Published:Updated:

‘‘இயற்கை விவசாயம்... தடாலடியாக மாறாதீர்கள்!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘‘இயற்கை விவசாயம்... தடாலடியாக மாறாதீர்கள்!’’
‘‘இயற்கை விவசாயம்... தடாலடியாக மாறாதீர்கள்!’’

பசுமைக் குழுபடங்கள்: என்.ஜி.மணிகண்டன், வீ.சிவக்குமார், தே.தீட்ஷித்

பிரீமியம் ஸ்டோரி

சென்ற இதழ் தொடர்ச்சி...

லைக்கோட்டை மாநகரான திருச்சியில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நான்கு நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்றது, பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ -2016 கண்காட்சி மற்றும் கருத்தரங்கு. தினமும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன. கருத்தரங்கில் பேசிய கருத்துரையாளர்களின் உரை கடந்த சில இதழ்களாக இடம் பிடித்து வருகின்றது. அதன் தொடர்ச்சி இதோ...

தொடக்கவிழாவில் தெலங்கானாவைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி நாகரத்தின நாயுடு பேசுகையில், “இயற்கை முறையில் விவசாயம் செய்தால், ரசாயன முறை விவசாயம் அளவுக்கு மகசூல் வருமா? என்ற சந்தேகம் அனேகம் பேருக்கு உண்டு. உடனே யாரும் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டாம். ரசாயன உரம் போட்டு செய்யும் பயிரையே குறைவான பரப்பில் இயற்கை முறையில் செய்து பாருங்கள். மண், மகசூல் இரண்டிலுமே வித்தியாசம் தெரியும். ரசாயன விவசாயத்தில் கிடைத்த மகசூலையும், செலவையும் கணக்கிட்டால், இயற்கையில் விளைந்தது உங்களுக்கு லாபம் அளிக்கக் கூடியதாக இருக்கும்.

‘‘இயற்கை விவசாயம்... தடாலடியாக மாறாதீர்கள்!’’

தற்போது, பெரிய வேலைகளில் உள்ள இளைஞர்கள், அந்த வேலையை உதறிவிட்டு விவசாயத்துக்கு வருகிறார்கள். இளைஞர்களே... திடீரென வேலையை விட்டு விட்டு வரவேண்டாம். முதலில் உங்கள் நிலத்தில் வேலைக்கு ஆட்கள் வைத்து, விவசாயம் செய்யுங்கள். இந்த சமயத்தில் விவசாயத்தில் உள்ள அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். இன்றைக்கு நீங்கள் மாதம், 50 ஆயிரம் சம்பளம் பெறுபவர் என்றால், விவசாயத்தில் மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம் கிடைக்கத் தொடங்கிய பிறகு, நகரத்தில் உள்ள வேலையை விட்டு, விட்டு விவசாயத்துக்கு வந்துவிடலாம். என்னை சந்திக்கும் இளைஞர்களிடமும், விவசாயத்தைப் பற்றி நன்றாக அறிந்து, தெரிந்துகொண்டு இறங்குங்கள்.... என்றுதான் ஆலோசனை சொல்லி வருகிறேன்’’ என்றார்.

‘‘இயற்கை விவசாயம்... தடாலடியாக மாறாதீர்கள்!’’

பாதி செலவைக் குறைக்கும் பசுந்தாள் உரம்!

தொடர்ந்து பேசிய கிரியேட் அறக்கட்டளை செயலாளர் நெல் ஜெயராமன், “நெல் விதைப்பதில் முக்கியமானது, பசுந்தாள் உரத்தை மடக்கி உழுவது. இதனால் செலவுகளை மிச்சப்படுத்தி, மண்ணை வளமாக்கலாம். நெல்லுக்கு மட்டுமில்லை எந்தப் பயிர் விதைப்பதாக இருந்தாலும், பசுந்தாள் உரத்தை விதைத்து, பூக்கும் தருவாயில் மடக்கி உழுத பின்னர், விவசாயம் செய்தால் நுண்ணுயிர்கள் அதிகமாகப் பெருகி அதிக மகசூல் கிடைக்க வழி ஏற்படும். செயற்கை விவசாயத்தில் யூரியா போன்ற உரங்களை நாம் பயிருக்கு கொடுக்கிறோம். பயிர் நேரடியாக எடுத்துக்கொண்டு மகசூலைக் கொடுக்கிறது. இயற்கை விவசாயத்தில் கொடுக்கும் இயற்கை உரங்கள், முதலில் மண்ணை வளப்படுத்துகின்றன, அதில் உருவாகும் நுண்ணுயிரிகள் பயிருக்குத் தேவையான சத்துக்களை மண் மூலம் பயிருக்குக் கொடுக்கின்றன. அதன் மூலம் மகசூலைக் கொடுக்கிறது பயிர். எந்த இடுபொருளாக இருந்தாலும் வெளியில் இருந்து வரக்கூடாது. நம் நிலத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு இடுபொருட்களைத் தயாரித்து பயிருக்குக் கொடுக்க வேண்டும்’’ என்றார்.

