வடமாநிலங்களில் அடுத்தடுத்து அரங்கேறி வந்த தற்கொலை சம்பவங்கள், தற்போது தமிழ்நாட்டிலும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அரியலூரைச் சேர்ந்த விவசாயி அழகர், டிராக்டர் கடன் பிரச்னையில் சிக்கி தற்கொலை செய்து கொண்டதில் ஏற்பட்ட அதிர்வில் இருந்து நாம் மீள்வதற்குள்ளாகவே... தமிழகத்தில் இன்னொரு விவசாயியின் தற்கொலை நிகழ்வு அரங்கேறிவிட்டது.

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம், வேப்பம்பள்ளம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி. கடின உழைப்பாளி, முன்னோடி விவசாயி என்று பெயர் பெற்ற ராமசாமி, பூச்சிக்கொல்லி விஷத்தைக் குடித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.

மீள முடியாத சோகத்தில் இருந்த ராமசாமியின் ஒரே மகன் ஆனந்தகுமாரை சற்று ஆற்றுப்படுத்திய பிறகு பேச ஆரம்பித்தார்.

“வேலை விஷயமா ஓசூருக்கு அடிக்கடி போவேன். அந்தப் பகுதியில நடக்கிற பசுமைக்குடில் விவசாயத்தைப் பார்த்து எனக்கும் ஆர்வம் வந்துடுச்சு. அது குறித்து பசுமைக்குடில் விவசாயி கிருஷ்ணகுமார்ங்கிறவர்ட்ட அப்பாவும் நானும் பேசுனப்போ... ‘குறைஞ்ச நிலப்பரப்புல, குறைஞ்ச தண்ணீர்லயே அதிக மகசூல் எடுக்கலாம். 50% மானியமும் கிடைக்கும்’னு சொன்னார். சென்னையில் இருக்கிற தேசிய தோட்டக்கலை வாரிய அலுவலகத்துக்கு பதிவுக்கட்டணமா 10 ஆயிரம் ரூபாய்க்கு டி.டி எடுத்துக் கொடுத்து மானியம் கேட்டு விண்ணப்பம் கொடுத்தோம்.

நாங்க, 2 ஏக்கர் பரப்புல பசுமைக்குடில் அமைக்கலாம்னு இருந்தோம். அதுக்கான முதலீடா 1 கோடியே 10 லட்சம் ரூபாய் தேவைப்பட்டுச்சு. எங்க குடும்பத்துக்குச் சொந்தமான ஆறரை ஏக்கர் நிலத்தை அடமானமா கொடுக்கிறோம்னு சொல்லி கோயம்புத்தூர், சரவணம்பட்டியில் இருக்கிற கார்ப்பிரேஷன் பேங்க்ல கடன் கேட்டப்போ, 70 லட்சம் ரூபாய்தான் கிடைச்சது. மீதி பணத்தை வெளியில் கடன் வாங்கி, தனியார் நிறுவனம் மூலமா பசுமைக்குடில் அமைச்சோம். எல்லா வேலைகளும் முடிச்சு பேங்க்ல என்.ஓ.சி வாங்கி தோட்டக்கலை வாரியத்துக்கு அனுப்பிட்டோம். மானியத்துக்காக சென்னைக்கு பல தடவை அலைஞ்சும் இழுத்துக்கிட்டே இருந்தாங்களே ஒழிய... பணம் வர்ற மாதிரி தெரியலை.

முதல் பயிரா குடமிளகாய் போட்டதுல சரியான விளைச்சல் இல்லை. அடுத்து தக்காளி போட்டோம். விளைச்சல் இருந்தது. விலையில்லை. இதுக்கே லட்சக்கணக்கான ரூபாய் செலவாகிடுச்சு. பேங்க்ல தவணை கேட்க ஆரம்பிச்சாங்க. வெள்ளாமையும் கைகொடுக்காம போனதால ரொம்ப சிரமமாகிடுச்சு. அப்படியும் சிரமப்பட்டு மூணு தவணை கட்டிட்டோம்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி மானியம் என்னாச்சுனு தோட்டக்கலை ஆபீஸிக்கு போன் பண்ணி

கேட்டப்போ, ‘இங்க நிதி இல்லை. அதில்லாம நீங்க 50 லட்ச ரூபாய்க்கு மேல திட்ட மதிப்பீடு இருக்குறதால ஹரியானாவில் இருக்குற தேசிய தோட்டக்கலை வாரிய தலைமை அலுவலகத்துலதான் மானியம் வாங்க முடியும்’னு சொல்லிட்டாங்க.

அடுத்தடுத்த தவணைகளை எங்களால கட்ட முடியலை. தவணை, வட்டி, அபதார வட்டி எல்லாம் சேர்த்து உடனே கட்டச்சொல்லி பேங்க்ல ரொம்ப நெருக்க ஆரம்பிச்சுட்டாங்க. கட்டலைன்னா சொத்தை ஜப்தி செய்ய வேண்டியிருக்கும்னு பேங்க்ல சொல்லவும் அப்பா ரொம்ப மனம் உடைஞ்சு போயிட்டார்.

‘62 வயசு வரை பைசா கடனில்லாம வெள்ளாமை செஞ்சுட்டுருந்தேன். மானியத்துக்கு ஆசைப்பட்டு ஏமாந்துட்டேனே. தலைமுறை தலைமுறையா அனுபவிச்சுட்டு வந்த சொத்து ஏலத்துல போனா, நடுத்தெருவுக்கு வர வேண்டியதுதான்’னு புலம்ப ஆரம்பிச்சுட்டார். போன 14-ம் தேதி வீட்டுல யாரும் இல்லை. அன்னிக்கு அவர் பூச்சிக்கொல்லி விஷத்தைக் குடிச்சு இறந்து போயிட்டார்” என்று சொல்லி குலுங்கி அழ ஆரம்பித்து விட்டார்.

இது குறித்துப் பேசிய உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் செல்லமுத்து, “ராமசாமியின் தற்கொலைக்கு முழுக்காரணம், மானியத்தை உடனடியாக வழங்காததுதான். அதோடு, புதிய தொழில் நுட்பமான பசுமைக்குடில் விவசாயத்துக்குள் வருகிற விவசாயிகளுக்கு... மாதம் ஒரு முறையாவது நேரில் வந்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆலோசனைகள் சொல்ல வேண்டும். முறையான ஆலோசனை இருந்தால் அவருக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டிருக்காது.

இதேபோல எண்ணற்ற விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு தற்கொலை தீர்வல்ல. ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் பாக்கி வைத்திருப்பவர்களெல்லாம் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது... சில லட்சங்களுக்காக விவசாயிகள் இப்படி தவறான முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்ககாக குரல் கொடுத்துப் போராடத்தான் விவசாய சங்கங்கள் இருக்கின்றன. ராமசாமிக்கு கிடைக்க வேண்டிய மானியத்தை பெற எங்கள் சங்கம் சார்பாக, அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என்றார்.

சரவணம்பட்டி, கார்ப்ரேஷன் வங்கி கிளை மேலாளர் ஜெகதீசனிடம் பேசியபோது, “பசுமைக்குடிலை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கி விட்டோம். மானியத்தை கேட்டு வாங்குவது அவரது வேலை. பல தவணைகள் நிலுவையில் இருந்ததால் நேரில் சென்று கேட்டோம். ‘விளைச்சல் சரியில்லை’ என்றார். உடனே, ‘இந்த போக விளைச்சல் நஷ்டம் என்று உள்ளூர் வேளாண்மை அலுவலகத்தில் ஒரு கடிதம் வாங்கி கொடுங்கள். 6 மாதம் வட்டியில்லாமல் தவணை தேதியை தள்ளிப்போடுகிறேன்’ என்று நானே யோசனை சொன்னேன். ஆனால், அவர்கள் அதைச் செய்யவே இல்லை. எங்கள் கிளையில் இப்படி கடிதம் கொடுத்த சில விவசாயிகளுக்கு தவணையை தள்ளிப்போட்டிருக்கிறோம்.

வங்கியில் கடன் தவணை நிலுவையிலிருந்தால் அதைக் கேட்பது வங்கி ஊழியர்களின் வேலைதான். அதற்காக தற்கொலை என்பது தவறான முடிவு. விவசாயிகள் இப்படி செய்யக்கூடாது. நேரில் வந்து தைரியமாக பேசினால், மேலதிகாரிகளிடம் பேசி நாங்களும் சில சலுகைகளைப் பரிந்துரைக்க முடியும்” என்றார்.

‘‘உடனே மானியம் கிடைக்காது..!’’

தேசிய தோட்டக்கலை வாரியத்தின் துணை இயக்குநர் ராதாகிருஷ்ணனின் கவனத்துக்கு இப்பிரச்னையைக் கொண்டு சென்றபோது, “தேசிய தோட்டக்கலை வாரியம், காய்கறி மற்றும் பழப்பயிர் விவசாயிகளை ஊக்கப்படுத்த மானியம் வழங்கி வருகிறது. பசுமைக்குடிலுக்கு ‘எளிதாக மானியம் கிடைக்கும்’ என்று, பசுமைக்குடில் அமைத்துக் கொடுக்கும் நிறுவனங்கள் தவறாக பிரசாரம் செய்து வருகிறார்கள். பசுமைக்குடில் அமைத்து முறையாக செயல்பட்டு, வங்கிக் கடனையும் சரியாக செலுத்தும் விவசாயிகளுக்குத்தான் மானியம் வழங்கப்படும். வங்கிக்கடன் செலுத்துவதில் குளறுபடி இருந்தாலோ, சரியான முறையில் பசுமைக்குடில் அமைக்காமல் இருந்தாலோ மானியம் வழங்கமாட்டோம்.

ஆனால், பசுமைக்குடில் அமைத்த மறு நாளே மானியம் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். அது தவறு. யாருடைய பேச்சையும் விவசாயிகள் நம்ப வேண்டாம். நேரடியாக விண்ணப்பித்தால் போதும். உரிய தகுதிகள் இருந்தால், நிச்சயம் சம்பந்தப்பட்ட வங்கி மூலம் மானியம் வழங்குவோம். ராமசாமி விஷயத்தில் என்ன நடந்துள்ளது என்று விசாரிக்க உத்தரவிடுகிறேன்” என்று அக்கறையோடு சொன்னார்.

இடைத்தரகர்கள்... உஷார்!

அன்னூர் வட்டார விவசாயிகள் சங்கத்தலைவர் சுந்தரமூர்த்தி,

“பசுமைக்குடில் விவசாயம் புதிய தொழில்நுட்பம்தான். அதற்கான 50 சதவிகித மானியமும் வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஆனால், இதிலும் சில இடைத்தரகர்கள் புகுந்து விட்டனர்.

இப்படிப்பட்டவர்கள்தான் விவசாயிகளுக்கு ஆசை காட்டி மோசம் செய்கிறார்கள். பசுமைக்குடில், மானியம், வங்கிக்கடன் போன்ற அனைத்து விஷயங்களையும் விலாவாரியாக எடுத்துச்சொல்லி... கடன், மானியம் அனைத்தையும் நாங்களே வாங்கித்தருகிறோம் என்று சொல்லி, ஒரு பெருந்தொகையை முன்பணமாக வாங்கிக்கொண்டு கம்பி நீட்டி விடுகிறார்கள். இதிலும் விவசாயிகள் உஷாராக இருக்க வேண்டும்” என்கிறார்.