கடந்த ஆண்டின் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் தமிழகத்தை நிலைகுலைய வைத்தது போன்ற வெள்ளப் பேரழிவு, எதிர்காலத்தில் நிகழாவண்ணம் தடுக்கும் வகையில் ‘நிலம்.. நீர்.. நீதி’ என்ற பெயரில் நீர் நிலைகளைக் காக்க பல்வேறு பணிகளை கையில் எடுத்து செயல்படுத்தி வருகிறது.

இந்தப் பணிகளின் ஒரு கட்டமாக ‘நிலம்.. நீர்.. நீதி’ சார்பில், இந்திய சுற்றுச்சூழலியலாளர்கள் அமைப்பு (EFI), லயோலா கல்லூரியின் பூச்சியியல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ‘மக்கள் கருத்துப் பகிர்வுக் கூட்டம்’ சென்னை லயோலா கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சென்னையைச் சுற்றியுள்ள பள்ளிக்கரணை, மேடவாக்கம், கொளத்தூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய லயோலா கல்லூரியின் பூச்சியியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை. இன்னாசிமுத்து, “டைம்ஸ் பத்திரிகை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டிருந்த அறிக்கையில் மூன்றாம் உலகப் போர் தண்ணீரால்தான் உருவாகும் என்று கூறியிருந்தது. அவ்வப்போது பெய்யும் மழையைக் கூட சேர்த்து வைக்க முடியாத சூழலில் நாம் இருக்கிறோம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க ஒரு வழித்துணையாக அமையும். அதுவும் விகடன் குழுமம் இதுபோன்ற பணிகளை கையில் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. அவர்களோடு லயோலா கல்லூரியும் இணைந்து நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

கூட்டத்தை தலைமைத் தாங்கி நடத்திய இ.எஃப்.ஐ.யின் ஒருங்கிணைப்பாளர் அருண் கிருஷ்ணமூர்த்தி, “இந்த ஆண்டின் தட்பவெப்ப நிலை கடந்த ஆண்டுகளைவிட 4 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக உள்ளது. அதைப் பற்றி நாம் அக்கறையில்லாமல் இருக்கிறோம். இங்கு, இப்போது இருக்கும் கூட்டத்தினரில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மிகவும் குறைவு. நீர் நிலைகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் சமுதாயப் பொறுப்புணர்ச்சி நம்மில் அனைவரிடமும் இருக்க வேண்டும், இவை அனைத்தையும் பற்றிப் பேசி, உங்களுடைய சிந்தனைகளை ஒருங்கிணைக்கவே இந்த கருத்துப் பகிர்வுக் கூட்டம். இங்கே சிறுதுளியாக கூடியிருப்பவர்களே நாளை பெருவெள்ளமாக மாறப் போகிறோம்” என்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கணேசன் பேசும்போது, “மேற்கு மாம்பலத்தில் கோதண்ட ராமர் கோயிலுக்குப் பின்னால் ஒரு குளம் பராமரிப்பற்று இருக்கிறது. சில அமைப்புகளோடு இணைந்து தூர்வார முயற்சி செய்தோம். மக்கள் நெரிசல் மிகுந்த இதுபோன்ற இடத்தில் இவ்வளவு பெரிய குளம் இருக்கிறதா? என வியந்து பார்க்கிறார்கள். இந்த பகுதி மக்களும் இது கோவிலுக்குச் சொந்தமானதா அல்லது மாநகராட்சிக்கு சொந்தமானதா என்ற குழப்பம் இன்றும் உள்ளது. பக்கத்தில் கழிப்பிடங்கள் இருந்தும் குளத்தையே நிறைய பேர் அசுத்தம் செய்து வருகிறார்கள். இதுவரை 1 டன் அளவு குப்பைகளை இந்தக் குளத்தில் இருந்து தன்னார்வ அமைப்புகளோடு சேர்ந்து தூர்வாரினோம். இதை முழுமையாக மீட்டெடுக்க உதவிகள் தேவை” என்று கோரிக்கை வைத்தார்.

மூவரசம்பட்டுலிருந்து வந்திருந்த ஜி.பி.பாபு பேசும்போது, “ஞாயிற்றுக்கிழமைகளில் ‘லேக் வாக்’ என்று நீர் நிலைகளுக்கு மக்களை அழைத்துச் சென்று விழிப்பு உணர்வு கூட்டங்களை நடத்துகிறோம். தாம்பரத்தில் இருந்து ஆலந்தூர் வரை 40 நீர் நிலைகள் உள்ளன. சிலவற்றுக்கு அருகில் வேலிக்கத்தான் மரங்கள் அதிகமாக இருக்கின்றன. அவற்றை கையால், கத்தியால் வெட்டி வீச முடியாது. அதனால் ஜே.சி.பி.யை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து அகற்றுகிறோம். நீர் நிலைகளில் என்றும் குப்பை போடாதீர்கள் என மக்களிடம் கோரிக்கை வைக்கிறோம். இதுபோன்ற பணிகளை செய்து வருவதால், நாங்களும் நிலம்.. நீர்.. நீதி.. பணிகளில் இணைய ஆர்வமாக உள்ளோம்” என்றார்.

இதேபோல நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே ‘நிலம்... நீர்... நீதி...’ பணிகளுக்கு ஆதரவுக் கரங்களை நீட்டுவதாக உறுதியளித்தனர்.