வெங்காயம் அளவில் சிறியதாக இருந்தாலும், சில நேரங்களில் ஆட்சியையே ஆட்டம் காணச் செய்து விடும். ஆட்சியாளர்களையே அந்தப் பாடுபடுத்தும் வெங்காயம் விவசாயிகளை மட்டும் விட்டு வைக்குமா என்ன? சில நேரங்களில் வருமானத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தாலும், பல நேரங்களில் விலை இல்லாமல் விவசாயிகளை கண்ணீர் விட வைத்து விடுகிறது. அறுவடை முடிந்ததும் கிடைத்த விலைக்கு விற்பனை செய்யாமல், சேமித்து வைத்து, விலை அதிகரிக்கும் போது விற்பனை செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆனால், சேமித்து வைக்கும் வசதி இல்லாமல் பல விவசாயிகள் அந்த எண்ணத்தையே கைவிட்டு விடுகிறார்கள். இவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் குறைந்தசெலவில் வெங்காய சேமிப்புக் கலன் அமைக்க வழிகாட்டுகிறார், ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியையான அனுராதா.

‘‘நான் ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத்துறையில இணைப் பேராசிரியையா இருக்கேன்.

ஒரு புராஜக்ட்டுக்காக “கட்டுப்படுத்தப்பட்ட காற்றோட்ட வசதியுள்ள வெங்காய சேமிப்புக் கலன்” என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரையை டெல்லியில் இருக்கிற பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு, அனுப்பி இருந்தேன். போன வருஷம் என்னோட கட்டுரையைத் தேர்வு செஞ்சாங்க. உடனே, அது தொடர்பான தகவல்களைச் சேகரிச்சேன். புனேயில் இருக்கிற, வெங்காய ஆராய்ச்சி மையத்துக்குப் போய் பல செயல்முறைகளைத் தெரிஞ்சுகிட்டு வந்தேன். முதல்கட்டமா எங்க கல்லூரியிலேயே ஒரு ‘மாதிரித் திட்டம்’ செய்யலாம்னு முடிவு பண்ணினேன். வீட்டுத் தேவைக்கு 50 கிலோ வெங்காயத்தை சேமிக்கிற மாதிரி, ‘வீட்டு சேமிப்புக் கலனையும், ஆயிரம் முதல் 5 ஆயிரம் கிலோ வரையிலான வெங்காயத்தைச் சேமிக்கிற மாதிரி விவசாயிகளுக்கான சேமிப்புக் கலன்னு ரெண்டு விதமா அமைச்சேன்.” என்ற அனுராதா வெங்காய சேமிப்புக் கலன்களின் அமைப்பை பற்றி விளக்கினார்.

‘‘இரண்டு விதமான சேமிப்புக் கலன்களையும் இரும்புக் கம்பிகளால் செவ்வக வடிவக் வீட்டு கூண்டு போல அமைச்சிருக்கோம். சேமிப்புக் கலன், 4 அடிக்கு 3 அடி என்ற அளவில், தரையில் இருந்து, அரை அடி உயரத்தில் மர ரீப்பரை வெச்சு தளம் மாதிரி அமைச்சிருக்கோம். அதே உயரத்துல, அடுத்தது மூன்று லேயர்களை அமைச்சிருக்கோம். விவசாயிகளுக்கான சேமிப்புக் கலன், 10 அடிக்கு 10 அடி அளவில் தரையில் இருந்து மூன்று அடி உயரத்துக்கு மேல், மர ரீப்பர் மூலமா தளம் அமைச்சிருக்கோம். இதுல ஒரே ஒரு லேயர் மட்டும்தான் இருக்கும். விவசாயிகளுக்கான சேமிப்புக் கலனோட மேற்கூரையை அலுமினிய தகடால் அமைச்சிருக்கோம். சரியான காற்றோட்டம், சேமிப்புக் கலனை சுற்றியும் தண்ணி தேங்காத இடங்கள்லதான் இந்த வெங்காய சேமிப்புக் கலன்களை அமைக்கணும்.

வெங்காயத்தாளை பாதியளவுக்கு மட்டும் விட்டு, மீதியை வெட்டி எடுத்துட்டு, மூணு நாளைக்கு வெயில்ல காய வைக்கணும். அப்போதான் வெங்காயத்துல இருக்கிற ஈரப்பதம் ஆவியாகி, வெங்காயத்தோட ஒட்டிக்கிட்டு இருக்கும் மணலும் தனியா உதிரும். பிறகு, தோராயமா கால் கிலோ அளவுள்ள வெங்காயத்தை எடுத்து தாளோடு சேர்த்து மொத்தமா கட்டி, மர ரீப்பர் தளத்து மேல படுக்க வைக்கணும். முதல் ஒரு மாசத்துக்கு, ரெண்டு நாளைக்கு ஒரு முறை கட்டை திருப்பித் திருப்பி விடணும். ஒரு மாசத்துக்குப் பிறகு, 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் திருப்பி விட்டா போதும். என்னோட இந்த புராஜக்ட் வெற்றிகரமாக மாறியதால, கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாசக் கடைசியில ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பிச்சேன். அப்போதிலிருந்து ஈரோடு சுற்றுவட்டார விவசாயிகளுக்கு இந்த வெங்காய சேமிப்புக் கலன்களுடைய பயன்பாடுகளைப் பத்தி விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இதன் மூலமாக விவசாயிகள் எல்லா காலத்துக்கும் வெங்காயத்தைப் பயிரிட்டு, அதனை 3-4 மாசம் வரை கெட்டுப்போகாம பாதுகாக்க முடியும். இதனால நிலையான வருமானமும் கிடைக்கும்.

வீட்டு சேமிப்புக் கலன்களை அமைக்க 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரைதான் செலவாகும். விவசாயிகளுக்கான சேமிப்புக் கலனை அமைக்க, 70 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை செலவாகும். இந்த பணத்தை ஒரு வருஷத்துலயே எடுத்துடலாம்’’ என்றார் அனுராதா.

தொடர்புக்கு,
அனுராதா,
செல்போன்: 98426-59056

100 கிராம் வெங்காயத்தில் அடங்கியிருக்கும் சத்துக்கள்!

இந்தியா உலகளவில் வெங்காய உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. நம் நாட்டில், வருடத்துக்கு சராசரியாக 4.30 மில்லியன் டன் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ‘தினமும் 100 முதல் 150 கிராம் வெங்கயத்தை உணவில் சேர்த்து சாப்பிடுவது உடல்நலத்துக்்கு மிகவும் நல்லது’ என்கிறார்கள் மருத்துவர்கள்.