உலக பூமி தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 22-ம் தேதி காலை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில்... நானூறுக்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் செவிலிய மாணவர்கள் விழிப்பு உணர்வு மனித சங்கிலி அமைத்து கைகோத்து நின்றனர்.

பூமி தினத்தை முன்னிட்டு... கல்லூரி முதல்வர் எட்வின் ஜோ மற்றும் பேராசிரியர்கள் இணைந்து கல்லூரி வளாகத்தில், சரக்கொன்றை, அத்தி, வேம்பு போன்ற மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இதுகுறித்துப் பேசிய முதல்வர் எட்வின் ஜோ, “மக்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமன்றி, சமூக விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதும் மருத்துவர்களின் கடமைதான். இயற்கை மாசுபாட்டினால் அதிகம் பாதிக்கப்படுவது மனிதர்களின் உடல் நிலைதான். எனவே, நோய் வந்த பிறகு அதைக் குணப்படுத்துவதை விட இதுபோன்ற விழிப்பு உணர்வுப் பிரசாரம் மூலம் சமூக அளவில் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தவிர்த்து மனித உடல் நலத்தையும் பாதுகாக்க முடியும். அதனால்தான் இந்த விழிப்பு உணர்வு மனிதச்சங்கிலிக்கு ஏற்பாடு செய்தோம்” என்றார்.

அன்றைய தினத்தில் அக்கல்லூரி மாணவர்கள் அனைவரும் பொது போக்குவரத்து சாதனங்களை மட்டுமே பயன்படுத்தினர். காய்ச்சல் கொண்ட பூமிக்கு தற்காலிக குளிர்ச்சி அளிக்கும் வகையில்.. அன்று இரவு 9.00 மணி முதல் முதல் 9.05 வரை கல்லூரி விடுதியில் மின்சாரத்தை அணைத்து வைத்திருந்தனர்.

-யாழினி அன்புமணி

டிராக்டர் ஜப்தி...

வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்

‘மடியப் புடிச்சு கடனைக் கொடுத்திட்டு முடியப்புடிச்சு திருப்பி கேட்கிற உலகம் இது’னு கிராமங்களில் சொல்வார்கள். அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… வங்கிகளுக்கு சரியாகப் பொருந்துகிறது. வங்கிகள், கடன்களைக் கொடுத்துவிட்டு குண்டர்கள் மூலமும் போலீஸ் மூலமும் மிரட்டி வருவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.

சத்தியமங்கலம் பகுதியில் உள்ள செண்பகம் புதூர் விவசாயி வெள்ளியங்கிரி, அரியப்பம் பாளையம் விவசாயி நடராஜ் ஆகிய இருவரும், சத்தியமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி வேளாண் சேவைக்கிளையில் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் சில தவணைகளைக் கட்டத் தவறியதால்… வங்கி அதிகாரிகள், தனியார் நிறுவனம் மூலம் குண்டர்களை அனுப்பி, மிரட்டி இருவரின் டிராக்டர்களையும் பறிமுதல் செய்ததாகத் தெரிய வருகிறது. அதோடு, வங்கி நிர்வாகம் இந்த இரண்டு விவசாயிகள் மீதும் வழக்கும் தொடுத்துள்ளது.

வங்கியின் இந்த அராஜகச் செயலைக் கண்டித்து… ‘தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றோர் நலச்சங்கம்’ சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வங்கி முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். டிராக்டர்களை ஒப்படைக்காவிட்டால் மாநிலம் முழுவதும் அனைத்து வங்கிக்கிளைகள் முன்பும் போராட்டம் நடத்துவோம் என்று இச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

-ஜி.பழனிச்சாமி