Published:Updated:

50 நாள்... 25 சென்ட்... ரூ 20 ஆயிரம் வருமானம்! புதினா!

50 நாள்... 25 சென்ட்... ரூ 20 ஆயிரம் வருமானம்! புதினா!
பிரீமியம் ஸ்டோரி
50 நாள்... 25 சென்ட்... ரூ 20 ஆயிரம் வருமானம்! புதினா!

கீரை வாங்கலையோ கீரை! ஆரோக்கியம்+அற்புத லாபம் தரும் ஆச்சர்யத் தொடர்ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

50 நாள்... 25 சென்ட்... ரூ 20 ஆயிரம் வருமானம்! புதினா!

கீரை வாங்கலையோ கீரை! ஆரோக்கியம்+அற்புத லாபம் தரும் ஆச்சர்யத் தொடர்ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

Published:Updated:
50 நாள்... 25 சென்ட்... ரூ 20 ஆயிரம் வருமானம்! புதினா!
பிரீமியம் ஸ்டோரி
50 நாள்... 25 சென்ட்... ரூ 20 ஆயிரம் வருமானம்! புதினா!

*நீர் தேங்காத வடிகால் வசதியுள்ள நிலங்கள் ஏற்றவை.

*தண்டுப் பகுதியை ஒடித்து நட்டால் போதும்

*ஒருமுறை நடவு... இரண்டு ஆண்டுகள் அறுவடை

*50 நாட்களுக்கு ஒரு அறுவடை

யற்கை, மனிதர்களுக்கு அளித்துள்ள எண்ணிலடங்கா அற்புதங்களில் முக்கியமானது கீரை. பணம் படைத்தவர்கள், ஏழைகள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஆரோக்கியம் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்... காணும் இடங்களிலெல்லாம் இயற்கையாகவே கீரைகள் வளர்ந்து வருகின்றன. தேவையின் அடிப்படையில் வணிக ரீதியாகவும் சாகுபடி செய்யப்படுகின்றன, கீரைகள். ஆனாலும், சாகுபடி செய்பவருக்கும் நுகர்வோருக்கும் பாதகமில்லாத விலையில்தான் விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்த நாட்களில் நிறைந்த வருமானம் கொடுக்கும் கீரைகளின் வரிசையில் புதினாவுக்கு முக்கிய இடம் உண்டு. உணவில் வாசனைக்காக சேர்த்துக் கொள்ளப்படும் புதினா, மிகச் சிறந்த மூலிகையும் கூட. இதில் இல்லாத சத்துக்களே இல்லை எனச் சொல்லும் அளவுக்கு பல்வேறு சத்துக்கள், அச்சிறிய இலைக்குள் சிறைப்பட்டுக் கிடக்கின்றன.

50 நாள்... 25 சென்ட்... ரூ 20 ஆயிரம் வருமானம்! புதினா!

“அருசி யொடுவாந்தி யக்கினி மந்தங்குருதி யழுக்குமலக் கொட்ட-விரியுந்துதியதன்று சோறிறங்குந் தொல்லுலகில் நாளும்புதியனல் மூலி புகல்” என புதினாவைக் கொண்டாடுகிறது, அகத்தியர் குணபாடம்.

‘வாந்தி மற்றும் உஷ்ண நோய்களை நீக்கி, ருசியின்மையைப் போக்கும் ஆற்றல் வாய்ந்தது. ரத்தத்தைத் தூய்மைப்படுத்தி வாயுத் தொந்தரவு, மலச்சிக்கல் ஆகியவற்றை போக்கும் தன்மை கொண்டது’ என்பது பாடலின் பொருள். உணவுகளை எளிதில் ஜீரணமாக்கும் தன்மை வாய்ந்த புதினாக்கீரையை, தலைவலியால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும் என்கிறது, சித்த மருத்துவம்.

ஒரு காலத்தில் மளிகைக் கடையில் காய்கறிகளுடன், இலவச இணைப்பாகக் கிடைத்து வந்த கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா கீரைகள் தற்போது இலவசமாக எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. அந்தளவுக்கு இவற்றின் வணிக மதிப்பு அதிகரித்துள்ளது. அதனால்தான்  கீரைகளின் சாகுபடிப் பரப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில், 25 சென்ட் இடத்தில் புதினாவை சாகுபடி செய்து 50 நாட்களுக்கு ஒரு முறை சத்தான வருமானம் பார்த்து வருகிறார், தேனி மாவட்டம், சீலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்.

ஆம்ஸ்ட்ராங் சொல்வதைக் கேளுங்கள்...

“எங்க ஊரு முழுக்கவே கீரைதான் முக்கியமான வெள்ளாமை. அதுக்குக் காரணம், எங்க ஊர் மண்வளம்தான். வாழை, தென்னை, நெல்னு எதைப் போட்டாலும் அள்ளிக்கொடுக்கிற மண்தான் எங்க வெள்ளாமைக்கான ஆதாரம். அதிலும் கீரைக்கு ஏத்த மணல் கலந்த செம்மண் நிலம் எங்களுக்கு வரப்பிரசாதம். அதனாலதான் ஒரு சென்ட் இடம் இருந்தாலும், அதுல ஏதாவது ஒரு கீரையை நட்டிருக்கோம். எங்க ஊர்லயே கீரை வியாபாரிங்களும் இருக்கிறதால, விற்பனைக்கும் பிரச்னையில்லை. சில பேர் கீரைகளைக் கட்டுகளாக அறுத்து விற்பனை செய்வாங்க. சில பேரு கான்ட்ராக்ட் பேசி விட்டுடுவாங்க. கான்ட்ராக்ட் எடுக்கிறவங்களே கீரைகளை அறுத்துக்குவாங்க. தண்ணி பாய்ச்சி வளர்க்கிறது மட்டும்தான் விவசாயிக்கு வேலை. அதனால, கீரையை விதைச்சு விட்டுட்டு பகல்ல மத்த தோட்டங்களுக்கு வேலைக்குப் போற ஆளுங்களும் இருக்காங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

50 நாள்... 25 சென்ட்... ரூ 20 ஆயிரம் வருமானம்! புதினா!

எனக்கு அஞ்சு ஏக்கர் நிலம் இருக்கு. அதுல, வழக்கமா ரெண்டு, மூணு ஏக்கர் நிலத்துல வாழையும், ரெண்டு ஏக்கர் நிலத்துல நெல்லும் போடுவோம். அதோட கொஞ்சம் தென்னையும் இருக்கு. நான் தென்ன மர நிழல் அடிக்கிற இடத்துல மட்டும் கால் ஏக்கர்ல (25 சென்ட்) புதினா நடவு செஞ்சிருக்கேன். பொதுவா, நிழலடியில எந்தப் பயிரும் சரியா வராது. அதனால, நிழல்ல வளர்ற பயிரான புதினாவை நடவு செஞ்சிருக்கேன். சிலர் தென்னந்தோப்புக்குள்ள ஊடுபயிரா புதினாவை போடுவாங்க. ஆனா, அது மழைக்காலத்துல சரியா வராது. தண்ணி சொட்டு சொட்டா ஒழுகி செடிக அழுகிடும்.

புதினா, அதிக பாடு இல்லாத வெள்ளாமை. தண்ணியைப் பாய்ச்சினமா, ஏவாரிக்கு பேசிவிட்டமா, காசு வாங்குனமானு போய்கிட்டே இருக்கலாம்.

புதினாவை 50 நாளைக்கு ஒரு தடவை அறுக்கலாம். கால் ஏக்கர் நிலத்துல ஒரு அறுப்புக்கு 500 கட்டுல இருந்து 700 கட்டு வரை புதினா கிடைக்கும். ஒரு கட்டுங்கிறது சுமாரா ஒரு கிலோ எடை இருக்கும். ஒரு கட்டு 30 ரூபாய்ல இருந்து 70 ரூபாய் வரைக்கும் கூட விலை போகும். நான், தண்ணி பாய்ச்சி ஊட்டம் கொடுத்து வளர்த்து மொத்தமா பேசி விட்டுடுவேன். இந்த முறை 20 ஆயிரம் ரூபாய்க்கு பேசி விட்டிருக்கேன். அவங்களே வந்து அறுத்துக்குவாங்க, மொத்தமும் அறுத்தவுடன், மறுபடியும் தண்ணி பாய்ச்சி வளர்ப்பேன். இது சுழற்சி முறையில நடந்துக்கிட்டு இருக்கும்.

20 ஆயிரம் ரூபாய்ல, பாதிக்கு பாதி செலவு வெச்சாலும் 10 ஆயிரம் லாபமா நிக்கும். வருஷத்துக்கு 6 அறுப்புனு வெச்சுக்கிட்டாலும் 60 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைச்சிடும். நாமளே அறுத்து வித்தா இன்னும் கூடுதலா வருமானம் பாக்கலாம். இத்தனை குறைச்சலான இடத்துல, இந்த வருமானம் வேற எந்தப் பயிர்லயும் கிடைக்காதுனு நினைக்கிறேன்” என்கிறார், ஆம்ஸ்ட்ராங்.

-தழைக்கும்

தொடர்புக்கு,
ஆம்ஸ்ட்ராங்,
செல்போன்: 94862-59054.

வீட்டிலேயே வளர்க்கலாம்!

சமையலுக்காக வாங்கும் புதினாவில், கீரையை ஆய்ந்து விட்டு... தண்டுப் பகுதியை மண்ணிலோ அல்லது தொட்டியிலோ நட்டு வைத்தால் உடனே தழைய ஆரம்பிக்கும். வீட்டுத் தோட்டம் அமைக்க முடியவில்லையே என வருத்தப்படுபவர்கள், சிறிய தொட்டிகள், பிளாஸ்டிக் டப்பாக்களில் கூட புதினாவை வளர்க்கலாம்.

மருத்துவ பயன்கள்!

‘மென்தா ஆர்வென்சிஸ்’ (Mentha Arvensis) என்பது புதினாவின் தாவரவியல் பெயர். புதினா இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதனுடன் 3 மிளகு சேர்த்து, விழுதாக அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் சரியாகும்.

எப்படி சாகுபடி செய்வது?

வடிகால் வசதியுடைய செம்மண், மணல் கலந்த செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். தண்ணீர் தேங்கி நிற்கும் நிலம் மற்றும் களிமண் நிலங்களில் இதை சாகுபடி செய்வதைத் தவிர்க்கலாம். இதற்குத் தனியாக பட்டம் இல்லை. அனைத்துப் பட்டங்களிலும் நடவு செய்யலாம். ஒரு முறை நடவு செய்தால், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். முழுக்க, வெயிலோ அல்லது முழுக்க நிழலோ உள்ள இடத்தில் சரியாக வளராது. நிழலும், வெயிலும் கலந்த இடங்களில் மட்டுமே புதினாவை நடவு செய்ய வேண்டும்.

25 சென்ட் நிலத்தில், இரண்டு டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி நிலத்தை நன்றாக புழுதி உழவு செய்து கொள்ள வேண்டும். பிறகு, அனைத்துப் பாத்திகளிலும் தண்ணீர் நிற்பது போல... மேடு பள்ளம் இல்லாமல் சமமாக்கி பாத்தி பிடிக்க வேண்டும். இடவசதி, தண்ணீர் வசதிக்கு ஏற்ப பாத்திகளின் அளவுகளைத் தீர்மானித்துக் கொள்ளலாம். பொதுவாக பத்து அடிக்கு பத்தடி அளவுகளில் பாத்திகளை எடுத்துக் கொள்ளலாம்.

பாத்திகளை பாசனம் செய்து ஈரமாக்கிக் கொண்டு, புதினா தண்டுகளை நடவு செய்ய வேண்டும். நடவுத் தண்டுகள், ஏற்கெனவே புதினா சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடம் கிடைக்கும். முற்றிய புதினா கீரையை வாங்கி, அதன் தண்டுப் பகுதியை எடுத்தும் நடவு செய்யலாம். ஒரு தண்டுக்கும் அடுத்த தண்டுக்கும் இடையில் நான்கு விரல்கிடை இடைவெளி இருப்பது போல் நெருக்கமாக நடவு செய்ய வேண்டும். நடவு செய்த பிறகு, ஈரம் காய விடாமல் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்ட வேண்டும். செடி, உடனே உயிர் பிடித்து தழைக்க ஆரம்பிக்கும்.

15 முதல் 20-ம் நாட்களுக்குள் கைகளால் களை எடுத்து... 10 கிலோ கடலைப் பிண்ணாக்கைத் தூளாக்கி, பாத்தி  முழுவதும் தூவி விட்டு தண்ணீர் கட்ட வேண்டும்.

30 மற்றும் 40-ம் நாட்களில் 20 கிலோ கடலைப் பிண்ணாக்கை பாசன நீரில் கரைத்து விட வேண்டும். புதினாவை பெரும்பாலும் பூச்சி, நோய் தாக்குவதில்லை. அப்படியும் ஏதேனும் பூச்சிகள் தாக்கினால், மூலிகைப்  பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

50-ம் நாளில் இருந்து கீரையை அறுவடை செய்யலாம். தரையில் இருந்து, ரெண்டு விரல்கிடை அளவு விட்டு, கீரையை அறுக்க வேண்டும். அறுத்த பிறகு, காம்புகளை மட்டமாக அறுத்து விட்டு, களை எடுத்து நீர் பாய்ச்சி, மீண்டும் கடலைப் பிண்ணாக்கை உரமாகக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால்  மறுபடியும் புதினா தழைக்கும்.  

புதினாவில் உள்ள சத்துக்கள்!

நீர்ச்சத்து             84.5 %

புரதம்                    4.9 %

கொழுப்பு              0.7%

தாதுப்பொருள்     0.2%

நார்ச்சத்துக்கள்      0.2%

மாவுச்சத்துக்கள்     5.9%