Published:Updated:

‘‘செம்மண்ணுக்கு 3 நாள் பாசனம்... களிமண்ணுக்கு 5 நாள் பாசனம்..!’’

‘‘செம்மண்ணுக்கு 3 நாள் பாசனம்... களிமண்ணுக்கு 5 நாள் பாசனம்..!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘செம்மண்ணுக்கு 3 நாள் பாசனம்... களிமண்ணுக்கு 5 நாள் பாசனம்..!’’

வறட்சியிலும் பயிரைக் காக்கலாம்!பசுமைக் குழு, படங்கள்: என்.ஜி.மணிகண்டன், வீ.சிவக்குமார், தே.தீட்ஷித்

‘‘செம்மண்ணுக்கு 3 நாள் பாசனம்... களிமண்ணுக்கு 5 நாள் பாசனம்..!’’

வறட்சியிலும் பயிரைக் காக்கலாம்!பசுமைக் குழு, படங்கள்: என்.ஜி.மணிகண்டன், வீ.சிவக்குமார், தே.தீட்ஷித்

Published:Updated:
‘‘செம்மண்ணுக்கு 3 நாள் பாசனம்... களிமண்ணுக்கு 5 நாள் பாசனம்..!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘செம்மண்ணுக்கு 3 நாள் பாசனம்... களிமண்ணுக்கு 5 நாள் பாசனம்..!’’
‘‘செம்மண்ணுக்கு 3 நாள் பாசனம்... களிமண்ணுக்கு 5 நாள் பாசனம்..!’’

சென்ற இதழ் தொடர்ச்சி...

லைக்கோட்டை மாநகரான திருச்சியில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நான்கு நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்றது, ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2016’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு. தினமும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய கருத்துரையாளர்களின் உரை கடந்த சில இதழ்களாக இடம்பிடித்து வருகிறது. அதன் தொடர்ச்சி இதோ...

கருத்தரங்கில் பேசிய காரைக்குடி சித்த வைத்தியர் சொக்கலிங்கம், “முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நோயாளிகளின் எண்ணிக்கை மிகக்குறைவு. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் மருத்துவமனைகள் இருந்தன. ஆனால், இப்போது பத்து பேரில் ஒருவருக்கு ஏதாவது ஒரு நோய் இருக்கிறது. இதற்குக் காரணம், நாம் உண்ணக்கூடிய உணவு வகைகள்தான். ஆனால், இப்போது பாரம்பர்ய உணவுகளைப் பற்றிய விழிப்பு உணர்வு வந்திருக்கிறது. சளி பிடித்த குழந்தைகளுக்கு ஆரம்ப நிலையில் சீரகத்தண்ணீர் கொடுப்பது சிறப்பான வைத்தியமாகும்.

‘ஆடாதொடை இலையை (ஆடு தொடா இலை) உண்டு வந்தால், பாடாதக் குரலும் பாடும்’ என்பது பழமொழி. அந்தக் காலத்தில் பாடகர்கள் பெரும்பாலும் ஆடாதொடை இலையை கஷாயமாக்கி அருந்துவார்கள். குரலைக் ‘கணீர்’ என எழுப்பக்கூடிய தன்மை வாய்ந்தது ‘ஆடாதொடை இலை’. நாம் அருந்தும் இருமல் டானிக்குகளில் ஆடாதொடை இலைச்சாறு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆடாதொடை இலையை கஷாயம் வைத்துக் குடித்தால், மார்பு சளி, கோழைக்கட்டு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி நோய்வராமல் தடுக்கும்.

குழந்தைகளுக்கு, பாலை நன்றாகக் காய்ச்சி பனங்கற்கண்டு கலந்து கொடுப்பது நல்லது. தூதுவளை இலைகளில் கஷாயம், கூட்டுப்பொரியல், துவையல் என அனைத்தும் வைத்து சாப்பிட்டு வந்தால், சளியின் பாதிப்பிலிருந்து காத்து ஆரோக்கியத்தைத் தரும்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘செம்மண்ணுக்கு 3 நாள் பாசனம்... களிமண்ணுக்கு 5 நாள் பாசனம்..!’’

சிறுதானிய சாகுபடிகளும் பாரம்பர்ய உணவுகளும்!

