத்து செய்யாவிட்டால், தேர்தலைப் புறக்கணிப்போம்’’

கிராமத்து ரோடுகள் எல்லாம் 13 அடி அகலம்தான் இருக்கு. ஆனா, லாரி, பொக்லைன் போன்ற கனரக வாகனங்கள் வந்து போகணும்னா குறைஞ்சது 30 அடி ரோடு இருக்கணும். குவாரி அமைக்கணும்னா சுற்றிலும் குறிப்பிட்ட தூரத்துல விவசாய நிலமோ, வீடுகளோ இருக்கக்கூடாதுங்கிறது விதி. ஆனா, எதையும் கண்டுக்காம அனுமதி கொடுத்திருக்காங்க. மாவட்ட ஆட்சியர் கிட்ட மனு கொடுத்தும் நடவடிக்கை இல்ல. குவாரி அனுமதியை ரத்து செய்யலேன்னா, மாபெரும் உண்ணாவிரதம் இருப்போம். அதுக்கும் மசியலைனா, குடும்ப அட்டையையும், வாக்காளர் அடையாள அட்டையையும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைச்சிட்டு 18 கிராம மக்களும் வர்ற தேர்தலைப் புறக்கணிப்போம்” என்றார், கோபமாக.

‘‘குவாரி அனுமதியை ரத்து செய்யாவிட்டால், தேர்தலைப் புறக்கணிப்போம்’’

இது குறித்து சேரன்மகா தேவி கோட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் பேசினோம். “கடந்த 2014-ம் ஆண்டே கிரானைட் குவாரிக்கு கனிமவளத்துறையால் அனுமதி வழங்கப் பட்டுவிட்டது. ஆனால், அவர்கள் பணியை தற்போதுதான் தொடங்கி உள்ளார்கள். கடம்போடுவாழ்வு கிராம விவசாயிகள் குவாரியால் விவசாயத்துக்கும், குடிநீர் ஆதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என என்னிடம் மனு கொடுத்துள்ளார்கள். இன்னும் ஆய்வு செய்யவில்லை. விரைவில் கனிமவளத்துறை அதிகாரிகளுடன்  இணைந்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வோம்” என்றார்.

‘‘குவாரி அனுமதியை ரத்து செய்யாவிட்டால், தேர்தலைப் புறக்கணிப்போம்’’

குவாரி தரப்பில் நம்மிடம் யாரும் பேசத் தயாராக இல்லாத நிலையில்... கூடுதல் விவரங்களுக்காக, மாவட்ட ஆட்சியர் கருணாகரனைத் தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. குறுஞ்செய்தியில் தகவலை அனுப்பினோம். அதற்கு, ‘நான் ஒரு நாள் விடுமுறையில் இருக்கிறேன், தொழில்துறை அமைச்சரை தொடர்புகொள்ளுங்கள்’ என்று பதில் தகவல் அனுப்பினார். தொழில்துறை அமைச்சர் தங்கமணியை பல முறை தொடர்பு கொண்டும் அவர், நமது அழைப்பை ஏற்கவில்லை. 

உடனடியாக நடவடிக்கை எடுத்து, இப்பகுதி விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டியது அரசின் தலையாய கடமை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism