பிரீமியம் ஸ்டோரி

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

ஆடு வளர்ப்பு!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மார்ச் 29-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’  பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452-2483903

தண்டோரா

இயற்கை விவசாயம்!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், மார்ச் 29-ம் தேதி, ‘இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர், மைராடா வேளாண் அறிவியல் நிலையம், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு.

தொலைபேசி: 04285-241626.

தண்டோரா

பசுந்தீவன உற்பத்தி!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில், மார்ச் 28-ம் தேதி, ‘பசுந்தீவன மற்றும் விதை உற்பத்தி’ 29-ம் தேதி, ‘மசாலாப்பொடி தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும். தொடர்புக்கு,

தொலைபேசி: 044-27452371.

நாட்டுக்கோழி வளர்ப்பு!

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில், மார்ச் 28-ம் தேதி, ‘மண்புழு உரம் தயாரித்தல்’ 29-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ 30-ம் தேதி, ‘மாடியில் காய்கறித்தோட்டம் அமைத்தல்’ 31-ம் தேதி, ‘நிலக்கடலையில் பூச்சி, நோய் மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 04286-266345

தேனீ வளர்ப்பு!


சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், மார்ச் 29-ம் தேதி, ‘இத்தாலியன் தேனீ வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம். பயிற்சி இலவசம்.தொடர்புக்கு, செல்போன்: 77088-20505, 94885-75716.

தண்டோரா

கட்டணப் பயிற்சிகள்

தோட்டக்கலை சாகுபடி!

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில், மார்ச் 29-ம் தேதி ‘தோட்டக்கலை சாகுபடி முறைகள்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் `100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 99429-78688

அறிவிப்பு


தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு