Published:Updated:

தேங்காய் விலை வீழ்ச்சி... தீர்வு என்ன?

தேங்காய் விலை வீழ்ச்சி... தீர்வு என்ன?
பிரீமியம் ஸ்டோரி
தேங்காய் விலை வீழ்ச்சி... தீர்வு என்ன?

ஜி.பழனிச்சாமி, கு. ராமகிருஷ்ணன், படங்கள்: கே. குணசீலன்

தேங்காய் விலை வீழ்ச்சி... தீர்வு என்ன?

ஜி.பழனிச்சாமி, கு. ராமகிருஷ்ணன், படங்கள்: கே. குணசீலன்

Published:Updated:
தேங்காய் விலை வீழ்ச்சி... தீர்வு என்ன?
பிரீமியம் ஸ்டோரி
தேங்காய் விலை வீழ்ச்சி... தீர்வு என்ன?

தேங்காய் உற்பத்தியில் இதுவரை முதலிடத்தில் இருந்த கேரள மாநிலத்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி... முதலிடத்தைப் பிடித்துள்ளது, தமிழ்நாடு. அதே நேரத்தில், தமிழகத்தில் தேங்காய் மற்றும் கொப்பரை ஆகியவற்றின் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ கொப்பரை 70 ரூபாய்; உரித்த தேங்காய் ஒரு கிலோ 22 ரூபாய்; நார் மற்றும் குடுமியுடன் உள்ள தேங்காய் 10 ரூபாய் எனவும் விவசாயிகளுக்கு விலை கிடைத்து வந்தது. ஆனால், தற்போது 30 முதல் 40 சதவிகிதம் விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

தேங்காய் விலை வீழ்ச்சி... தீர்வு என்ன?

‘நியாயமான விலை கிடைக்க, மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி... தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகள் தேங்காய்களை சாலைகளில் உடைத்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

இது குறித்துப் பேசிய தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மாசிலாமணி, “வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய மத்திய அரசு தாராளமாக அனுமதி அளித்ததால், தேங்காய் எண்ணெய்க்கான தேவை குறைந்துகொண்டே வருகிறது. பாமாயில் இறக்குமதி செய்வதில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும். உரித்த தேங்காயை கிலோ 40 ரூபாய்க்கும், கொப்பரை தேங்காயை கிலோ 120 ரூபாய்க்கும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்”என்றார்.

“மத்திய அரசு ஒரு கிலோ கொப்பரைக்கு அடிப்படை ஆதார விலையாக 59 ரூபாய் 50 காசு என வழங்குகிறது. இதுவே மிகவும் குறைவான விலை. ஆனால், தமிழ்நாட்டில் இதற்கும் குறைவான விலைதான் கிடைத்து வருகிறது. 2012-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கொப்பரை கொள்முதல் செய்வதை தமிழக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் கொள்முதலைத் தொடங்க வேண்டும்” என்கிறார், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முன்னோடி தென்னை விவசாயி வீரசேனன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேங்காய் விலை வீழ்ச்சி... தீர்வு என்ன?

கள் இயக்க அமைப்பாளர் செ.நல்லசாமியிடம் பேசியபோது, “கொப்பரைக்கு சரியான விலை கிடைக்காத காரணத்தால் தென்னை விவசாயம் நசிந்து வருகிறது. கேரளாவைப் போல, தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யப்படவேண்டும். தென்னைப்பால் (கள்) இறக்க அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.

அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம்...