தென்னை வளர்ச்சி வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் ஆய்வுக்கூட்டம், அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 10 தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் கலந்து கொண்டன.

கூட்டத்தில், தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் பற்றிய விரிவான ஆய்வு நடைபெற்றது. தவிர, வாரியத்தின் திட்டங்கள், தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் எதிர்கால திட்ட வழிமுறைகள் ஆகியவை விரிவாகப் பேசப்பட்டன.

மகசூல், விவசாயிகளின் எண்ணிக்கை, அங்கீகரிக்கப்பட்ட பங்கு மற்றும் செலுத்திய மூலதனம், தென்னை மதிப்புக்கூட்டுப் பொருட்கள், பாரம்பர்ய பொருட்கள் மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆகிய காரணிகளைக் கொண்டு, தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களை ஆய்வு செய்ததில்... முதல் தரத்தில் பொள்ளாச்சி, கோயம்புத்தூர் தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களும், இரண்டாம் தரத்தில் உடுமலைபேட்டை நிறுவனமும், மூன்றாம் தரத்தில் மடத்துக்குளம் மற்றும் திண்டுக்கல் நிறுவனமும், நான்காம் தரத்தில் புதுக்கோட்டை, தேனி, வேலூர், மற்றும் திருப்பூர் நிறுவனங்களும் இடம் பிடித்துள்ளன. குறைவான தரத்தில் உள்ள தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள், தங்கள் தரத்தை உயர்த்திக்கொள்ள 3 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மலிவு விலையில் தாது உப்புக்கட்டி!

கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டியில் இயங்கி வரும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில்… கால்நடைகளுக்கான ‘தாது உப்புக்கட்டி’ மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கறவை மாடுகளுக்கு, தினசரி 40 கிராம் தாது உப்புக்கட்டி அளித்தால், பால் உற்பத்தி அதிகரிக்கும். இந்த தாது உப்புக்கட்டியில், 23 சதவிகிதம் கால்சியம், 12 சதவிதம் பாஸ்பரஸ், 6.5 சதவிகிதம் மக்னீசியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. சினை பிடிக்காத மாடுகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், சினை பிடிக்கும்.

தொடர்புக்கு, தொலைபேசி எண்: 0422-2669965

தடுப்பூசி போடும் பயிற்சி!

ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில்… ‘கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பயிற்சி’ ஒரு மாதம் நடக்க உள்ளது. இப்பயிற்சி எடுக்க விரும்புபவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 வயது முதல், 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மத்திய அரசின் நிதியுதவியுடன் இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. மையத்தில் விண்ணப்பம் பெற்று,அதனை பூர்த்தி செய்து, மார்பளவு புகைப்படம், மதிப்பெண் சான்று, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்துக் கொடுக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள், பரிசீலிக்கப்பட்டு தகுதி அடிப்படையில் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

தொடர்புக்கு, தொலைபேசி எண்: 0424-2291482.