இதோ தேர்தல் வந்துவிட்டது. விவசாயக் கடன், பம்ப் செட்டுக்கு இலவச மின் இணைப்பு... என நீங்கள் தேடித் தேடிச் சென்றபோது உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் இப்போது உங்களைத் தேடி உங்கள் வாசலுக்கே வருகிறார்கள். அவர்களிடம், ‘செய்வதாகச் சொன்னீர்களே... செய்தீர்களா’ என கேளுங்கள். எங்கள் ஓட்டு வேண்டும் என்றால் இதையெல்லாம் செய்யுங்கள்’ என உங்களின் தேவையைச் சொல்லி கட்டளையாக... மக்கள் கட்டளையாக உத்தரவிடுங்கள்.

*முதல்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள முன்னோடி விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள் மக்கள் கட்டளையாக இங்கே இடம் பிடித்துள்ளன...

*கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வருவதைப் போல கம்பு, வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை, அரசே கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.

*இயற்கையைச் சீரழிக்காமல், நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்வதற்காகவும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து பாரம்பர்ய ரகங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 100 % மானியம் வழங்க வேண்டும்.

*இயற்கை விவசாயத்துக்காக நாட்டு மாடுகள் வாங்குவதற்கு வங்கிக்கடன் வழங்க வேண்டும்.

*இயற்கை விவசாய விளைபொருட்களுக்கான சந்தையை மாவட்டம் தோறும் அரசாங்கமே உருவாக்க வேண்டும்.

*ஏரி, குளங்களில் வண்டல் மண் அள்ளும் உரிமை அந்தந்தப் பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த வண்டல் மண்ணை வேளாண்மைக்குப் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் அதிகரிக்கும். ஏரி குளம் போன்றவை சீரான இடைவெளியில் தூர் வாரப்பட்டும் விடும்.

*பழங்குடி மக்களைத்தவிர வனங்களில் வசிக்கும் அனைவரையும் வெளியேற்ற வேண்டும். வனங்களில் கட்டடங்கள் கட்ட அனுமதிக்கக் கூடாது. ஏற்கெனவே உள்ள கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும். வனம் என்பது விலங்குகளின் உலகம். அவை ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கின்றன. அதன் வாழ்வியல் சங்கிலித்தொடர்பு என்றும் அறுந்து போகக்கூடாது.

*யானை வழித்தடங்களை மறித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

*ஊருக்குள், விவசாய நிலங்களுக்குள் விலங்குகள் வந்து சேதம் ஏற்படுத்தாமல் இருக்க தொலைநோக்கு அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*பயிர்வாரி விவசாய முறையைக் கட்டாயமாக நடை முறைப்படுத்த வேண்டும்.

*புதிய போர்வெல்கள் அமைப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அரசாங்கமே விவசாய நிலங்களில் மானியத்தில் போர்வெல்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

*நகர்ப்புற கழிவு நீரை சுத்திகரித்து அந்த நீரைப் பயன்படுத்தி தரிசு நிலங்களில் வேளாண் காடுகளை உருவாக்கி... புவி வெப்பமயமாதலைக் குறைக்க வேண்டும்.

*வாகன எரிபொருட்களில் எத்தனால் கலக்க அனுமதி கொடுக்க வேண்டும். கரும்பு ஆலைகளில் தயாரிக்கப்படும் எத்தனாலை இப்படிப் பயன்படுத்தினால், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.

*எத்தனால் தயாரிப்பதற்கான விளைபொருட்களை அரசாங்கமே விவசாயிகளிடம் ஒப்பந்த முறையில் பயிரிட வைத்து விவசாயிகளுக்கு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்த வேண்டும்.

*சூரிய மின் உற்பத்திக்கு உதவும் வகையில்... தேவையான உபகரணங்களுக்கு 100% மானியம் வழங்க வேண்டும்.

*இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்தவர்களை, ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வைக்காமல் உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும். தோட்டத்தில் மின் கம்பங்கள் நட வேண்டியிருந்தால், அதற்கு விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது.

*திண்டுக்கல் காந்திகிராம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் மூலிகைச் சாறுகளைக்கொண்டு இரண்டு வண்ணங்களுக்கு மட்டுமே இயற்கை சாயம் கண்டுபிடித்து உள்ளார்கள். அனைத்து வண்ணங்களுக்கும் இயற்கைச் சாயம் கண்டுபிடிக்கும் ஆய்வுக்கு உதவ வேண்டும்.