‘‘இயற்கை விவசாயம்... தடாலடியாக மாறாதீர்கள்!’’

பயிர் சுழற்சி அவசியம்!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் முனைவர். ‘சர்க்கரை’ ராமசாமி

‘‘இயற்கை விவசாயம்... தடாலடியாக மாறாதீர்கள்!’’

பேசும்போது, “எந்த ஒரு புதிய ரகமாக இருந்தாலும், பழைய ரகமாக இருந்தாலும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கும் அளவில் மாற்றம் இருக்கக் கூடாது. அதிகமாகத் தெளித்தால்,  முதல் மகசூல் நன்றாக வரும். இரண்டாவது முறை பாதியாக குறையும். அடுத்தடுத்து மகசூல் குறைந்து நிலம் பாழ்பட்டு போகும். இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும்’’ என்றார்.

வாழைக்கு போதுமான இடைவெளி அவசியம்!

திருச்சி, தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய, முதன்மை விஞ்ஞானி முனைவர். குமார்,

‘‘வாழையைப் பொறுத்தவரையில் கன்றுத் தேர்வு மிக முக்கியம். வாழைக்கிழங்கைக் கூண்வண்டு, தண்டுத் துளைப்பான் ஆகியவைத் தாக்கும். ரஸ்தாளி, கற்பூரவல்லி, மொந்தன், ஏத்தன் ஆகிய ரக வாழைகளை வாடல் நோய் அதிகமாகத் தாக்கும். இது தவிர வாழைத்தேமல், வெள்ளரித்தேமல் ஆகிய வைரஸ் நோயின் தாக்கமும், மண்ணுக்கு அடியில் வேரை அழிக்கும் நூற்புழுத் தாக்குதலும் அதிகம் இருக்கும். இவற்றையெல்லாம் தவிர்க்க, ஒருங்கிணைந்த உர நிர்வாகம், பயிர்ப் பாதுகாப்பு மிக அவசியம். கன்று தேர்வின் போது மண்ணில் உள்ள கிருமிகள், சத்துக்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள, அவசியம் மண் பரிசோதனை செய்ய வேண்டும். மண்ணில் உள்ளச் சத்துக்கள் மட்டுமல்லாமல், பல வகை நோய்களை ஏற்படுத்தும் கிருமிகளின் அளவையும் தெரிந்து கொள்வதற்காகத்தான் மண் பரிசோதனை. கிருமிகளின் அளவு தெரிந்தால்தான் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும். நடவுக்கு முன், கிழங்கின் வேரை மட்டும் விட்டு மொட்டை அடிப்பது போல், கிழங்கின் மேல் தோலை சீவி விட்டு, வேப்ப எண்ணெய்க் கரைசலில் சிறிது நேரம் ஊற வைத்து, பிறகு, நிழலில் உலர்த்தி விட்டு நடலாம்’’ என்றார். 

‘‘இயற்கை விவசாயம்... தடாலடியாக மாறாதீர்கள்!’’
‘‘இயற்கை விவசாயம்... தடாலடியாக மாறாதீர்கள்!’’

நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும் முக்கோண நடவு!

