*தானியங்கி வசதி

*வயலில் வெளிச்சமும் கிடைக்கும்

*8 மணி நேரம் இயங்கும்

சூழல் மாசுபாடு மற்றும் மின்சார தட்டுப்பாடு ஆகிய காரணங்களால், மாற்று சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக ‘சோலார் பவர்’ எனப்படும் சூரிய ஒளி மின் சக்தியின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. விவசாயத்திலும் சூரிய ஒளி மின் சக்தியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. விவசாயத்தில் பாசன மோட்டார்களை இயக்க மட்டும்தான் தற்போது சூரிய ஒளி மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது. இதே சக்தியில் இயங்குமாறு சோலார் விளக்குப்பொறி ஒன்றை வடிவமைத்துள்ளார், திருநெல்வேலி மாவட்டம், கடையம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர், டேவிட் ராஜா பியூலா. இவர் விவசாயிகளுக்காக சிறு சிறு கருவிகளை வடிவமைக்கும் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

விவசாயிகளுக்கு சோலார் விளக்குப் பொறி குறித்து விளக்கிக் கொண்டிருந்த டேவிட் ராஜா பியூலாவைச் சந்தித்தோம்.

“விவசாயிகளை சந்திக்கிற சமயங்கள்ல எல்லாம்... அவர்களது தேவை, நடைமுறைப் பிரச்னைகள் குறித்து கேட்பேன். அப்போ விவசாயிகள் சுட்டிக்காட்டுற விஷயங்களுக்கான தீர்வுகளை யோசிச்சு அவங்களுக்கு சொல்லிக் கொடுப்பேன். கடையம் சுற்றுவட்டாரத்துல கத்திரிக்காய் சாகுபடி அதிகம். கத்திரிக்காயில் காய்ப்புழுத்தாக்குதலால மகசூல் குறையுதுனு விவசாயிகள் சொன்னாங்க. அதனால், காய்ப்புழுவைக் கட்டுப்படுத்துறதுக்காக ‘சார்ஜ் ஏத்தி உபயோகப்படுத்துற மாதிரி பேட்டரியில் இயங்குற ஒரு விளக்குப்பொறியை வடிவமைச்சேன். அது நல்லா இயங்குனாலும், மின்சார தட்டுப்பாடு அதிகமா இருந்ததால விளக்குப் பொறியை சார்ஜ் ஏத்துறதுல சிக்கல்கள் இருக்குனு விவசாயிகள் சொன்னாங்க. அதனாலதான், சோலார் பவர்ல இயங்குற இந்த விளக்குப்பொறியை வடிவமைச்சேன்” என்ற டேவிட் ராஜா பியூலா விளக்குப்பொறி குறித்தும் அது இயங்கும் விதம் குறித்தும் விளக்க ஆரம்பித்தார்.

“அரை ஏக்கர் அளவு பரப்புக்கு பயன்படுற அளவுல இதை வடிவமைச்சுருக்கேன். இதன் உயரம் 8 அடி. 50 வாட்ஸ் திறன்ல இது இயங்கும். இதுல 25 வாட்ஸ் மின்சார விளக்கு இருக்கு. இதுக்கு 35 ஏ.ஹெச் பேட்டரி தேவைப்படும். பகல் நேரத்துல சூரியவெளிச்சம் மூலமா மின்சாரம் தயாரிக்கப்பட்டு பேட்டரி சார்ஜ் ஆயிடும். இருட்டாக ஆரம்பிச்சதும்... தானாவே லைட் எரிய ஆரம்பிச்சுடும். காலையில தானாகவே ஆஃப் ஆகிடும். இந்த விளக்குப்பொறி தொடர்ந்து 8 மணி நேரம் இயங்குறதால இரவு முழுக்கவே எரியும். பூச்சிகள் அழியுறதோட வயல்லயும் வெளிச்சம் இருந்துட்டே இருக்கும். அதனால, இரவுல தண்ணீர் பாய்ச்சுற விவசாயிகளுக்கும் உதவியா இருக்கும். இந்தப்பொறியில், விளக்குக்கு கீழ ஒரு எவர்சில்வர் தட்டு இருக்கும். அதுல 150 மில்லி விளக்கெண்ணெய் ஊற்றி, சின்ன துண்டு காதிசோப்பை போட்டு வைக்கணும். விளக்கு வெளிச்சத்துக்கு வர்ற பூச்சிகள் இதுல மாட்டிக்கும். வாரத்துக்கு ஒரு முறை விளக்கெண்ணையை மாத்த வேண்டியிருக்கும்” என்ற டேவிட் ராஜா பியூலா நிறைவாக,

“இந்த விளக்குப்பொறியை அமைக்க 20 ஆயிரம் ரூபாய் செலவாகும். தேவையைப் பொறுத்து இதை விடக் குறைவான செலவுலயும் விவசாயிகள் அமைச்சுக்க முடியும். அடுத்து விவசாயிகளோட தேவைகளுக்காக சோலார் பவர்ல இயங்குற ஒரு வாகனத்தை வடிவமைக்கிற முயற்சியில ஈடுபட்டிருக்கேன்” என்றார். வாழ்த்துக்கள் டேவிட் ராஜா பியூலா!

தொடர்புக்கு,
டேவிட் ராஜா பியூலா,
செல்போன்: 94862-85704.

சோலார் பவர் மோட்டார்!

கடையம் வட்டாரம், பாறைகள் அதிகம் நிறைந்த பகுதி. பாறைகளில் தேங்கி நிற்கும் (கல்வெட்டாங் குழிகள்) தண்ணீரை டீசல் மோட்டார் மூலம் எடுத்து காய்கறி விவசாயம் செய்து வருகிறார்கள் பல விவசாயிகள். டீசல் செலவை மிச்சப்படுத்தும் வகையில்... எளிதாக இடம் மாற்றிக் கொள்ளக்கூடிய சோலார் பவர் மோட்டாரை வடிவமைத்திருக்கிறார், டேவிட் ராஜா பியூலா.

அது குறித்துப் பேசியவர், “சின்ன விவசாயிகள் பாறைகள்ல தேங்கியிருக்குற தண்ணீரை எடுக்க டீசல் மோட்டாரைப் பயன்படுத்துறப்போ டீசலுக்காக நிறைய பணத்தை செலவழிக்க வேண்டியிருந்தது. அவங்களுக்காகத்தான் இந்த சோலார் பவர் மோட்டார். பொதுவா பாசனத்துக்கு சோலார் மோட்டார் பொருத்தினா... சோலார் பேனல்களை நிலையா பொருத்த வேண்டியிருக்கும். ஆனா, இதுல அப்படி கிடையாது. இதை எங்க வேணாலும் எடுத்துட்டுப் போகலாம். இந்த மோட்டார் 8 மணி நேரம் வரை ஓடும். 25 அடி ஆழத்தில் இருந்து தண்ணீரை இறைக்கும். இது மூலமா, 50 சென்ட் பரப்புக்கு சொட்டுநீர், தெளிப்பு நீர் கருவிகளை இயக்க முடியும். இதை அமைக்க 45 ஆயிரம் ரூபாய் செலவாகும்” என்றார்.