Published:Updated:

அறிவிப்புகளை நம்பி ஏமாந்தது போதும்... அரசிதழில் வெளியிடவேண்டும்!

அறிவிப்புகளை நம்பி ஏமாந்தது போதும்... அரசிதழில் வெளியிடவேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
அறிவிப்புகளை நம்பி ஏமாந்தது போதும்... அரசிதழில் வெளியிடவேண்டும்!

உச்சத்தை அடையும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்!போராட்டம் ஜி.பழனிச்சாமி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி

அறிவிப்புகளை நம்பி ஏமாந்தது போதும்... அரசிதழில் வெளியிடவேண்டும்!

உச்சத்தை அடையும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்!போராட்டம் ஜி.பழனிச்சாமி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி

Published:Updated:
அறிவிப்புகளை நம்பி ஏமாந்தது போதும்... அரசிதழில் வெளியிடவேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
அறிவிப்புகளை நம்பி ஏமாந்தது போதும்... அரசிதழில் வெளியிடவேண்டும்!

மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி ஈரோடு மாவட்டத்தில் கிழக்கு நோக்கி ஓடி காவிரி ஆற்றில் சங்கமிக்கிறது, பவானி நதி. இந்த நதியில் அதிகப்படியான உபரி நீர் வீணாகி வருகிறது. அப்படி வீணாகும் உபரி நீரை பில்லூர் அருகே, இணைப்பு வாய்க்கால் வெட்டி தெற்கு நோக்கி திசை திருப்பினால்... கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 31 பொதுப்பணித்துறை ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றிய குளங்கள் உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட நீர்நிலைகளை நிரப்பமுடியும். இந்தத் திட்டத்தை நிறைவேற்றக்கோரி, இப்பகுதி மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

அறிவிப்புகளை நம்பி ஏமாந்தது போதும்... அரசிதழில் வெளியிடவேண்டும்!

இதன் தொடர்ச்சியாக, அத்திக்கடவு-அவினாசி நீர் செறிவூட்டுத் திட்டத்தை உடனே நிறைவேற்றக்கோரி அவினாசி, சேயூர் மற்றும் பெருமாநல்லூர் ஆகிய இடங்களில் 54 பேர் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்கள். பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குழந்தைகள்,பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் உண்ணாவிரதப் பந்தலில் குழுமி உள்ளனர்.

இது குறித்து அத்திக்கடவு-அவினாசி திட்ட கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வெள்ளியங்கிரியிடம் பேசினோம். 10 நாள் பட்டினிப் போரின் களைப்பு, துளியும் இல்லாமல், எரிமலையாய் சீறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறிவிப்புகளை நம்பி ஏமாந்தது போதும்... அரசிதழில் வெளியிடவேண்டும்!

“30 ஆண்டு காலமாக தி.மு.க, அ.தி.மு.க என்று இரண்டு கட்சிகளுமே இத்திட்டத்தை நிறைவேற்றவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அத்திக்கடவு திட்டத்தை உடனே நிறைவேற்றுவோம் என்று ‘அல்வா‘ வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற பிறகு அதை மறந்து போவார்கள். இப்படி 30 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் ஒரு முடிவோடு இந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். நாங்கள் பாசனத்துக்கு பவானி நதி நீரைக் கேட்கவில்லை. தாகம் தீர்க்கத்தான் கேட்கிறோம். அதை நிறைவேற்ற என்ன தயக்கம் என்று தெரியவில்லை. அரசாங்கத்திடம் இருந்து அத்திக்கடவு திட்டத்துக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை எங்கள் பட்டினிப் போராட்டம் தொடர்ந்து நடக்கும்” என்று ஆணித்தரமாகச் சொன்னார், வெள்ளியங்கிரி.

மத்திய அரசிடம் ஏன் கையேந்த வேண்டும்?!

நீர்நிலைகளைக் காப்பாற்றும் அறப்போரில் பல அடக்கு முறைகளைச் சந்தித்தவரும், இந்த போராட்டக்குழுவின் அமைப்பாளருமான ‘எலச்சிப்பாளையம்’ பிரபாகரன், “அத்திக்கடவு திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்காக, ‘1,862 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்’ என்று அறிவிப்பு வெளியானது. மூத்த பொறியாளர் மோகனகிருஷ்ணன் தலைமையில் பொறியியல் வல்லுநர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு நீர்வழிப் பாதைகள், நீர்நிலைகள் குறித்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அன்று மத்திய அரசில் இடம் பெற்றிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம் இருந்து  நிதி ஒப்புதல் கிடைக்கவில்லை. எனவே, ‘இத்திட்டத்தை உடனே செயல்படுத்த முடியவில்லை’ என்று அன்றைய அ.தி.மு.க அரசு விளக்கம் கொடுத்து, திட்டத்தை கிடப்பில் போட்டது.

அறிவிப்புகளை நம்பி ஏமாந்தது போதும்... அரசிதழில் வெளியிடவேண்டும்!

எங்கள் கேள்வியெல்லாம் இதுதான். காலத்தால் நிற்காத ‘கண்ட கண்ட’ திட்டங்களுக்கு கோடி கோடியாக நிதி ஒதுக்கும் தமிழக அரசு, நீண்டகால திட்டமான அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசிடம் ஏன் கையேந்த வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய பட்டினிப்போர் குழுத்தலைவர் அவினாசி வேலுசாமி, “பிப்ரவரி 16-ம் தேதி நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பன்னீர் செல்வம், ‘அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கான கருத்துரு மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். இத்திட்டத்துக்கான பூர்வாங்கப் பணிகள் உடனே துவங்கும்’ என்று அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை நிறைவேற்றி அதை அரசு இதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் வரை ஓயமாட்டோம். எங்கள் பட்டினிப்போர் தொடர்ந்து நடக்கும்” என்றார்.

தமிழக அரசுதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

‘தண்ணீர் வேட்பாளர்!’

அறிவிப்புகளை நம்பி ஏமாந்தது போதும்... அரசிதழில் வெளியிடவேண்டும்!

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி போராடி வரும் ‘வாய்ஸ் ஆஃப் வாட்டர்’ அமைப்பின் அமைப்பாளர் ‘பெருந்துறை’ நல்லசிவம், “அவினாசி, திருப்பூர் வடக்கு, மேட்டுப்பாளையம், பெருந்துறை ஆகிய நான்கு தொகுதிகளில் வரும் சட்டமன்றத் தேர்தலில் ‘தண்ணீர் வேட்பாளர்’, என்கிற பெயரில், அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றும் ஒரே கோரிக்கையை முன்னிறுத்தி சுயேட்சை வேட்பாளர்கள் களம் இறங்க உள்ளனர்” என்றார்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism