நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

காய்கறிகள்... பழங்கள்... மூலிகைகள்... மாடியில் செழிக்கும் இயற்கைத் தோட்டம்!

காய்கறிகள்... பழங்கள்... மூலிகைகள்...  மாடியில் செழிக்கும்  இயற்கைத் தோட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
காய்கறிகள்... பழங்கள்... மூலிகைகள்... மாடியில் செழிக்கும் இயற்கைத் தோட்டம்!

பி.நிர்மல், படங்கள்: க.சர்வின்

காய்கறிகள்... பழங்கள்... மூலிகைகள்...  மாடியில் செழிக்கும்  இயற்கைத் தோட்டம்!

ஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்திச் செய்துகொள்ளும் வகையில்... மாடித்தோட்டம் அமைக்கும் முறை, நகரங்களில் பெருகி வருகிறது. தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையும் மாடித்தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் கிடைப்பதால்தான்... மாடித்தோட்டம் மக்களின் விருப்பத்துக்கு உரிய ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில், மாடித்தோட்டம் அமைத்து இயற்கை முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார், சென்னை, ராஜாஅண்ணாமலைபுரத்தை சேர்ந்த பொறியாளர் ராதாகிருஷ்ணன்.

காய்கறிகள்... பழங்கள்... மூலிகைகள்...  மாடியில் செழிக்கும்  இயற்கைத் தோட்டம்!

ஒரு விடுமுறை நாளில் மாடித்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ராதாகிருஷ்ணனைச் சந்தித்தோம். “விவசாயம் எனக்கு பரம்பரைத் தொழில். அதனால் சிறு வயதிலிருந்தே செடிகள், உயிரினங்கள் மீது பிரியம் அதிகம். நான் படிப்பு முடிச்சதும் வேலைக்காக வெளிநாடு போய்ட்டேன். அப்பறம் இங்க வந்தப்பறம் வீடு கட்ட முடிவு பண்ணினேன். கட்டும்போதே மாடித் தோட்டத்துக்கும் பிளான் பண்ணிட்டேன். 600 சதுர அடியில் மாடித்தோட்டம் இருக்கு. ஆரம்பத்துல சீக்கிரம் அறுவடைக்கு வர்ற காய்கறிகளை மட்டும் விளைவிச்சேன். காய்கறிகளோட ருசி நல்லா இருக்கவும்... வீட்டுக்குத் தேவைப்படுற எல்லா காய்கறிகள், பழங்களையும் நானே பயிர் செய்ய ஆரம்பிச்சுட்டேன்” என்ற ராதாகிருஷ்ணன் ஒவ்வொரு செடிகளாகக் காட்டிக்கொண்டே பேசினார்.

“6 வகையான அவரைக்காய்கள், நான்கு வகையான கத்திரிக்காய்கள் இருக்கு. மாதுளை, தர்பூசணி, பப்பாளி, சுரைக்காய், தக்காளி, முட்டைக்கோஸ் எல்லாமே மாடியில் விளைவிக்கிறேன். அதோட, அம்மான்பச்சரிசி, பூனைமீசை, முடக்கத்தான், தவசிக்கீரை, ஆடாதொடா, மஞ்சள் கரிசலாங்கண்ணி, விபூதிபச்சிலை, மருதாணி, வெற்றிலை...னு மூலிகைகளும் இருக்கு.

காய்கறிகள்... பழங்கள்... மூலிகைகள்...  மாடியில் செழிக்கும்  இயற்கைத் தோட்டம்!

2 வருஷமா வெளியில காய்கறி, கீரைகளை வாங்குறதேயில்லை. அரிசி, பருப்பு, எண்ணெய் எல்லாம் சொந்த ஊர்ல இருந்து வந்துடும். வீட்டுல இருக்குற காய்கறிகளை வெச்சு அன்னன்னிக்கு சமையலை முடிவு பண்ணிக்குவோம்” என்ற ராதாகிருஷணன் நிறைவாக,

“நகரத்தில் இருந்தாலும் எங்களுக்கு இயற்கை உணவு சாத்தியமானது, மாடித்தோட்டத்தாலதான். நான் கட்டுமானத் தொழில்ல இருக்கறதால யாருக்கு வீடு கட்டிக் கொடுத்தாலும் அங்க மரக்கன்று நட இடம் ஒதுக்கி இலவசமாவே கன்றுகளைக் கொடுத்துடுவேன். கேட்டு வர்றவங்களுக்கு வீட்டுத்தோட்டம் அமைக்க ஆலோசனையும் சொல்லிட்டு இருக்கேன்” என்று சொல்லி விட்டு செடிகளுக்கு தண்ணீர் விடுவதில் மும்முரமானார்.

தொடர்புக்கு,
ராதாகிருஷ்ணன்,
செல்போன்: 96001-13177.

தினமும் செடிகளைக் கவனி!

காய்கறிகள்... பழங்கள்... மூலிகைகள்...  மாடியில் செழிக்கும்  இயற்கைத் தோட்டம்!

மாடித்தோட்டம் அமைக்கும் விதம் குறித்துச் சொன்ன ராதாகிருஷ்ணன், “மாடித்தோட்டத்துக்கு பொறுமையும், இயற்கை குறித்த புரிதலும் அவசியம். காலையில் எழுந்த உடனே செடிகளை கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் பூச்சிகள் நடமாட்டம் இருந்தால் தெரியும். பூச்சித் தாக்குதல் இருந்தால்... அந்தப் பகுதிகளை தண்ணீரில் நன்றாக அலசி வேப்ப எண்ணெயை தெளிக்க வேண்டும். செடிகள் வாடியிருந்தால் பஞ்சகவ்யாவை தெளிக்க வேண்டும். செடிகளில் நோய்களை மட்டும் ஒழித்து விட்டால் போதும். வேறு பிரச்னைகளே இருக்காது. செடிகளை நடுவதற்கு முன்... மண்புழு உரம், தேங்காய் நார், வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை மண்ணோடு கலந்து நட்டால், செடிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும்” என்றார்.