Published:Updated:

2 ஏக்கர்... 6 வகை பயிர்கள்... ரூ 43 ஆயிரம்...

2 ஏக்கர்...  6 வகை பயிர்கள்... ரூ 43 ஆயிரம்...
பிரீமியம் ஸ்டோரி
2 ஏக்கர்... 6 வகை பயிர்கள்... ரூ 43 ஆயிரம்...

மகத்தான மானாவாரி சாகுபடி!இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

2 ஏக்கர்... 6 வகை பயிர்கள்... ரூ 43 ஆயிரம்...

மகத்தான மானாவாரி சாகுபடி!இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

Published:Updated:
2 ஏக்கர்...  6 வகை பயிர்கள்... ரூ 43 ஆயிரம்...
பிரீமியம் ஸ்டோரி
2 ஏக்கர்... 6 வகை பயிர்கள்... ரூ 43 ஆயிரம்...
2 ஏக்கர்...  6 வகை பயிர்கள்... ரூ 43 ஆயிரம்...

*புரட்டாசிப் பட்டத்தில் உளுந்து, பாசிப்பயறு

*ஐப்பசிப் பட்டத்தில் நாட்டுக்கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு

கேழ்வரகுக்கு ஊடுபயிராகக் கறுப்புக் கொள்ளு

*90 நாள் வயது

*அதிக வேலை ஆட்கள் தேவை இல்லை

ரு கிலோ நெல் விளைய 4 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால், அதைவிட சத்துமிக்க சிறுதானியங்கள் விளைய 400 லிட்டர் தண்ணீரே போதும். அதுவும் மழைநீரே போதும்’ என்கிறது,  ஒர் ஆய்வறிக்கை. அப்படி, வறட்சியைத்தாங்கி எந்த நிலத்திலும், எந்தச் சூழலிலும் வளரக்கூடியவைதான் சிறுதானியங்கள்.

‘அன்னம் எப்படியோ, எண்ணம் அப்படியே! உணவின் தூய்மை உணர்ந்து, வாழ்வை எளிமையாக்கும் உன்னதப்பாதை, சிறுதானிய உணவு முறையில் பொதிந்துள்ளது’ என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அவரின் வாக்குப்படி இன்று, சிறுதானியங்களின் தேவையும், சாகுபடிப் பரப்பும் அதிகரித்துள்ளது. சிறுதானியங்களுக்கான தேவை அதிகரித்திருப்பதால்,  மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் மானாவாரி நிலங்களிலெல்லாம் இன்று சிறுதானியங்களே அதிகமாக விளைவிக்கப்படுகின்றன.  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார். இந்த வரிசையில் தானும் ஒருவராக இருக்கிறார். எப்போதும்வென்றான் என்ற ஊரிலிருந்து, 2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள காட்டுநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில்தான் ஜெயக்குமாரின் நிலம் உள்ளது. குதிரைவாலி அறுவடைப் பணியில் இருந்த ஜெயக்குமாரைச் சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2 ஏக்கர்...  6 வகை பயிர்கள்... ரூ 43 ஆயிரம்...

“எனக்குச் சொந்த ஊரே இதுதான். பாரம்பர்யமாவே விவசாயக் குடும்பம். எங்க பகுதி முழுசுமே, மழையை மட்டுமே நம்பி செய்யுற மானாவாரி விவசாயம்தான். கம்பு, சோளம், உளுந்து, பாசிப்பயறு...னு மானாவாரியில ரசாயன உரத்தைப் போட்டுத்தான் விவசாயம் செய்வாங்க. நான், ‘டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங்’ முடிச்சிட்டு வெளியூர்ல பத்து வருஷம் வேலை பார்த்தேன். அப்புறம் காண்ட்ராக்ட் வேலைகள் எடுத்து செய்துக்கிட்டு இருந்தேன். திடீர்னு அப்பா இறந்து போகவும், விவசாயம் பாக்க வந்துட்டேன். ஆரம்பத்துல நானும் ரசாயன உரம்தான் போட்டுக்கிட்டு இருந்தேன்” என்ற ஜெயக்குமார், தான் இயற்கைக்கு மாறிய கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

2 ஏக்கர்...  6 வகை பயிர்கள்... ரூ 43 ஆயிரம்...