தொடர்ந்து திருவண்ணாமலை, சிறுதானிய மகத்துவ மையத்தைச் சேர்ந்த முனைவர்.நிர்மலகுமாரி பேசினார். “இனி வரும் காலத்தில் சிறுதானியம் விளைவிப்பவர்கள், விற்பவர்களுக்கு எதிர்காலம் இருக்கும். மண்ணின் மைந்தர்கள் போல, இது மண்ணுக்கேற்ற பயிர். சிறுதானியத்தில் உள்ள மருத்துவ குணங்களும், சத்துக்களும்தான் இதன் தேவைக்குக் காரணம். அரிசியைப் பட்டை தீட்டி, பாலிஷ் செய்து சாப்பிட ஆரம்பித்த போதே, நோய்களும் தோன்றிவிட்டன. கம்பு, கேழ்வரகு, சாமை, வரகு, குதிரைவாலி, தினை, சோளம், பனிவரகு ஆகிய எட்டும்தான் சிறுதானியங்களில் முக்கியமானவை. மன்னர்கள் காலத்தில் இந்த சிறு தானியங்களை சாப்பிட்டுத்தானே உறுதியான அணைக்கட்டுகள், கோயில்கள், கோபுரங்கள் ஆகியவற்றையெல்லாம் கட்டினார்கள். இன்றைக்கு நாம் சாப்பிடுவது எதுவுமே முழுமையான சத்துக்களைக் கொடுப்பதில்லை. மைதாவை நுண்ணுயிரிகள்கூட தீண்டுவதில்லை, ஆனால், நாம் மைதாவைத்தான் அதிகம் விரும்பி சாப்பிடுகிறோம்.

சிறுதானியங்களின் சல்லி வேர், மண் அரிப்பைத் தடுக்கும். வறட்சியைத் தாங்கி வளரும். சிறுதானியங்கள் சுய மகரந்தச்சேர்க்கை உடையவை. கடும்வறட்சி, அதிக வெப்பநிலையிலும் வளரக்கூடியவை. துவரை, மொச்சை, அவரை ஆகியவற்றை சிறுதானியத்துக்கு ஊடுபயிராகவும் போடலாம். கேழ்வரகு சாப்பிட்டால், கால்சியம் மாத்திரை சாப்பிட வேண்டியதில்லை. குதிரைவாலியில் அதிக இரும்புச்சத்து இருக்கிறது. தினையில் அதிக  புரதச்சத்து உள்ளது. இப்படி, எல்லா வகையான சத்துக்களுமே சிறுதானியங்களில் இருக்கின்றன. அறுவடை செய்த சிறுதானியத்தை கல், மண் இல்லாமல் சலித்துக் கொடுத்தால் நல்ல விலை இருக்கும். தவிர, மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்யலாம்” என்றார்.

‘‘செம்மண்ணுக்கு 3 நாள் பாசனம்... களிமண்ணுக்கு 5 நாள் பாசனம்..!’’

சிறுதானியங்களின் சிறப்புகள் பற்றி பேச மேடையேறினார், அனுபவ விவசாயியும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான சடையாண்டி.

“விளைநிலங்களில் உள்ள தண்ணீரை எப்படி வெளியே கடத்துவது என்கிற காலம் போய், தண்ணீருக்காக அடுத்த மாநிலத்திடம் கையேந்தி நிற்கும் அவல நிலை இன்று உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து டெல்லி வரை தண்ணீருக்காகச் செல்கிறோம். இந்தக் காலகட்டத்தில் நெல் பயிரிட முடியாத வறட்சியான பகுதிகளில், மாற்றுப்பயிராக சிறுதானியங்களை விதைத்து பயன்பெறலாம். ஆடிப்பட்டம் சிறுதானியத்துக்கு மிகவும் ஏற்ற ஒன்றாகும். காலநிலை மாற்றிப் பயிரிட்டால் பூக்கும் பருவம், காய்க்கும் பருவம் என அனைத்துமே மாறிவிடும். இயற்கைதான் மனிதனைவிட பெரியது. இயற்கையோடு ஒன்றுங்கள். இயற்கை, உங்களைக் கைவிடாது” என்றார்.

‘‘செம்மண்ணுக்கு 3 நாள் பாசனம்... களிமண்ணுக்கு 5 நாள் பாசனம்..!’’

பந்தல் காய்கறி சாகுபடி குறித்துப் பேசிய திருப்பூரைச் சேர்ந்த முன்னோடி விவசாயி, ‘கேத்தனூர்’ பழனிச்சாமி, “பந்தல் காய்கறிகளில் அதுவும் இயற்கையில் விளைந்த காய்கறிகளுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இயற்கை விவசாயத்தில் விளைந்த காய்கறிகளுக்கு மட்டுமே விவசாயி விலையை நிர்ணயம் செய்ய முடியும். இடைத்தரகர்களையும், வியாபாரிகளையும் நம்பிப் போக வேண்டிய அவசியமில்லை. கல்தூண் பந்தல், கம்பிப்பந்தல், கயிற்றுப்பந்தல் என பலவகை பந்தல்கள் இருக்கின்றன. விவசாயிகள் அவர்களோட வசதிக்கேற்ப ஏதாவது ஒரு பந்தல் முறையைத் தேர்ந்தெடுக்கலாம். மற்ற காய்கறிகளை விட பந்தல் முறை காய்கறி சாகுபடியில் வேலையாட்கள் குறைவு. குறைவான பராமரிப்புடன் நிச்சயம் லாபம் உண்டு. ஒரு தடவை பந்தல் அமைத்துவிட்டால் பல வருஷங்களுக்குக் கவலை இல்லை” என்றார்.

