Published:Updated:

மனிதனைவிட மரங்களை நேசி... மரங்களின் காதலர்

மனிதனைவிட மரங்களை நேசி... மரங்களின் காதலர்
பிரீமியம் ஸ்டோரி
மனிதனைவிட மரங்களை நேசி... மரங்களின் காதலர்

எஸ்.மகேஷ், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

மனிதனைவிட மரங்களை நேசி... மரங்களின் காதலர்

எஸ்.மகேஷ், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
மனிதனைவிட மரங்களை நேசி... மரங்களின் காதலர்
பிரீமியம் ஸ்டோரி
மனிதனைவிட மரங்களை நேசி... மரங்களின் காதலர்

னிதனைவிட மரங்களை நேசி’ என்று காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதியை... ‘விதைகள் சேகரிப்பு தினம்’ என்ற பெயரில் கடந்த 7 ஆண்டுகளாகக் கடைபிடித்து வருகிறார், சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மரக்கன்று வங்கி அமைப்பின் தலைவர் கோ.முல்லைவனம். வீட்டின் முன்புறம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஒரு பூங்காவைப் பராமரித்து வரும் முல்லைவனத்தைச் சந்தித்தோம்.

மனிதனைவிட மரங்களை நேசி... மரங்களின் காதலர்

“நான் பிறந்தது, வளர்ந்தது விருகம்பாக்கத்தில்தான். எங்க பரம்பரையே விவசாயக் குடும்பம். 1980-ம் வருஷத்துக்கு முன்னாடி, விருகம்பாக்கம் ஏரிப் பாசனம் மூலம் மூன்றரை ஏக்கரில் நெல், காய்கறினு சாகுபடி செய்தோம். பிறகு என்னுடைய அப்பா,  ஸ்ரீபெரும்புதூர் தாலூகா, பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி விவசாயம் செய்தார்.

எனக்கு 8-ம் வகுப்புக்கு மேல படிப்பு ஏறலை. 13 வயசுல கையில கலப்பையை எடுத்து விவசாயத்துல இறங்கிட்டேன். நான் சின்ன வயசா இருக்கும் போது எங்க வயல்ல, ஆட்டுக்கார அலமேலு, ராணுவ வீரன், படிக்காத பண்ணையார், நேர்வழி, முரட்டுக்காளை...னு நிறைய சினிமா  பட சூட்டிங் நடந்திருக்கு. நாங்க வளர்த்த மாடு, வான்கோழி எல்லாம் சினிமால வந்திருக்கு.

விவசாய நிலத்துல ஆடு, மாடுகளை வர விடாமத் தடுக்கிறதுக்காக காட்டுப்பகுதியில் இருந்து பூவரசு, ஒதிய மரக்கொம்புகளை வெட்டி நட்டு வேலியாக அடைச்சோம். ஒரு வாரத்தில அந்த கொம்புகளில் துளிர்விட்டது. சில ஆண்டுகளில் அது பெரிய மரமாகியது. அதில ஊஞ்சல் கட்டி விளையாடுவோம். அதிலிருந்து மரங்கள் மேல எனக்கு ஒரு பிரியம் ஏற்பட்டு மரங்களை வளர்க்க ஆரம்பிச்சிட்டேன்” என்று தன்னுடைய பசுமையான நினைவில் மூழ்கியவர், தான் முதன்முதலாக நடவு செய்த மரத்திடம் நம்மை அழைத்துச் சென்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனிதனைவிட மரங்களை நேசி... மரங்களின் காதலர்

“இதுதான் சார்... நான் நடவு செய்த முதல் மரம். 1983 மார்ச் 17-ம் தேதி நட்டது. இந்த மரம் இப்போது தெருவுக்கே அடையாளமாக இருக்குது. இதுல, யாராவது ஆணி அடிச்சா எனக்கு கெட்ட கோபம் வரும். இந்தப் பகுதியில் ஏராளமாக மரம் நட்டு வளர்த்திருக்கேன். தமிழ்நாடு, கேரளா, டெல்லி, ஒடிசானு பல மாநிலங்களில் மரங்களை நட்டிருக்கேன். அதில் இயற்கை இடர்பாடுகளுக்குத் தப்பி 60 சதவிகிதம் மரங்கள் நல்லா இருக்குது.

என்னுடைய வாழ்க்கை முழுவதையும் இயற்கைக்காகவே அர்ப்பணிச்சிட்டேன். இலவச விதைகள், மரக்கன்றுகள்னு எல்லாருக்கும் இலவசமா கொடுத்துக்கிட்டிருக்கேன். விவசாயத்தில் கிடைக்கிற பணத்தை இயற்கைக்காகவே செலவழிக்கிறேன்” என்ற முல்லைவனம் நிறைவாக,

“பள்ளி, கல்லூரிகளில் பிப்ரவரி 14-ம் தேதி முதல் மார்ச் 14-ம் தேதி வரை மாணவர்கள் மூலம் விதைகளைச் சேகரிச்சு, அவர்கள் மூலமாகவே அதை வளர்ப்பேன். இதன்மூலம் மாணவர்கள் மத்தியில் நல்ல விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கு. இயற்கை உரம் தயாரிக்கிறது குறித்தும் பயிற்சி அளிச்சிக்கிட்டு இருக்கேன்” என்றார்.