“பக்கத்துல இருக்கிற ராசாப்பட்டி கிராமத்துல இருக்கிற ரவீந்திரன் அண்ணன்தான், ‘ரசாயன உரமே போடாம, குறைவான செலவுல இயற்கை முறையில விவசாயம் செய்றது குறித்து தெளிவா ‘பசுமை விகடன்’ல போடுறாங்க. அதை வாங்கிப் படி’னு சொல்லி எனக்கு அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்துல, ‘உரம் போடாம எப்படி மகசூல் எடுக்க முடியும்?’னு சந்தேகம் இருந்தது. பசுமை விகடனைப் படிக்க ஆரம்பிச்சதும்... குழி தோண்டுறதுல இருந்து அறுவடை வரைக்கும் ஒவ்வொரு படி நிலையையும், தெளிவாகவும் விளக்கமாகவும் வரவு செலவுகளோட எழுதுறதைப் படிக்க படிக்க நம்பிக்கை வந்துடுச்சு. அது மூலமா, வாகைக்குளம் கே.வி.கே-யில் பஞ்சகவ்யா தயாரிப்பு சம்பந்தமான பயிற்சி அறிவிப்பைப் பார்த்து போய் இயற்கை விவசாயம் குறித்து தெரிஞ்சுக்கிட்டேன். 

அதுக்கப்பறம், ‘இனிமேல் ரசாயனம் எதுவும் போடாம, இயற்கை முறையில விவசாயம் செய்யப் போறேன்’னு சொன்னதும், வீட்லயும், ஊருலயும் யாருமே நம்பலை. ஆனா, அந்த வருஷம் (2013) 50 சென்ட்ல குதிரைவாலி போட்டு கணிசமான மகசூல் எடுத்தேன். மொத்தம் நாலு ஏக்கர் நிலம் இருக்கு. ஒவ்வொரு வருஷமும் இந்த நாலு ஏக்கர் நிலத்துலயும் சிறுதானியங்களை விளைய வச்சு நானும், தம்பியும் பிரிச்சுக்குவோம். இப்ப தம்பியும் நானும் பாதி பாதியா இடத்தை பிரிச்சிக்கிட்டு, என்னுடைய பாகத்துல நான் இயற்கை விவசாயம் செய்றேன்.

2 ஏக்கர்...  6 வகை பயிர்கள்... ரூ 43 ஆயிரம்...

போன வருஷம் 40 சென்ட் நிலத்துல உளுந்து, 40 சென்ட் நிலத்துல பாசிப்பயறு, 50 சென்ட் நிலத்துல நாட்டுக்கம்பு, 45 சென்ட் நிலத்துல குதிரைவாலி, 25 சென்ட் நிலத்துல கேழ்வரகு, அதுல ஊடுபயிரா கறுப்புக் கொள்ளுனு ரெண்டு ஏக்கர்ல ஆறு வகை சிறுதானியங்களைப் போட்டு மகசூல் எடுத்திருக்கேன்” என்ற ஜெயக்குமார் தொடர்ந்தார்.

“இந்த எல்லா தானியங்களையும் ஒரே பட்டத்துல சாகுபடி செய்ய முடியும். அதுமட்டுமில்லாம, ஒரே தானியத்தை மட்டும் விதைக்கிறப்போ... ஒண்ணுக்கு விலை இல்லைன்னாலும் இன்னொன்ணு கை கொடுத்துடும். எப்போதும் வென்றான் மெயின் ரோடில் தம்பி பெட்டிக்கடை வெச்சிருக்கிறார். அவரோட கடையிலயே வெச்சு விற்பனை செய்றதால, விற்பனையில பிரச்னையே இல்லை. ரெண்டு ஏக்கர் நிலத்துல விளைஞ்ச ஆறு வகை தானியங்கள் மூலமா, மொத்தம் 43 ஆயிரத்து 325 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இதுல, மொத்தச் செலவு 18 ஆயிரத்து 720 ரூபாய். மீதி, 24 ஆயிரத்து 605 ரூபாய் லாபம். தண்ணீர் செலவு, அதிக உடல் உழைப்பு எதுவும் இல்லாம 90 நாள்ல இந்த வருமானம் கொடுப்பவை சத்தான சிறுதானியங்கள் மட்டும்தான்”  என்றார், மகிழ்ச்சியாக.

தொடர்புக்கு,
ஜெயக்குமார்,
செல்போன்: 89734-73412.

கோடை உழவுதான் மகசூலுக்கு அடிப்படை!