வேளாண்மைக்கு ஏற்ற நீர் மேலாண்மை!

தொடர்ந்து பேசிய திண்டுக்கல் மாவட்ட நீர்வடிப்பகுதி வேளாண் முகமை விரிவாக்க அலுவலர் பிரிட்டோராஜ், “மா, கொய்யா, சப்போட்டா  என எந்த  மரப்பயிர்களாக இருந்தாலும், அதன் வேர் நிலத்துக்குக் கீழ் 5 அடி ஆழத்துக்கு நேராகப் போகும். மரத்தின் உயரம் எவ்வளவு இருக்கிறதோ அதன் பாதி அளவு இரண்டு புறமும் நீண்டு போகும். மரத்தின் கீழ்ப்பகுதியில் தண்ணீரை அதிகமாகத் தேக்குவதை விட வேருக்குத் தண்ணீர் கொடுப்பது மட்டும்தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். தேவையில்லாத இடத்தில் தண்ணீர் கொடுத்தால், தண்ணீர் அதிகமாக விரயமாகும்.

‘‘செம்மண்ணுக்கு 3 நாள் பாசனம்... களிமண்ணுக்கு 5 நாள் பாசனம்..!’’

விதைப்புக்கு முன்பு,  பூ பூக்கும் நேரம், காய் காய்க்கும் நேரம்னு மூன்று நேரங்கள்ல மட்டும் சற்று கூடுதலாகத் தண்ணீர் கொடுத்தால் போதும். செம்மண் நிலமாக இருந்தால் மூன்று நாட்களுக்கு ஒரு முறையும், களிமண் தரையாக உள்ளவர்கள் 5 நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் விட்டால் போதும். இப்படி நீர்ப்பாசனம் செய்வதால், வறட்சியிலும் கூட பயிரைக் காக்கலாம். வெளியில் பார்க்கும் போது தரைப்பரப்பு காய்ந்த மாதிரி இருக்கும். ஆனால், உள்ளே ஈரப்பதம் இருக்கும். ‘போர்வெல்’ இல்லாதவர்கள் பண்ணைக்குட்டை அமைக்கலாம். 22 மீட்டர் நீளம் 20 மீட்டர் அகலம், 1.2 மீட்டர் ஆழத்தில் பண்ணைக்குட்டை இருந்தால், ஐந்தரை லட்சம் லிட்டர் தண்ணீரைச் சேமிக்கலாம். பண்ணைக்குட்டையை அரசு இலவசமாகவே அமைத்து தருகிறது. தண்ணீரை வீணாக்காதீர்கள் என்பது குடிதண்ணீரை மட்டுமல்ல, விவசாயத்துக்கான நீரையும்தான்” என்றார்.

கலக்கல் வருமானம் தரும் கலப்பு மீன் வளர்ப்பு! 

கலப்பு மீன் வளர்ப்பு குறித்து தஞ்சாவூர் மீன் வள ஆராய்ச்சி மையத்தின் தலைவர் முனைவர். செந்தில்குமார் பேசினார். “பண்ணைக்குட்டை அமைத்து மீன் வளர்த்து லாபம் பெறமுடியுமா? என பல விவசாயிகள் சந்தேகத்தில் இருக்கிறார்கள். நிச்சயமாக முடியும். விவசாயத்துக்கு மண்ணும், தண்ணீரும் எப்படி முக்கியமோ, அதேபோல மீன் வளர்ப்புக்கும் தண்ணீரும், மண்ணும் அவசியம். பாலித்தீன் ஷீட் விரித்தும் குட்டை அமைக்கலாம். குட்டையின்  பரப்பளவு உங்கள் நிலம், உங்கள் தேவை ஆகியவற்றைப் பொறுத்தது. ஆனால் ஆழம் 6 அடி இருக்க வேண்டும்.

‘‘செம்மண்ணுக்கு 3 நாள் பாசனம்... களிமண்ணுக்கு 5 நாள் பாசனம்..!’’

முதலில் குட்டை அமைத்து தண்ணீர் விட்டு மீன்கள் வாழத் தேவையான முதற்கட்ட வேலைகளைச் செய்ய வேண்டும். பண்ணைக்குட்டை அமைத்து, தரையில் இருந்து ஓர் அடி உயரத்துக்கு தண்ணீர் நிரப்பி ஒரு ஏக்கருக்கு 500 கிலோ பசுஞ்சாணத்தை இட வேண்டும். மட்கிய சாணமாக இருந்தால் 750 கிலோ இட வேண்டும். சாணம் போட்டு ஒரு வாரம் அப்படியே விட்டால்... தண்ணீரின் நிறம் பச்சையாக மாறி நுண்ணுயிரிகள் பெருகத் தொடங்கும். இவைதான் மீன்களுக்கு முதல்கட்ட தீவனம். பிறகு, 3 முதல் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரப்பி பல ரக மீன் குஞ்சுகளை விட வேண்டும். ஆறு, ஏழு மாதங்கள் வரை தீவனம் கொடுத்து முறையாக வளர்த்தால் நல்ல வருமானம் பார்க்க முடியும்” என்றார்.

‘‘செம்மண்ணுக்கு 3 நாள் பாசனம்... களிமண்ணுக்கு 5 நாள் பாசனம்..!’’

தேனீ வளர்ப்பு!

கருத்தரங்கில் பேசிய மதுரையைச் சேர்ந்த முன்னோடி தேனீ வளர்ப்புப் பண்ணையாளர் ஜோஸ்பின், “மலருக்கும் மலருக்கும் மணம் முடிக்கும் மிகப்பெரிய வேலையை தேனீக்கள்தான் செய்யுது. பெண் பூவில் ஆண் பூவின் மகரந்தம் பட்டாலே காய் காய்த்துவிடும். ஆண் தென்னை மரம் பாலை விடும் போது உள்ள மகரந்தத்தை பெண் தென்னையில் சேர்க்கும் போது காய்களின் விளைச்சல் அதிகமாகும். காய்கறிகள், பழங்கள்னு எல்லா வகைத் தாவரத்திலுள்ள ஆண் மகரந்தத்தை பெண் மகரந்தத்தோடு இணைத்து காய்க்க வைக்கக்கூடிய வேலையை தேனீக்கள்தான் அதிகமாகச் செய்யுது. ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் அதிக அளவில் போட்டால் தோட்டத்துக்கு தேனீக்கள் வராது. ஒரு தேனீப் பெட்டியில் 15 ஆயிரம் தேனீக்கள் வரை இருக்கும். ஒரு தோட்டத்தில் 10 தேனீப் பெட்டிகள் மட்டும் வைத்தால் போதும். தேன் பெட்டிகள் மூலம் தனி வருமானம் கிடைக்கிறதோடு மகசூலும் கூடும்” என்றார்.  

கருத்தரங்கில் பேசிய பல்வேறு கருத்துரையாளர்களின் உரை வீச்சுக்கள்.

அடுத்த இதழில்...

வீட்டுத்தோட்டம் அமைக்க ஆர்வம் வந்திருக்கு!

அறிவழகன், பள்ளி மாணவர், திருவாரூர்: “நான் 8-ம் வகுப்பு படிக்கிறேன். தாத்தா இப்போ வாழை சாகுபடி பண்ணியிருக்கார். நான் அவருக்கு விவசாயத்தில் உதவியா இருக்கேன். தாத்தாவோடதான்  அக்ரி எக்ஸ்போவுக்கு வந்திருக்கேன். வாழை குறித்து நிறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்டோம். நான், பசுமை விகடனையும் தொடர்ந்து படிச்சுக்கிட்டு இருக்கேன். இங்க வந்ததுக்கப்பறம் எனக்கு வீட்டுத்தோட்டம் போட்டுப் பராமரிக்கணும்னு ஆர்வம் வந்திருக்கு.”

‘‘செம்மண்ணுக்கு 3 நாள் பாசனம்... களிமண்ணுக்கு 5 நாள் பாசனம்..!’’

ஓர் குடையின் கீழ் ஒப்பற்ற சேவை!

முருகேசன், ஓய்வுபெற்ற மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர், ரங்கம்: “நான், பசுமை விகடன் படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் இயற்கை விவசாயம் குறித்தே தெரிஞ்சுக்கிட்டேன். இயற்கை விவசாயத்தைப் பற்றி முழுமையாகச் சொல்லித் தர்ற விக்கிப்பீடியா பசுமைவிகடன்தான். விவசாயம், விவசாயம் சார்ந்த எல்லாவற்றையும் கண்காட்சியில் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தது, ரொம்ப பயனுள்ளதா இருந்துச்சு. நானே தேடித்தேடி போனாகூட ஒவ்வொரு ஊரா போகணும். ஆனா, தேவையான எல்லாமே கண்காட்சியில இருக்கு.”