*பல ஆண்டுகள் பழமையான சாலையோர மரங்கள், விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்படுகின்றன. இதைத் தடுக்க வேண்டும். மரங்களை வெட்டாமல் மரங்களுக்கு இருபுறமும் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*சுற்றுச்சூழலைக் காக்கும் விதத்தில் மிதிவண்டிகள் பயன்பாட்டை அதிகரித்து... வாரம் ஒரு நாள் மிதி வண்டி பயன்படுத்துவதைக் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

*கால்நடைகளுக்கு முழுமையான இலவசக் காப்பீடு திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

*கால்நடைகளுக்கான கடன் வசதிகள் எளிமையாக்கப்பட வேண்டும். மானியத்துடன் கூடிய கடன் வழங்க நடவடிக்கை வேண்டும்.

*பால் பொருட்கள் இறக்குமதியைக் குறைத்து... உள்நாட்டு உற்பத்திப் பொருட்களுக்கு விலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

*விளைபொருட்கள் இறக்குமதியை தடை செய்து உள்நாட்டில் உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதி செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

*அதிக கால்நடைகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பண்ணையிலேயே அரசு மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

*விதைத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, தாலூகாக்கள் தோறும் விதை வங்கிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

*தனியார் நிறுவனங்களில் ஏமாறாமல் இருக்க... வேளாண் விரிவாக்க மையங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் பருவத்துக்கேற்ற அனைத்து விதமான விதைகளும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

*அனைத்து பயிர் சாகுபடிக்கும் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க வேண்டும். 50% மானியம் வழங்க வேண்டும்.

*பயிர்க் காப்பீட்டை அரசே செலுத்த வேண்டும். இழப்பீடு வழங்கும்போது, ஃபிர்கா அடிப்படையிலான கணக்கெடுப்பைத் தவிர்த்து ஒவ்வொரு வயல் வாரியான கணக்கெடுப்பை எடுக்க வேண்டும்.

*அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து, அந்த விலையில் கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

*அனைத்து மாவட்டங்களிலும் கொப்பரைக்கு கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்.

*தாலூகா வாரியாக குளிர்பதன நிலையங்கள், பதப்படுத்தி மதிப்புக் கூட்டும் நிலையங்கள் அமைக்க வேண்டும்.

*நிலங்களில் உள்ள பயிர்கள், மரங்கள் போன்றவற்றை ஆண்டுதோறும் வருவாய் பதிவேட்டில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*வங்கிக்கடன்கள், மானியத்திட்டங்கள் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற சான்றிதழ்களுக்காக விவசாயிகளை அலைய விடாமல்... அரசாங்கமே இவற்றை சரிபார்த்து மானியத்தை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

*வேளாண் பொறியியல் துறை மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் ஊராட்சி மூலமாகவே வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு விட ஏற்பாடு செய்ய வேண்டும்.

*அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் கழிவுகளில் இருந்து இடுபொருட்கள் தயாரிக்கும் ஆலைகளை நிறுவி விவசாயிகளுக்கு குறைந்த விலையில் இடுபொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

*வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயற்கை விவசாயத்துக்கு தனி பட்டப்படிப்பு ஏற்படுத்த வேண்டும்.

*இயற்கை விவசாயத்துக்கான ஆராய்ச்சிகளுக்கும் நிதி ஒதுக்க வேண்டும்.

*காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் உள்ள நச்சுக்களை சோதனை செய்யும் ஆய்வகங்களை மாவட்டம்தோறும் நிறுவ வேண்டும்.

*ஆறுகளில் மண் அள்ளப்படுவது தவிர்க்கப்பட்டு கடைமடை வரை பாசன வசதி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

*பாசனத்துக்கு மட்டும் பயன்படும் வகையில் அணைகள், தடுப்பணைகள், கால்வாய்கள் உருவாக்கப்பட வேண்டும்.

*மாவட்டம்தோறும் அரசாங்கமே நாற்றுப் பண்ணைகளை அமைத்து மானிய விலையில் செடிகளை வழங்க வேண்டும்.

*அனைத்து வகையான காளான்கள் வளர்ப்பதற்கும் வங்கிக்கடன், மானிய வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.

*ஓவ்வொரு நகரத்திலும் விளைபொருள் விற்பனை அங்காடியை அரசாங்கமே நடத்த வேண்டும். அதன் மூலம், நுகர்வோருக்கும் விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

*மரபணு மாற்றுப் பயிர்களுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

*தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகளின் விற்பனை, பயன்பாடு ஆகியவற்றை முற்றாகத் தடுக்க வேண்டும்.