இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படும் பெட்டித் தேனைவிட, இயற்கையாகக் கிடைக்கும் மலைத்தேனுக்கு எப்போதும் மவுசு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதற்குக் காரணம் அதில் இருக்கும் மருத்துவக் குணங்களும், தரமும்தான். பாறை இடுக்குகளிலும், மரக்கிளையிலும் கூடு கட்டி தேனைச் சேமித்து வைக்கும் தேனீக்களை, இரவு நேரங்களில் உயிரை பணயம் வைத்து, புகை போட்டு அழித்துத் தேன் எடுப்பதுதான் நடைமுறையில் இருக்கும் பழக்கம். இந்நிலையில், தமிழகத்திலேயே முன்னோடியாக ஜவ்வாதுமலைப் பகுதிகளில் ஒரு சிலர் மட்டும்... தேனீக்களைக் கொல்லாமல், பகல் நேரங்களிலே தேன் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சிலுசிலு காற்று, சிறகடிக்கும் பறவைகள், மலை முகடுகளில் மேயும் ஆடு-மாடுகள் என அழகாகக் காட்சிக் கொடுக்கும் ஜவ்வாதுமலையில் உள்ள நம்மியம்பட்டு என்ற கிராமத்துக்கு அருகே இருக்கும் மலைக்குன்றுகளில் தேன் சேகரித்துக் கொண்டிருந்த சரணாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த குமாரிடம் பேசினோம்.

‘‘தாத்தா, அப்பானு பாரம்பரியமா தேன் எடுத்து, விற்பனை செய்றோம். 15 வயசுல இருந்தே தேன் எடுக்குறதுக்கு எங்க அப்பாகூடப் போவேன். அப்படியே கொஞ்ச கொஞ்சமா பாறை இடுக்கு, நீர்மருது மரம், வாகை மரம்னு உயரமான மரத்துல ஏறி தேன் எடுக்கக் கத்துக்கிட்டேன்.

இந்த மலைபகுதில அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலம் மட்டும்தான் இங்க பலருக்கும் இருக்கு. அதுல சாமை, கேழ்வரகு மாதிரியான தானியத்தை விதைப்பு செய்றோம். நிலத்துல வருஷம் முழுக்க வேலை இல்லாததால... ஆண்கள் ஒரு குழுவா சேர்ந்துகிட்டு, ராத்திரி நேரத்துல மரம், பாறை இடுக்குல இருக்கிற தேன் அடைகளை எடுக்கப் போவோம். இலை, வெக்கெ பில்லு(வைக்கோல்) வைச்சு கட்டின ‘தீ’ பந்தத்துல இருந்து புகையைப் போட்டு, தேனீக்களை விரட்டிட்டு, அடையை அப்படியே வெட்டி எடுத்திட்டு வந்திடுவோம். தேன் இருக்கிற அடையை மட்டும் வைச்சுகிட்டு, மெழுகு இருக்குற பகுதியை தூக்கி போட்டிருவோம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் இப்படிதான் தேன் எடுத்துட்டிருந்தோம்.

பிறகு, சீனிவாச சேவைகள் அறக்கட்டளை (டி.வி.எஸ் குரூப்) காரங்க, பகல் நேரத்துல எப்படித் தேன் எடுக்கறது, தேனீக்களை அழிக்காம... தேன் இருக்கிற அடையை மட்டும் எப்படி எடுக்குறதுன்னு தொழில்நுட்பத்தைச் சொல்லிக் கொடுத்து, அதுக்குத் தேவையான உடை, கயிறு ஏணி, சில்வர் டிரம், கத்தினு எல்லாம் கொடுத்தாங்க.

அதுக்குப் பிறகு, பகல்லே தேன் அடைகளைத் தேடி எடுக்குறோம்.

ஈக்களைச் சாகடிக்குறதில்லை. தேன் இல்லாத மெழுகுப் பகுதியை அப்படியே விட்டர்றதால, தேனீக்கள் அதே கூட்டுல தேனை சேமிக்குது.

இரவுல தேன் எடுக்கப் போகும்போது பாம்பு, தேள், விஷப்பூச்சிகள் தாக்குதல் இருக்கும். அதுமட்டுமில்லாம, 10 அடை வரைக்கும்தான் அறுக்க முடிஞ்சது. ஆனா, இப்ப அந்தப் பிரச்னை இல்ல. 20-25 அடை வரைக்கும் அறுக்குறோம். முன்னாடி தேனை எடுத்ததும் கையைப் போட்டு பிழிவோம். அந்தத் தேனை காய்ச்சி வைக்கலன்னா, 6 மாசத்துல கெட்டுப் போயிடும். ஆனா, இப்ப எடுக்குற முறையில் காய்ச்சாமலே ஒரு வருஷம் வரைக்கும் வைச்சிருக்கலாம். ஒவ்வொரு அடையில இருந்தும் 4 கிலோவுல இருந்து 10 கிலோ வரைக்கும் தேன் கிடைக்கும். அதுல எல்லோரும் பங்கிட்டு எடுத்துகிட்டா... ஒரு ஆளுக்கு 3 கிலோவுல இருந்து, 5 கிலோ அளவுக்குக் கிடைக்கும். ஒரு கிலோ 150 ரூபாய்னு, அக்மார்க் முத்திரையோட விற்பனை செய்யுறோம்’’ என்றார்.

படவேடு கிராமத்தில் இருக்கும் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை (டி.வி.எஸ் மோட்டார் குரூப்) தொண்டு நிறுவனத்தின் கள இயக்குநர் கிருஷ்ணனிடம் பேசினோம்.

‘‘ஜவ்வாது மலை வாழ் மக்களுக்கு ‘அறிவியல் முறையில்’ தேன் சேகரிக்கும் பயிற்சியை ‘டிரைப்பீடு’ (Tribal Co-Operative Marketing Development Federation of India Limited ) உதவியோடு கொடுத்தோம். இந்த முறையில் ஈக்கள் அழிவதில்லை. தேன் இருக்கும் பகுதியை மட்டும் வெட்டி எடுத்து வரும்போது தேவையில்லாம ஈக்களோ... மெழுகு பகுதியோ அழிவதில்லை.

இதனால், இரண்டே மாதங்களில் அந்தக்கூடு வளர்ந்து தேன் சேகரிக்கும் அளவுக்கு மாறிவிடுகிறது.

இந்த முறையில் தேன் எடுப்பதற்கு ஜவ்வாதுமலையில் 500 நபர்களுக்குப் இதுவரையில், பயிற்சி கொடுத்திருக்கிறோம். இன்னும் நிறைய பேருக்கு பயிற்சி கொடுப்பதற்குத் தேவையான முயற்சியில் இருக்கிறோம்’’ என்றார்.

தொடர்புக்கு,
சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை
தொலைபேசி: 04181-248279.