இயற்கை முறையில் சிறுதானியங்களை சாகுபடி செய்வது குறித்து ஜெயக்குமார் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

“சித்திரை மாத ஆரம்பத்தில் இரண்டு நாள் செம்மறி ஆட்டுக்கிடை போட்டு, ஒரு வாரம் நிலத்தைக் காயவிட வேண்டும். பிறகு, கோடை உழவு அடிக்க வேண்டும். கோடை உழவு அடிப்பதால் மண் இறுக்கம் நீங்கி பொலபொலப்பாக மாறி விடும். இதனால், மழை பெய்யும்போது நிலத்தில் விழும் மழை நீர் ஆவியாகாமல் தடுக்கப்படுவதோடு மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்கும். மண் இறுகலாக இருந்தால் மகசூல் குறையும்.

உளுந்து

வைகாசி மாதம் முழுவதும் நிலத்தைக் காய விட்டு... ஆனி மற்றும் ஆவணி மாதங்களில் தலா ஒர் உழவு அடிக்க வேண்டும். புரட்டாசியில் ஒரு மழை பெய்ததும், டில்லர் மூலமாக உழவு ஓட்டி உளுந்து விதைக்க வேண்டும். 40 சென்ட் பரப்புக்கு 3 கிலோ விதை உளுந்து தேவைப்படும். சாலில் விதையைத் தூவிவிட்டாலே போதும். 5-ம் நாள் முளைப்பு தெரியும். 30 மற்றும் 45-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். 35-ம் நாளில் இருந்து 15 நாட்கள் இடைவெளியில்... 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

பூ பூக்கும் நேரத்தில் இஞ்சி-பூண்டுக் கரைசல்!


50-ம் நாளில் பூ பூக்கும். இந்த சமயத்தில் பூச்சிகள் தாக்க வாய்ப்பு உள்ளதால்...

இஞ்சி-பூண்டுக் கரைசல் தெளிக்க வேண்டும் (தயாரிப்பு முறை தனியே கொடுக்கப்பட்டுள்ளது). ஒரு முறை தெளித்தாலே பூச்சிகள் வராது. 60-65-ம் நாளில் காய் பிடிக்க ஆரம்பித்து 80-ம் நாளுக்கு மேல் முதிர்ச்சி அடையும். 90-ம் நாளுக்கு மேல் உளுந்தை அறுவடை செய்யலாம்.

பாசிப்பயறு!

உளுந்துக்கு தயார் செய்தது போலவே நிலத்தைத் தயார் செய்து... பாசிப்பயறு விதைக்க வேண்டும். பாசிப்பயறுக்கும் புரட்டாசிப் பட்டம்தான் ஏற்றது. 40 சென்ட் நிலத்தில் விதைக்க ஒன்றரை கிலோ பாசிப்பயறு விதை தேவை. விதைத்த 30 மற்றும் 45-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். 45-ம் நாளுக்கு மேல் பூக்கள் பூக்கும். இந்த சமயத்தில் இஞ்சி-பூண்டுக் கரைசலைத் தெளிக்க வேண்டும். 65-ம் நாளில் காய் பிடிக்க ஆரம்பிக்கும், 90-ம் நாளில் பாசிப்பயறின் காய் காய்ந்து விடும். அதன் பிறகு அறுவடை செய்யலாம்.

ஐப்பசிப் பட்டத்தில் தானியங்கள்! 

நாட்டுக்கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, கறுப்புக்கொள்ளு ஆகிய நான்கு தானியங்களுக்கும் ஐப்பசிப் பட்டம்தான் ஏற்றது. உளுந்துக்கு தயார் செய்வது போலவே நிலத்தைத் தயார் செய்ய வேண்டும். ஐப்பசி மாத தொடக்கத்தில் மழை பெய்ததும் நாட்டுக்கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, கறுப்புக்கொள்ளு ஆகியவற்றின் விதைகளை நேரடியாக நிலத்தில் விதைத்து டில்லர் மூலம் உழவு ஓட்ட வேண்டும். 50 சென்ட் நிலத்தில் விதைக்க அரை கிலோ நாட்டுக்கம்பு விதை தேவை. 45 சென்ட் நிலத்தில் விதைக்க, அரை கிலோ குதிரைவாலி விதை தேவை. 25 சென்ட் நிலத்தில் விதைக்க, அரை கிலோ கேழ்வரகு விதை தேவை. கேழ்வரகுக்கு ஊடுபயிராக விதைக்க அரை கிலோ கறுப்புக்கொள்ளு விதை தேவை.

கேழ்வரகு விதைத்த பிறகே ஊடுபயிராக கறுப்புக் கொள்ளு விதைக்க வேண்டும். குதிரைவாலி, கேழ்வரகு ஆகிய இரண்டு தானியங்கள் மிக நுண்ணியதாக இருப்பதால், மணலில் கலந்து நிலத்தில் தூவி விட வேண்டும். மணல் கலந்து தூவுவதால் பரவலாக எல்லா இடத்திலும் விதை பரவும். நாட்டுக்கம்பு, கொள்ளு ஆகிய விதைகளை மணல் கலக்காமல் நேரடியாகவே நிலத்தில் விதைக்கலாம். 45-ம் நாள் களை எடுத்து பஞ்சகவ்யா மட்டும் தெளித்து வந்தால் போதும். நான்கு பயிர்களுமே 100-வது நாளில் அறுவடைக்கு வந்து விடும்.

2 ஏக்கர்...  6 வகை பயிர்கள்... ரூ 43 ஆயிரம்...

நாட்டுக்கம்பு மற்றும் குதிரைவாலி ஆகியவற்றில் தலா 200 கிலோ அளவில் மகசூல் கிடைத்துள்ளது. இவை இரண்டையும் உமி நீக்கி, சுத்தப்படுத்தித்தான் விற்பனை செய்கிறார், ஜெயக்குமார். “200 கிலோ நாட்டுக்கம்பை சுத்தப்படுத்தினால், 160 கிலோ அரிசி கிடைக்கும். 200 கிலோ குதிரைவாலியை உமி நீக்கினால், 110 கிலோ அரிசி கிடைக்கும்” என்கிறார், ஜெயக்குமார்.

தானியங்களின் மருத்துவ மகத்துவம்!  

தானியங்களிலேயே அதிக சத்துமிக்கது, கேழ்வரகு. இதில் புரதம், சுண்ணாம்பு, இரும்பு, தாது உப்பு மற்றும் உயிர்ச்சத்துக்கள் இருக்கின்றன. இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருப்பதோடு, குடலுக்கு குளுமை அளிக்கும். இதில் கால்சியம் சத்து அதிகம். மாதவிடாய்ப் பிரச்னை உள்ளவர்கள் கேழ்வரகைக் கூழாக சாப்பிடலாம்.

கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உளுத்தம்பருப்புடன், இருவாச்சி இலைகளை வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் பித்தம், மயக்கம் சரியாவதோடு ரத்தக்கொதிப்பையும் கட்டுப்படுத்தும். பருவமடைந்த பெண்களுக்கு உளுந்தங்கஞ்சி அல்லது களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்பு வலிமை பெறுவதோடு உடல் பலமும் உண்டாகும்.

பாசிப்பயறை வேக வைத்து கர்ப்பிணிகளுக்குக் கொடுத்தால் எளிதில் ஜீரணமாகும். வளர் இளம் பருவத்தினருக்கு பாசிப்பயறு சிறந்த உணவு. பாசிப்பயறு வேகவைத்த தண்ணீரை சூப் போல குடித்து வந்தால், வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.  

இரவில் அதிக நேரம் தூங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை பார்ப்பவர்கள், அதிக வெப்பமான பகுதிகளில் வேலை செய்பவர்கள் காலை கம்பை கஞ்சியாகக் காய்ச்சிக் குடித்து வந்தால் உடல் சூடு தணிவதோடு அஜீரணக்கோளாறும் குணமடையும்.

குதிரைவாலியில் நார்ச்சத்து மிகுதியாகக் காணப்படுவதால், உடலில் மலச்சிக்கலைத் தடுப்பதிலும், கொழுப்பின் அளவைக் குறைப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. சர்க்கரை மற்றும் இதயநோயாளிகளுக்கு இது நல்லுணவாகப் பயன்படுவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது. கொள் ஊற வைத்து அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். ஊளைச்சதையைக் (கொழுப்பு) குறைக்கக்கூடிய முக்கிய தானியம் கொள்ளு. எலும்புக்கும், நரம்புக்கும் பலம் கொடுக்கக்கூடியது. கடினமான உடல் உழைப்பு வேலை செய்பவர்களுக்கு, இது சிறந்த உணவு. அதனால்தான் முன் காலத்தில் குதிரைக்கும் கூட கொள்ளுப்பயறை உண்ணக் கொடுத்தார்கள்.

இஞ்சி-பூண்டுக் கரைசல்!

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை தலா கால் கிலோ எடுத்து அரைத்து, அதை ஒரு லிட்டர் பசு மாட்டுச் சிறுநீரில் இரண்டு நாட்கள் ஊற வைத்தால், இஞ்சி-பூண்டுக் கரைசல் தயார். 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism