Published:Updated:

சென்னையில் ஓர் ஆச்சர்யம்... பதினைந்து ரூபாயில் பசியாறலாம்!

சென்னையில் ஓர் ஆச்சர்யம்... பதினைந்து ரூபாயில் பசியாறலாம்!
பிரீமியம் ஸ்டோரி
சென்னையில் ஓர் ஆச்சர்யம்... பதினைந்து ரூபாயில் பசியாறலாம்!

துரை.நாகராஜன், படங்கள்: பா.காளிமுத்து, ஜெ.வேங்கடராஜ்

சென்னையில் ஓர் ஆச்சர்யம்... பதினைந்து ரூபாயில் பசியாறலாம்!

துரை.நாகராஜன், படங்கள்: பா.காளிமுத்து, ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
சென்னையில் ஓர் ஆச்சர்யம்... பதினைந்து ரூபாயில் பசியாறலாம்!
பிரீமியம் ஸ்டோரி
சென்னையில் ஓர் ஆச்சர்யம்... பதினைந்து ரூபாயில் பசியாறலாம்!

குறைந்தபட்சம் ஐம்பது ரூபாயாவது இருந்தால்தான், பெருநகர சென்னை மாநகராட்சியில் ஓரளவுக்கு தரமான உணவை வாங்கி பசியாற முடியும். ஆனால், பதினைந்து ரூபாயில் பசியை ஆற்றி, தரத்தோடு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது சென்னை மாநகராட்சி வளாகத்தில் (ரிப்பன் பில்டிங்) செயல்பட்டு வரும் மூலிகை உணவகம்.

சென்னையில் ஓர் ஆச்சர்யம்... பதினைந்து ரூபாயில் பசியாறலாம்!

‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்ற வாசகத்துடன் வரவேற்கிறது இந்த மூலிகை உணவகம். உணவகத்துக்கு வெளியே தேநீர் கடை... அருகிலே மூலிகைப் பொடி விற்பனைப் பிரிவு என சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த உணவகம். மூலிகைகளின் வாசனை மூக்கைத் துளைக்கிறது. உணவுப் பட்டியலில்... என்னென்ன மூலிகைகளைப் பயன்படுத்தி என்னென்ன உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்கிற விவரங்களும் குறிப்பிடப்பட்டிருப்பது சிறப்பு.

காலைவேளையில் கறிவேப்பிலை இட்லி, ஆவாரம் பூ இட்லி, துளசி இட்லி, தினை அரிசி இட்லி, சாமை அரிசி இட்லி என்று இட்லி வகைகள் கிடைக்கின்றன. ஒரு இட்லியின் விலை 5 ரூபாய்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னையில் ஓர் ஆச்சர்யம்... பதினைந்து ரூபாயில் பசியாறலாம்!

அடுத்ததாக தோசை பிரிவில் முடக்கத்தான் தோசை, தூதுவளை தோசை, கம்பு தோசை, கேழ்வரகு தோசை, கறிவேப்பிலை தோசை, பொன்னாங்கண்ணி தோசை, கரிசலாங்கண்ணி தோசை, புதினா தோசை வகைகள் கிடைக்கின்றன. ஒரு தோசை 10 ரூபாய் மட்டுமே.

உணவகத்தின் மேலாளரிடம் பேசியபோது, “இந்த உணவகத்துல முடக்கத்தான் தோசையும், தூதுவளை தோசையும் ரொம்ப பிரபலம். ஏன்னா, முடக்கத்தான் மூட்டுவலிக்கு சிறந்தது. அதனால மூட்டுவலி இருக்கிற நிறைய பேரு இங்க சாப்பிட வர்றாங்க. இதேமாதிரி சளி, இருமலுக்கு தூதுவளை சிறப்பான மருந்து. அதனால நிறைய பேரு தூதுவளை தோசையை விரும்புறாங்க. இதோட ருசியும் நல்லா இருக்கு” என்றார். நாமும் ருசி பார்த்தோம். முடக்கத்தான் தோசை மிகுந்த ருசியாகவே இருந்தது.

சென்னையில் ஓர் ஆச்சர்யம்... பதினைந்து ரூபாயில் பசியாறலாம்!

மதிய வேளைக்கு விதவிதமான சாத வகைகள் கிடைக்கின்றன. கீரை சாதம், கறிவேப்பிலை சாதம், புதினா சாதம், கொத்தமல்லி சாதம், முடக்கத்தான் சாதம், தூதுவளை சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் என வரிசை கட்டுகின்றன சாதங்கள். இவை ஒவ்வொன்றின் விலையும் 10 ரூபாய் மட்டுமே என்பதுதான் ஆச்சர்யம்.

மதிய சாப்பாட்டில் இதுமட்டும்தானா? என ஊழியர்களிடம் கேட்டபோது, “புழுங்கல் அரிசி சாதம், ஆவாரம் பூ சாம்பார், முடக்கத்தான் சாம்பார், கொள்ளு ரசம், மணத்தக்காளி ரசம், காரக் குழம்பு, கீரைக் கூட்டு, மோர், புதினா மோர், மூலிகை மோர் என அனைத்தும் சேர்ந்த மதிய அளவு சாப்பாடு மொத்த விலை 15 ரூபாய்” என்றனர்.

மூலிகை தேநீர் பிரிவில் ஆவாரம் பூ தேநீர், நிலவேம்பு கஷாயம், கொள்ளு ரசம், தூதுவளை சூப், கொள்ளுப் பயறு, மூலிகை தேநீர், மூலிகை சூப், மூலிகை ஜூஸ், எள்ளு கொழுக்கட்டை, பணியாரம், பனங்கருப்பட்டி, குழிப்பணியாரம் என்று இருந்தது. அடை வகைகளில் முருங்கைக் கீரை அடை, முசுமுசுக்கை அடை, நவதானிய அடை ஆகியவையும் கடையில் மணம் பரப்புகின்றன. ஒவ்வொன்றின் விலை... 5 ரூபாய் மட்டுமே.

சென்னையில் ஓர் ஆச்சர்யம்... பதினைந்து ரூபாயில் பசியாறலாம்!

மூலிகைப்பொடி விற்பனைப் பிரிவில் அனைத்து மூலிகைப்பொடி வகைகளின் பெயர்களையும் எழுதி அதன் மருத்துவக் குணங்களையும் எழுதி வைத்திருக்கிறார்கள்.

அருகம்புல் பொடி: ரத்தத்தைத் சுத்தம் செய்யும். உடல் ஆரோக்கியமாகும்.

அதிமதுரப் பொடி: வயிற்றுப்புண், சளி, இருமல் போன்ற நோய்களுக்கு நல்லது

நெருஞ்சில் பொடி: நீர்க்கட்டு, நீர் எரிச்சல், உடல் பருமனைக் குறைக்கும்.

நிலவேம்புப் பொடி: - காய்ச்சல், சர்க்கரை நோய், வைரஸ் காய்ச்சல் நீங்கும்

இப்படி அந்தப் பட்டியல் நீள்கிறது.

நிறைவாக உணவகப் பொறுப்பாளர் சித்த மருத்துவர் வீரபாபுவிடம் பேசினோம்.

“மூலிகையின் மகத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க மேயர் சைதை துரைசாமி அவர்களின் ஒப்புதலோடு, நடத்திக் கொண்டு வருகிறேன். வாரத்தில் ஐந்து நாட்களும், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உணவகம் இயங்கும். ஊழியர்களிடம் அந்தந்த மூலிகையின் மகத்துவத்தை எடுத்துச் சொல்லி விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தி இருக்கிறேன். மாநகராட்சி அலுவலகத்தில் பெரும்பாலும் யாரும் வெளியே சென்று சாப்பிடுவதில்லை. இங்கேதான் சாப்பிட வருகிறார்கள். அந்த அளவுக்கு இந்த உணவகம் செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

சுவை, உடல் ஆரோக்கியம் என முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்தே மூலிகை உணவகத்தை நடத்தி வருகிறோம். லாபம் என்பது பார்க்க முடியாது, ஆனால் நஷ்டம் இல்லாமல் நடத்தி வருகிறோம். நஷ்டம் ஏற்படும்போது மேயர் ஈடுகட்டி கொள்வார்.

சென்னையில் ஓர் ஆச்சர்யம்... பதினைந்து ரூபாயில் பசியாறலாம்!

ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே நல்ல கூட்டம் இருந்தது. அரை மணிநேரம் ஆனாலும், வரிசையில் நின்று பொதுமக்கள் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். மொத்தம் ஒரு நாளைக்கு சராசரியாக 500 சாப்பாடு விற்பனையாகிறது. இப்போது டெல்லியில் நாடாளுமன்ற கேன்டீனில் கூட உணவு விலையை உயர்த்தியிருக்கிறார்கள். ஆனால், நான் ஆரம்பித்து ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒரே விலை 15 ரூபாய் மட்டும் வைத்து நடத்திகொண்டு வருகிறேன். எங்களது உணவகத்துக்கு வந்து சாப்பிட பழகியவர்கள் இன்று வரை தொடர்ந்து சாப்பிடுகிறார்கள்” என்று பெருமையோடு சொன்னார்.

ரோட்டோர கடைகளில் ஒரு தேநீரும் வடையும் சாப்பிட்டாலே, குறைந்தது 15 ரூபாய் ஆகிவிடும். சென்னையில் மூலிகை உணவு இப்படி மிகமிகக் குறைந்த விலையில் வழங்கப்படுவது... ஆச்சர்யமான விஷயம்தானே!

மக்களுக்கு மூலிகைகளின் பயன்பாடும், அதை சார்ந்த விழிப்பு உணர்வும் இதுபோன்ற உணவகங்களின் மூலமே ஏற்படுகிறது. மூலிகைகளைப் பயிர் செய்யும் விவசாயிகளும் இதன் மூலம் பயனடைகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களும், இந்த மூலிகை உணவகம் போன்று மாற்றப்பட்டால் எப்படி இருக்கும்?!

சென்னையில் ஓர் ஆச்சர்யம்... பதினைந்து ரூபாயில் பசியாறலாம்!

வீடியோ பதிவைப் பார்க்க... https://youtu.be/_50cSjPqoqY

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism