Published:Updated:

“விலை இருக்கு... ஆனா, விதை இல்லை...”

“விலை இருக்கு... ஆனா, விதை இல்லை...”
பிரீமியம் ஸ்டோரி
“விலை இருக்கு... ஆனா, விதை இல்லை...”

மன உளைச்சலில் உளுந்து விவசாயிகள்! கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன், ம.அரவிந்த்

“விலை இருக்கு... ஆனா, விதை இல்லை...”

மன உளைச்சலில் உளுந்து விவசாயிகள்! கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன், ம.அரவிந்த்

Published:Updated:
“விலை இருக்கு... ஆனா, விதை இல்லை...”
பிரீமியம் ஸ்டோரி
“விலை இருக்கு... ஆனா, விதை இல்லை...”
“விலை இருக்கு... ஆனா, விதை இல்லை...”

*உளுந்து கொள்முதல் விலை 98 ரூபாய்

*தனியார் விதை உளுந்து 180 ரூபாய்

*வேளாண் துறையில் 125 ரூபாய்

டெல்டா மாவட்டங்களில் மார்கழி, தைப் பட்டங்களில் நெல் அறுவடைக்குப் பிறகு, உளுந்து சாகுபடி செய்வது வழக்கம். உளுந்து விலை வீழ்ச்சியால் கடந்த சில ஆண்டுகளாக சாகுபடிப் பரப்பு குறைந்து வந்த நிலையில்... கடந்த ஆண்டு இறுதியில், உளுந்து விலை உச்சத்துக்குச் சென்றது. இதனால், மகிழ்ந்த விவசாயிகள், கடந்த மார்கழி, தைப் பட்டங்களில் அதிகளவில் உளுந்து விதைத்துள்ளனர். அவை தற்போது அறுவடையாகிக் கொண்டிருக்கிறது. அடுத்து சித்திரைப் பட்டத்திலும் உளுந்து விதைக்க பலர் தயாராகி வருகிறார்கள். ஆனால், விதை உளுந்துக்கு டெல்டா மாவட்டங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தேவை 60 கிலோ... கிடைத்தது 20 கிலோ!

‘இந்தத் தட்டுப்பாட்டுக்கு வேளாண் துறையின் அலட்சியம்தான் காரணம்’ என்று குற்றம்சாட்டுகிறார்கள், விவசாயிகள்.

இதுகுறித்துப் பேசிய தஞ்சாவூர் மாவட்டம், ஆர்.சுத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகர், “ஒவ்வொரு வருஷமும் மார்கழி கடைசியில மூணு ஏக்கர் நிலத்துல உளுந்து போடுவோம். போன வருஷம் கிலோ 55 ரூபாய்னுதான் விற்பனையாச்சு. அதனால, ஒரு ஏக்கர்ல மட்டும்தான் உளுந்து போட்டோம். ஆனா, கடந்த ஏழெட்டு மாசமா வெளிமார்க்கெட்ல ஒரு கிலோ உளுந்து 180 ரூபாய்ல இருந்து 200 ரூபாய் வரை விற்பனையானது. அதனால, கண்டிப்பா நல்ல விலை கிடைக்கும்னு எதிர்பார்த்து... ரெண்டு ஏக்கர்ல உளுந்து போட்டோம். ஏக்கருக்கு 8 குவிண்டால் மகசூல் கிடைச்சது.

ஒரு கிலோ 98 ரூபாய்னு விற்பனையாச்சு. அதனால சித்திரைப்பட்டத்துல 6 ஏக்கர்ல உளுந்து போடலாம்னு முடிவு பண்ணி விதை வாங்கப்போனா, விதை கிடைக்கலை. வேளாண் விரிவாக்க மையத்துல 20 கிலோதான் கிடைச்சது. எங்களுக்கு 60 கிலோ விதை தேவை. வேளாண் விரிவாக்க மையங்கள்ல முறையா கொள்முதல் செய்து வைக்காததால விதைக்கு விவசாயிங்க அல்லாடிக்கிட்டு இருக்கோம்” என்றார்.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச்செயலாளர் சுகுமாறன், “தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் இந்த மூணு மாவட்டங்கள்லயும் மார்கழி, தைப்பட்டத்துல கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஹெக்டேருக்கு அதிகமான பரப்பளவுல உளுந்து சாகுபடி நடக்கும். கொஞ்ச வருஷமா ஆந்திராவில் இருந்து உளுந்து வர்றதால இங்க விலை கிடைக்கலை. ஆனா, எள்ளுக்கு விலை கிடைச்சது. அதனால, நிறைய பேர் உளுந்தை விட்டுட்டு எள்ளுக்கு மாறினாங்க. இந்த வருஷம் எள்ளுக்கு விலையில்லை.
ஆந்திரா வரத்து குறைஞ்சதால உள்ளூர் உளுந்துக்கு நல்ல விலை கிடைக்குது. அதனால, சித்திரைப் பட்டத்துலயும் உளுந்து சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வத்தோடு இருக்காங்க. ஆனா, வேளாண் விரிவாக்க மையங்கள்ல விதை தட்டுப்பாடா இருக்கு.