தேனியைச் சேர்ந்த முன்னோடி வாழை விவசாயி கோட்டைசாமி, ‘‘வடநாட்டுல மத்திய அரசு வேலை கிடைச்சது. அந்த வேலை பிடிக்காம வி.ஆர்.எஸ் கொடுத்துட்டு வந்துட்டேன். இஷ்டம் போல ரசாயனத்தைத் தூவி வாழை விவசாயம் செஞ்சேன். முதல் வருஷம் மகசூல் அதிகம் இருந்துச்சு.. சந்தோசப்பட்டேன். ரெண்டாவது வருஷம் பாதியா குறைஞ்சு மண் வெளிற ஆரம்பிச்சுது, மூணாவது வருசம் வாழை கருகிப் போச்சு. காரணம் என்னன்னு பாத்தப்போ, ரசாயன உரம்தான்னு கண்டுபிடிச்சு, 15 வருஷத்துக்கு முன்னாலயே மண்புழு உரம் போட ஆரம்பிச்சிட்டேன்.

‘‘இயற்கை விவசாயம்... தடாலடியாக மாறாதீர்கள்!’’

வாழை மட்டும் இல்லாம, ஒருங்கிணைந்த பண்ணையமா ஆரம்பிச்சேன். மண்புழு உரம் தவிர, அமுதக்கரைசல், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்னு எல்லா இடுபொருட்களையும் தயாரிச்சு வாழைகளுக்கு கொடுக்க ஆரம்பிச்சேன். அந்த வருஷம் வழக்கமா கிடைக்கிற மகசூலை விட அதிகமாதான் இருந்துச்சு. முழுக்க முழுக்க இயற்கை உரம் போட்டு விவசாயம் செய்வதால், மண்ணுக்கு சத்தும், எதிர்ப்புச் சக்தியும் கூடுது.

‘‘இயற்கை விவசாயம்... தடாலடியாக மாறாதீர்கள்!’’

கன்றுகளை வரிசையா நடாமல், முக்கோண வடிவத்தில நட்டால் கூடுதலாக இடம் கிடைக்கும். வாழைகளின் எண்ணிக்கையும் குறையாது, கூடுதல் இடைவெளியும் சூரிய ஒளியும் கிடைக்கும். மாதம் ஒரு முறை ஒரு கன்னுக்கு அரை கிலோ வீதம் மண்புழு உரம் வைக்கணும். 40-ம் நாள் சணப்பு, தக்கைப்பூண்டுகளை விதைச்சு கிளறிவிடணும். 75-ம் நாளில் சணப்பு அரும்பு விடும்போது, பூ பூக்கவிடாமல் பிடுங்கி, வாழைத் தூருக்கு அடியில் போட்டு  வைச்சா பசுந்தாள் உரம் முழுமையா கிடைச்சுடும். 15 நாளுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம், 15 நாளுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா இதை மட்டும் பயிருக்கு கொடுங்க. மண் வளமேறும், மகசூல் கூடும், லாபமும் நிச்சயம். பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்திய எம்.எஸ்.சுவாமிநாதனே இயற்கைக்கு மாறணும்னு முடிவுக்கு வந்துட்டாரு, நீங்களும் மாறிடுங்க’’ என்றார்.

கருத்தரங்கில் பேசிய பல்வேறு கருத்துரையாளர்களின் உரை வீச்சுக்கள்   

அடுத்த இதழில்...

கரும்பு ரகத் தேர்வில் கவனம்!

கரும்பு சாகுபடி நுட்பங்கள் பற்றி பேசிய காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டுப் பகுதியைச் சேர்ந்த

‘‘இயற்கை விவசாயம்... தடாலடியாக மாறாதீர்கள்!’’

முன்னோடி விவசாயி தனபால், ‘‘கரும்பு சாகுபடியில் தமிழ்நாடு முதன்மை மாநிலம். ஒரு ஏக்கரில் 190 டன் வரை கரும்பு மகசூல் எடுக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், 120 டன் வரை எடுத்துள்ளார்கள் சில விவசாயிகள். உலக அளவில் கரும்பு மகசூல் 25 டன், இந்திய அளவில் 27 டன், தமிழ்நாட்டில் 41 டன்னாக உள்ளது. கரும்பைப் பொறுத்தவரை அடிப்படையானது மண். மண் வளத்தைக் கூட்டிவிட்டாலே, எல்லாமும் வந்துடும்.

கரும்பு நடவுக்கு முன் சணப்பு, தக்கைப்பூண்டு, தொழுவுரம், கரும்பு சோகை ஆகியவற்றை அடியுரமாகப் போட்டால் மண் வளப்படும். சிலர், அவசரமாக உழவு ஓட்டுவார்கள், உழவில் அவசரம் வேண்டாம், அவசரமாக புழுதி  உழவு ஓட்டினால் நிலம் ஏற்ற இறக்கமாக இருக்கும். சமமான நிலத்தில்தான் தண்ணீர் சரியாக பாயும்.

முன்பட்டம் (டிசம்பர் ஜனவரி), நடுப்பட்டம் (பிப்ரவரி, மார்ச்) பின்பட்டம் (ஏப்ரல், மே) சிறப்புப்பட்டம் (ஜூன், ஜூலை) என மொத்தம் நான்கு பட்டம் இருக்கிறது. அந்தந்தப் பகுதிக்கேற்ற பட்டம் அவசியம். அதேபோல ரகத் தேர்விலும் கவனமாக இருக்க வேண்டும். கரும்பு சோகை அகலமாக, கரும்பு சாயாமல், நேராக இருக்க வேண்டும். முள் இல்லாமல், கிளைகள் அதிகமாகவும், தடிமனாகவும் இருக்க வேண்டும். ஊடுபயிராக உளுந்து, பாசி, பீன்ஸ் என ஏதாவது விதைத்தால், அதன் மூலமாகத் தனி வருமானம் கிடைக்கும். காற்றில் உள்ள தழைச்சத்துக்களை, அவை இழுத்து மண்ணை வளப்படுத்தும்’’ என்றார்.


‘‘விவசாய ஆசை வந்துடுச்சு!’’

ஸ்ரீதர், உமா தம்பதி (செஙகல்பட்டு):

‘‘இயற்கை விவசாயம்... தடாலடியாக மாறாதீர்கள்!’’

‘‘பொதுவா எங்களுக்கு விவசாயத்துல ஆர்வம் அதிகம். கருத்தரங்குல விவசாயிங்களையும், வல்லுநர்களையும் பேச வச்சு, இரண்டுபேருக்கும் பாலமா ‘பசுமை விகடன்’ இருக்கு. இங்க பேச பெரிய பெரிய வல்லுநர்களும், விவசாயிகளும் வந்திருக்காங்க. இங்க வர்றதுக்கு முன்னால ஒரு தெளிவு இல்லாம இருந்தது. ஆனா, இப்போது எங்களுக்கும் விவசாயம் செய்யணும்னு ஆசை வந்திருக்கு. ‘பசுமை விகடன்’ சொல்ற மாதிரி இயற்கை விவசாயம்தான் செய்யப் போறேன். முன்னோடி கரும்பு விவசாயி தனபால், கரும்பு சாகுபடி சம்பந்தமா அருமையா பேசினார். கரும்பு சாகுபடியில நல்ல மகசூல் எடுக்க, அவர் சொன்ன நுட்பம் உதவியா இருக்கும்.’’

‘‘தேனீ வளர்க்கப் போறேன்!’’

‘‘இயற்கை விவசாயம்... தடாலடியாக மாறாதீர்கள்!’’கிருஷ்ணகுமார், துபாய்:

‘‘முதல்நாள்ல இருந்தே கலந்துக்கிட்டு இருக்கேன். இந்த நிகழ்ச்சிக்காகவே துபாய்லேருந்து வந்திருக்கேன். பல விஷயங்களை வல்லுநர்கள் சொல்லிட்டு இருக்காங்க. இயற்கை விவசாயம் பத்தி பல உபயோகமான தகவல்களைத் தெரிஞ்சிக்கிட்டேன். ஆலங்குடி பக்கத்தில இருக்கிற என்னோட மூணு ஏக்கர் நிலத்துல மா, தென்னை, சப்போட்டானு வெச்சிருக்கேன். இந்தக் கண்காட்சியில தேனீ வளர்ப்பைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். என்னோட தோட்டத்தில் தேனீ வளர்ப்பைத் தொடங்கப் போறேன். ‘பசுமை விகடன்’ விவசாயிகளுக்கு ஒரு வழிகாட்டியாக மட்டுமல்லாமல், நல்ல நண்பனாவும் இருக்கு.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு