Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

ஆடு வளர்ப்பு!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மார்ச் 22-ம் தேதி, ‘நாட்டுக் கோழி வளர்ப்பு’, 29-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’  போன்ற பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452-2483903.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தண்டோரா

வெண்பன்றி வளர்ப்பு!

சேலம் கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மார்ச் 22-ம் தேதி, ‘வெண்பன்றி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408

கோழி வளர்ப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மார்ச் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை,‘கோழி வளர்ப்புப் பயிற்சி’ நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 94455-37760.

காளான் உற்பத்தி!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், மார்ச் 18-ம் தேதி, ‘உயிர் உரங்கள் தொழில்நுட்பம்’, 22-ம் தேதி, ‘காளான் உற்பத்தித் தொழில்நுட்பம்’, 29-ம் தேதி’, ‘இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626.

தேனீ வளர்ப்பு!


சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், மார்ச் 17-ம் தேதி, ‘பஞ்சகவ்யா மற்றும் மண்புழு உரம் தயாரித்தல்’ 22-ம் தேதி, ‘கறவை மாட்டுப் பண்ணை அமைத்தல்’ 29-ம் தேதி, ‘இத்தாலியன் தேனி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 77088-20505, 94885-75716.

பசுந்தீவனம்!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில், மார்ச் 15-ம் தேதி, ‘இயற்கை உரங்கள் உற்பத்தி’ 28-ம் தேதி, ‘பசுந்தீவன மற்றும் விதை உற்பத்தி’ 29-ம் தேதி, ‘மசாலாப்பொடி தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044-27452371.

மாடித் தோட்டம்!

நாமக்கல் மாவட்டம், வேளாண் அறிவியல் மையத்தில், மார்ச் 28-ம் தேதி, ‘மண்புழு உரம் தயாரித்தல்’ 29-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ 30-ம் தேதி, ‘மாடியில் காய்கறித் தோட்டம் அமைத்தல்’ 31-ம் தேதி, ‘நிலக்கடலையில் பூச்சி, நோய் மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286-266345

மரம் வளர்ப்புக் கருத்தரங்கு!

காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம், ஆதிபராசக்தி ஆங்கிலப் பள்ளியில், மார்ச் 20-ம் தேதி ‘இயற்கை விவசாயப் பயிற்சி’, ‘மரம் வளர்ப்புப் பயிற்சி’ மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. முன்னோடி விவசாயிகள் ‘அரியனூர்’ ஜெயச்சந்திரன், ‘மரம்’ கருணாநிதி, ‘எழில்சோலை’ மாசிலாமணி, தாந்தோணி, போன்றவர்கள் கருத்துரை வழங்க உள்ளனர். காலை, மாலை தேநீர், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு அவசியம். அனுமதி இலவசம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 94449-74105

கட்டணப் பயிற்சிகள்

இயற்கை உரம்!

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தா கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், மார்ச் 26-ம் தேதி, ‘இயற்கை உரம் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652-246296

தண்டோரா

நாட்டுக்கோழி!

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில், மார்ச் 22,23-ம் தேதிகளில் ‘பழங்களில் மதிப்புக் கூட்டுதல்’ 29-ம் தேதி ‘தோட்டக்கலை சாகுபடி முறைகள்’ 30, 31 தேதிகளில் நாட்டுக் கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு பயிற்சிக்கும் ரூ100 கட்டணம். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 99429-78688

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.