Published:Updated:

விருது வாங்கிக் கொடுத்த ஒற்றை நாற்று நடவு!

விருது வாங்கிக் கொடுத்த ஒற்றை நாற்று நடவு!
பிரீமியம் ஸ்டோரி
விருது வாங்கிக் கொடுத்த ஒற்றை நாற்று நடவு!

50 சென்ட் நிலத்தில் 3,223 கிலோ மகசூல்! சே.சின்னதுரை, படங்கள்: வீ.சதீஷ்குமார்

விருது வாங்கிக் கொடுத்த ஒற்றை நாற்று நடவு!

50 சென்ட் நிலத்தில் 3,223 கிலோ மகசூல்! சே.சின்னதுரை, படங்கள்: வீ.சதீஷ்குமார்

Published:Updated:
விருது வாங்கிக் கொடுத்த ஒற்றை நாற்று நடவு!
பிரீமியம் ஸ்டோரி
விருது வாங்கிக் கொடுத்த ஒற்றை நாற்று நடவு!

நெல் சாகுபடியில் அதிக மகசூல் எடுத்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் சிறந்த விவசாயிக்கான விருதும், 5 லட்ச ரூபாய் பரிசும் அளித்து வருகிறது, தமிழக அரசு. கடந்த ஜனவரி மாதம் நடந்த குடியரசு தினவிழாவில் நெல் சாகுபடியில் அதிக மகசூலுக்கான விருதைப் பெற்றிருக்கிறார், மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியைச் சேர்ந்த பிரசன்னா பத்மநாபன்.

விருது வாங்கிக் கொடுத்த ஒற்றை நாற்று நடவு!

மதுரை-நத்தம் சாலையில் உள்ள சின்னப்பட்டி கிராமத்தில்தான் உள்ளது, இவரது நெல் வயல். அங்கு சென்றவுடன் நம்மை முகம் மலர வரவேற்றவர், விருது பெற்ற விவரத்தைச் சொல்லத் தொடங்கினார். 

“இங்க ரெண்டரை ஏக்கர் நிலம் இருக்கு. பெரியாறு பாசனத்தை வெச்சு, வருஷம் ரெண்டு போகம் சாகுபடி செய்வோம். வழக்கமான முறையில நடவு செய்றதை விட, ‘ஒற்றை நாற்று சாகுபடி முறையில இடைவெளி விட்டு நட்டா, அதிக மகசூல் கிடைக்கும்’னு வேளாண்மை அதிகாரிங்க சொன்னாங்க. அவங்க சொன்னபடி, 50 சென்ட் இடத்தை மட்டும் சோதனைக்காக ஒதுக்கினோம். திருச்சி-3 என்கிற விதைநெல் ரகத்தைக் கொடுத்தாங்க. நாத்து விட்டு, 14 நாள்ல நடவு போட்டோம்.

வேளாண்மை அதிகாரிங்க சொல்லிக் கொடுத்த மாதிரி, காய்ச்சலும், பாய்ச்சலுமா தண்ணி கட்டி, அவங்க  சொன்ன அளவுலதான் ரசாயன உரங்களையும் போட்டோம். பயிர் நல்லா வளர்ந்தது. இலைச்சுருட்டுப்புழு தொந்தரவுக்கு வேப்பெண்ணையை தண்ணியில கலந்து அடிச்சு சரி பண்ணினோம். 130 நாள்ல அறுவடைக்கு தயாராகிடுச்சு. அதிகாரிகள் முன்னிலையில அறுவடை நடந்தப்போ, 50 சென்ட் நிலத்துல இருந்து 3 ஆயிரத்து 223 கிலோ நெல் கிடைச்சது. அதைப் பார்த்து எங்களுக்கும் சந்தோஷமா இருந்தது.

பிறகு, ஒரு நாள்  திடீர்னு வேளாண் இணை இயக்குநர் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி... ‘அதிக மகசூல் எடுத்ததால நீங்க விருதுக்கு தேர்வாகி இருக்கீங்க. முதலமைச்சர் கையால விருது வாங்கப் போறீங்க’னு சொன்னாங்க. நான் நடவு செய்யும்போது, விருது வாங்குவேன்னு நினைச்செல்லாம் நடலை. ஆனா, சாகுபடி முறைகளை சரியா கடைபிடிச்சதாலதான் இது சாத்தியமாகியிருக்கு. இதுக்கு அடிப்படைக் காரணம் எனக்கு எல்லா வகையிலயும் உதவியா இருந்த என்னோட கணவர்தான்” என்று நெகிழ்ந்த பிரசன்னா தொடர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விருது வாங்கிக் கொடுத்த ஒற்றை நாற்று நடவு!

“எங்க வயல்ல விளைஞ்ச நெல் முழுசையும் வேளாண் துறை அதிகாரிகளே கிலோ 14 ரூபாய்னு வாங்கிக்கிட்டாங்க. அது மூலமா 45 ஆயிரம் ரூபாய் கிடைச்சது. அதுல செலவு 15 ஆயிரம் ரூபாய் போக 30 ஆயிரம் ரூபாய் லாபம். அதிக இடைவெளியில நாத்துகளை நடவு செஞ்சதும், காய்ச்சலும் பாய்ச்சலுமா பாசனம் செஞ்சதும்தான் அதிக விளைச்சலுக்கு காரணம். நல்ல காற்றோட்டம் கிடைச்சு, ஒவ்வொரு நாத்துலயும் 50 தூர்ல இருந்து 60 தூர் வரைக்கும் வெடிச்சது. திருச்சி-3 ரக நெல் அதிக எடை இருக்கிறதும் ஒரு காரணம். இந்த முறை இயற்கையோடு கொஞ்சம் ரசாயனமும் கலந்து செய்தேன். அடுத்த முறை முதல் முழுமையாக இயற்கை முறையில் விவசாயம் செய்யலாம்னு இருக்கேன்” என்றார் நம்பிக்கையுடன்.

மதுரை வேளாண் இணை இயக்குநர் கனகராஜ் , “திருந்திய நெல் சாகுபடியில் மாநிலத்திலே அதிக மகசூல் எடுப்பது மதுரைக்கு இது இரண்டாவது முறை. இந்தத் தொழில் நுட்பமுறையில், நீர் மறைய நீர் கட்டும் போது பயிருக்கு அதிக காற்றோட்டம் கிடைக்கிறது. பிரசன்னாவின் அர்ப்பணிப்பும், ஆர்வமும் இந்த வெற்றியை ஈட்டித்தந்துள்ளது. அனைத்து விவசாயிகளும் முடிந்தவரை இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம். நாங்களும் பெரும்பாலும் இயற்கை இடுபொருட்களையே பயன்படுத்த அறிவுறுத்தி வருகிறோம். இன்னும் சில ஆண்டுகளில் முழுமையான மாற்றம் இருக்கும்” என்றார்.

தொடர்புக்கு,
பிரசன்னா,
செல்போன்: 95850-46897.

திருச்சி-3 ரகம்!

து பெருவெட்டு ரகம். அனைத்துப் பகுதிகளிலும் வளரும். நெல் பெரிதாக இருப்பதால், அதிக எடை நிற்கும். இதன் வயது 130 முதல் 135 நாட்கள். இலைச்சுருட்டுப்புழு தவிர, வேறு பூச்சிகள் தாக்குவதில்லை. நோய்த்தாக்குதலும் குறைவு. (இந்த ரக அரிசி சாப்பாட்டுக்கு ஆகாது. பலகாரங்கள் செய்யவும் மாவு அரைக்கவும் ஏற்றது.)