Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

பயறு வகை சாகுபடி!

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில், ஏப்ரல், 18-ம் தேதி, ‘திலேப்பியா மீன் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம். 

தொடர்புக்கு, தொலைபேசி: 04286-266345

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தண்டோரா

மருத்துவ மாநாடு!

தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, அகத்தியர் மூலிகை உடலியக்க மருத்துவ மையத்தில், ஏப்ரல் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை மரபுவழி மருத்துவ தேசிய மாநாடு நடைபெற உள்ளது. யோகா, மூலிகை, சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் ஆகிய தலைப்புகளில் நிபுணர்கள் உரையாற்றுவார்கள். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 98424-70586, 98439-70586

மூலிகைக் கருத்தரங்கு!

கொல்லிமலை, அறப்பளீஸ்வரர் ஆலயம் அருகில், ஏப்ரல் 20, 21 ஆகிய தேதிகளில் மூலிகை மற்றும் வர்ம கருத்தரங்கு நடைபெற உள்ளது.  மூலிகைகளின் மருத்துவ குணம், வர்மத்தின் வழியாக நோய்களைக் குணமாக்கும் முறைகள் பற்றி வல்லுநர்கள் பேச உள்ளனர். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 96889-53690.

செம்மறியாடு வளர்ப்பு!

சேலம் கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஏப்ரல் 20-ம் தேதி, ‘செம்மறியாடு வளர்ப்பு’, 26-ம் தேதி ‘இறைச்சிக் கோழி வளர்ப்பு பயிற்சி’ நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408

காளான் வளர்ப்பு!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஏப்ரல் 26-ம் தேதி, ‘காளான் வளர்ப்பு’, 27-ம் தேதி, ‘இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்’, ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626

வேளாண்மைத் திருவிழா!

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, சந்தோஷ் பார்ம்ஸில், ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று ‘வேளாண்மைத் திருவிழா’ நடைபெற உள்ளது. இதில் இயற்கை விவசாயம், இடுபொருட்கள் தயாரிப்பு, வீட்டுத் தோட்டம் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கு, முன்னோடி விவசாயிகளின் அனுபவப் பகிர்வு... போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும் விவசாய விளைபொருட்கள் சுயம்வர விழாவில், விவசாயிகள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு வைக்கலாம். திருவிழாவுக்கு வரும்போது ஒவ்வொருவரும் ஒர் உணவுப் பொட்டலம் எடுத்து வரவேண்டும். மதிய உணவு நேரத்தின்போது அவை மாற்றிக் கொள்ளப்படும்.

அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94424-16543

கட்டணப் பயிற்சி

கால்நடைகளுக்கு அசோலா!

தண்டோரா

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தா கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், ஏப்ரல் 16-ம் தேதி, ‘வளர்ச்சி ஊக்கிகள் தயாரித்தல்’ 23-ம் தேதி, ‘அசோலா கால்நடைத்தீவனப் பயிற்சி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு பயிற்சிக்கும் கட்டணம் `100. முன்பதிவு அவசியம்.

தொலைபேசி: 04652-246496