“விலை இருக்கு... ஆனா, விதை இல்லை...”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாது!

இதைப் பயன்படுத்தி சிலர் விதைக்குப் பக்குவப்படுத்தாத சாதாரண உளுந்தையே ‘விதை உளுந்து’னு சொல்லி விற்பனை செய்ய ஆரம்பிக்கிறாங்க. (சாதா உளுந்து 98 ரூபாய். விதை உளுந்து 180 ரூபாய்). இப்படி விற்கிற விதை உளுந்தை ‘உண்மை நிலை விதை’னு லேபிள் போட்டு விற்பனை செய்வாங்க. அதை வாங்கினா விளைச்சலுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. நீதிமன்றத்துக்குக் கூட போக முடியாது. ‘சான்று விதை’னு லேபிள் போட்டு அது முளைக்காமல் போனால்தான் நீதிமன்றம் போக முடியும். இந்த நிலைமையில சான்று விதைகளை தனியார் கடைகள்ல 200 ரூபாய்க்கு மேல விலை சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. வேளாண் விரிவாக்க மையத்துல ஒரு கிலோ விதை உளுந்து 125 ரூபாய்தான்” என்று ஆதங்கப்பட்ட சுகுமாறன் தொடர்ந்தார்.

விவசாயிகளை அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்!

“வேளாண்துறை அதிகாரிகள், விதை உற்பத்தியில ரொம்பவே மந்தமாகவும் அலட்சியமாகவும் இருக்காங்க. தொலைநோக்குப் பார்வை, முன்கணிப்பு, திட்டமிடல் எதுவுமே இல்லை. ஒருவேளை தனியார் விதை வியாபாரிகளோடு கூட்டு சேர்ந்துக்கிட்டு, உள்நோக்கத்தோடுதான் இதுமாதிரி நடந்துக்கிறாங்களோனு சந்தேகமா இருக்கு” என்று வேளாண்மை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டினார், சுகுமாறன்.

“விலை இருக்கு... ஆனா, விதை இல்லை...”

சித்திரையில் விதை கிடைக்கும்!

விதை உளுந்து தட்டுப்பாடு குறித்து தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஞானஒளியிடம் பேசினோம். “மொத்த விதை உளுந்து தேவையில் 13 சதவிகித அளவைத்தான் வேளாண் துறை நிறைவு செய்யும். இது நாடு முழுவதும் உள்ள நடைமுறை. சித்திரைப் பட்டத்துக்கு தேவையான விதை உளுந்து கொள்முதல் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் வேளாண் விரிவாக்க மையங்களுக்கு விதை அனுப்பப்படும்.

சித்திரை முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு விதை உளுந்து விற்பனைக்குக் கிடைக்கும். மார்கழி, தைப் பட்டத்தோடு ஒப்பிடும்போது சித்திரைப் பட்டத்தில் மிகவும் குறைவான பரப்பில்தான் உளுந்து சாகுபடி நடைபெறும். அதற்கு ஏற்ப வினியோகம் செய்யப்படும்” என்றார், ஞானஒளி.

திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மயில்வாகனனும் இதே போன்ற பதிலைத்தான் சொன்னார்.

வேளாண் இணை இயக்குநர்கள் சொன்ன தகவல் பற்றி சுகுமாறனைத் தொடர்பு கொண்டு சொன்னோம். உடனே உணர்ச்சிவசப்பட்ட அவர், “முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பாக்கிறாங்க. மொத்த தேவையில் 13 சதவிகிதத்தை வேளாண் துறை பூர்த்தி செய்வதாகச் சொல்றது முழுப் பொய். இவங்க 3 சதவிகித அளவுக்குக் கூட விதை கொடுக்கிறதில்லை. என்னால் ஆதாரப்பூர்வமா நிரூபிக்க முடியும்.

மேலத் திருப்பந்துருத்தி வேளாண் விரிவாக்க மையத்துக்கு உட்பட்ட 20 வருவாய் கிராமங்கள்ல கிட்டத்தட்ட 750 ஏக்கர்ல போன மார்கழி, தைப் பட்டங்கள்ல உளுந்து சாகுபடி நடந்தது. ஏக்கருக்கு 10 கிலோங்கிற கணக்குல 7 ஆயிரத்து 500 கிலோ விதை தேவைப்பட்டது. ஆனா, விரிவாக்க மையத்தில் மொத்தமே 100 கிலோ விதையைத்தான் விற்பனை செஞ்சாங்க?” என்று சீறித்தள்ளினார்.