Published:Updated:

சித்திரை மாத புழுதி... பத்தரை மாற்றுத் தங்கம்!

சித்திரை மாத புழுதி... பத்தரை மாற்றுத் தங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
சித்திரை மாத புழுதி... பத்தரை மாற்றுத் தங்கம்!

மண்ணைப் பொன்னாக்கும் பொன்னேர்! பாரம்பர்யம் இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம்

சித்திரை மாத புழுதி... பத்தரை மாற்றுத் தங்கம்!

மண்ணைப் பொன்னாக்கும் பொன்னேர்! பாரம்பர்யம் இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம்

Published:Updated:
சித்திரை மாத புழுதி... பத்தரை மாற்றுத் தங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
சித்திரை மாத புழுதி... பத்தரை மாற்றுத் தங்கம்!
சித்திரை மாத புழுதி... பத்தரை மாற்றுத் தங்கம்!

*அடிமண் இறுக்கம் நீங்கும்

*ஈரப்பதம் சேமிக்கப்பட்டு விளைச்சல் கூடும்

*களைகள் கட்டுப்படும்

*பூச்சிகள் கட்டுப்படும்

ண்டு முழுவதும் நல்ல மகசூல் கிடைக்க வேண்டுமென்று... தமிழ் வருடப் பிறப்பான சித்திரை மாதத் தொடக்கத்தில் உழவு ஓட்டி சூரியபகவானிடம் வேண்டுதல் செய்வதே ‘பொன்னேர் உழவு’ என்பதாகும். இது, காலம்காலமாக ஒவ்வொரு சித்திரையிலும் தமிழர்கள் கடைப்பிடிக்கும் வழக்கமாகும்.

பொன்னேர் உழவு குறித்து... திருநெல்வேலியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் மற்றும் வரலாற்று

சித்திரை மாத புழுதி... பத்தரை மாற்றுத் தங்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆய்வாளருமான முனைவர்.தொ.பரமசிவனிடம் பேசினோம். “தமிழகத்தில் வழக்கமாக, ‘இருபோக நஞ்சை ஒரு போகம் புஞ்சை’ அல்லது ‘ஒருபோகம் நஞ்சை இருபோகம் புஞ்சை ‘என முப்போக விளைச்சல் உண்டு. அறுவடை முடிந்து பயிரின்றி வெறுமையாக, தரிசாகக் கிடக்கும் நிலத்துக்கு ‘கரந்தை’ என்று பெயர். நிலத்தை தரிசு நிலம் என்பதை அமங்கலம் என்பார்கள், தரிசு என்று சொல்லாமல், கரந்தை என்றுதான் சொல்வார்கள். அதனால்தான், பழைய கால விளைநில விற்பனைப் பத்திரங்களில் ‘இந்த இடத்தை கரந்தையுடன் கிரயம் செய்துகொடுக்கிறேன்’ என்ற வரிகள் எழுதப்பட்டிருக்கும். அறுவடை முடிந்துள்ள கரந்தை நிலம் புழுதிபடிந்த நிலமாக இருக்கும். சித்திரை மாதத்தில் முதல்மழை பெய்தவுடன் அதில் உழவு செய்வார்கள். இதை ‘நல்லேர் பூட்டுதல்’, ‘புழுதிஉழவு’, ’கோடைஉழவு’ என்று வட்டார வழக்கில் சொல்வார்கள்.

சித்திரையின் முதல்நாளன்றோ, அல்லது சித்திரை மாத வளர்பிறையிலோ... கலப்பைக்கு மஞ்சள் பூசி, பூ கட்டி, வணங்கி மாடுகளைத் தயார் செய்வார்கள். பிறகு, ஊர் பொதுவயலில், ஊரிலுள்ள விவசாயிகள் அனைவரும் ஏர் பூட்டி ஒன்று சேர்ந்து உழுவதற்குப் பெயர்தான் பொன்னேர் உழுதல். விவசாயத்தின் பெருமை கருதி சொல்லப்பட்ட சொல்தான் ‘பொன்னேர்’.

ஊர் பொதுநிலத்தில் பொன்னேர் பூட்டி உழுது, தானியங்களை விதைத்துவிட்டு பிறகு, அவரவருக்குச் சொந்தமான நிலங்களில் உழுது விட்டு ஏதாவது ஒரு தானியத்தை சம்பிரதாயத்துக்கு விதைப்பார்கள். இதில் முளைத்து வளரும் தானிய பயிர்களில் ஊர் கன்று, காளைகளை (கோயில்மாடுகள்) மேய விடுவார்கள். நிலத்தை மீண்டும் விவசாயத்துக்குத் தகுதிபடுத்த ஊர் விவசாயிகள் ஒன்றுகூடி கடைப்பிடிக்கும் உன்னதமான தொழில்நுட்பம்தான் இது. கால காலமாக பின்பற்றப்பட வேண்டும் என்பதால், புனிதமான நிகழ்வாக பதிய வைத்துள்ளனர்” என்றார், தொ.பரமசிவன். 

சித்திரை மாத புழுதி... பத்தரை மாற்றுத் தங்கம்!

ஊர்கூடி உழவு செய்வோம்!

இதைப்பற்றிப் பேசிய,  தூத்துக்குடி மாவட்டம் வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வரதராஜன். “சித்திரை மாத புழுதி, பத்தரை மாற்றுத் தங்கம்னு சொல்வாங்க. சித்திரையில மழை பெஞ்சா பொன் ஏர் கட்டலாம்னு கிராமத்தில் சொலவடையே இருக்கு. எங்க கிராமத்துல எப்பவுமே சித்திரை மாசம் முதல் வெள்ளிக்கிழமைதான் பொன்னேர் உழுவோம். மாடுகளைக் குளிப்பாட்டி மாலை போட்டு அலங்காரம் செய்வோம்.

வீட்டில் சாணி மெழுகி, விளக்கேற்றி மஞ்சளில் பிள்ளையார் பிடிச்சு அதுல அருகம்புல் செருகி வைப்போம். நாழி நிறைய நெல்லு வச்சு தேங்காய்ப்பழம் உடைச்சு, மாடுகளுக்கும், ஏர்க்கலப்பைக்கும் சாம்பிராணி காட்டி... தோள்ல ஏரைத் தூக்கிக்கிட்டு கையில மாட்டையும் பிடிச்சிக்கிட்டு ஊர்க்காளியம்மன் கோவிலுக்கு முன்னால கொண்டுவந்து மாடுகளை வரிசையா நிப்பாட்டுவோம். ஏர்க்கலப்பையையும் வரிசையா வெச்சிடுவோம்.

ஒவ்வொரு வீட்டுலயும் இருக்கிற விதையை ஒரு கைப்பிடி எடுத்து ஓலைப்பெட்டியில் போட்டு பெட்டியை சாமி முன்னால வெச்சு கும்பிடுவோம். ஏர்க்கலப்பைக்கும், மாடுகளுக்கும் மஞ்சள் தண்ணீர் தெளிச்சு, சூடம் ஏத்திட்டு... வரிசையா மாடுகளை ஓட்டி, கோவில் நிலத்துல உழுது விதைப்போம். அடுத்து சொந்த வயலை உழுவோம். வயலுக்குப் போன வீட்டு ஆம்பளை களைப்போட வீட்டுக்கு வரும் போது களைப்பு தீர மோர், பானக்கரம்னு ஏதாவது குடிக்கக் கொடுப்பாங்க. சித்திரையில உழவடிச்சா அந்த வருஷம் முழுவதும் விவசாயம் செழிக்கும்னு நம்பிக்கை” என்றார்.

சித்திரை மாத புழுதி... பத்தரை மாற்றுத் தங்கம்!

தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிக்குளம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின், உழவியல் துறை பேராசிரியர் முனைவர். மனோகரன் கோடை உழவின் பயன்கள் குறித்து சில விஷயங்களைச் சொன்னார்.

 “கோடையில் கிடைக்கும் மழைநீரை நிலத்தை விட்டு வெளியேறாமல் தடுத்து, மண்ணிலேயே நிலை நிறுத்தி மண்ணின் ஈரப்பதத்தை அதிகப்படுத்துவதுதான் கோடை உழவின் நோக்கம். மேலும், மண்ணில் மறைந்துள்ள தீமை செய்யும் பூச்சிகள், புழுக்கள் மேற்பரப்பில் கொண்டுவரப்படும். அந்தப் பூச்சிக்கள் பறவைகளுக்கு இரையாகும். மண் இடுக்குகளில் உள்ள கூண்டுப்புழுக்கள், முட்டைகள் வெயிலில் காய்ந்துவிடும். மேலும், களைகளின் விதைகள் மேற்பரப்பில் கொண்டுவரப்பட்டு அவ்விதைகள் முளைத்து
கோடை வெயிலின்தாக்கத்தால் காய்ந்துவிடும். இடைவெளி விட்டு அடுத்தடுத்த முறை உழும் போது மீண்டும் முளைக்கும் களைகளும் கட்டுப்படும். ஒவ்வொரு முறை அறுவடை செய்த பிறகும், ஒவ்வொரு மழை பெய்த பிறகும் உழவடிப்பதால் மகசூலும் அதிகரிக்கும். மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் மானாவாரி நில விவசாயிகளுக்கு கோடைமழைதான் உயிர்நாடி” என்று அழகாக நுட்பங்களை அடுக்கினார் மனோகரன்.

தொடர்புக்கு,
வரதராஜன்,
செல்போன்: 99947-54177.
மனோகரன்,
செல்போன்: 94862-41647.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism